அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 10 June 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 8 arrow யன்னல் காவியம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


யன்னல் காவியம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நளாயினி தாமரைச்செல்வன்.  
Tuesday, 03 August 2004



யன்னல்களும்
அதன் திக்குகளும்
அதனூடே
மாறி மாறித் தெரியும்
காட்சிகள் மட்டுமே
பழக்கப்பட்ட இந்த பூமியில்
வேகமாய் ஓடும் றெயிலைப்போல்
என் மனசும்
ஈழம் விரைகிறது
இப்படித்தான் நினைவுச்
சுரங்கத்தால் மட்டுமே
ஈழத்தை அடைகிறேன்.

சிந்திய குருதிகளுக்குள்
எத்தனை காவியங்கள்.
எழுகின்ற அலைகளுக்குள்
எத்தனை முகம் தெரியா உணர்வுகள்.
மார்பில் குண்டேந்தும் முன்னமே
இயமணை மந்திரிச்சு
சயனைற் குப்பிக்குள் அடைத்தவர்கள்.
இவர்களுக்கு மின்மினி
இல்லா இரவுகள் கூட
ஈழம் மிதந்துவரும்
கனவுகளைத்தான் தந்திருக்கிறது.
பயத்தை அல்ல.
வெடித்து சிதறியது
அவர்கள் உடல்கள் மட்டுமே.
ஆனால் அவர் தம் கொள்கைகள்
மற்றையோர் மனங்களில்
ஆழமாய் புதைந்து
ஆணிவேர் விடுகிறது.

வேகமாய் ஓடிய ரயில்
கண்ணின் பிடிதூரம்
மறையுமுன்பே
குழந்தையின் அம்மா எனும்
ஓசை செவிபாயும்
தபால்காரன் மணிச்சத்தம்
ஈழத்து சோகங்களை மட்டுமே
சுமந்து வரும் கடிதம்.
நலமேதும் விசாரிக்காமல்..
வேலை கணவன் குழந்தை
சம்பளக்கவர் என
மீண்டும் இயந்திர வாழ்க்கையுள்
ஐக்கியமாகிவிடுகிறோம்.
யன்னல்களுக்குள் அடங்கிப்போன
எம் வாழ்வு போல்
உணர்வுகளும்
அடங்கித்தான் போகிறது.

* 6-4-2004

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 10 Jun 2023 09:40
TamilNet
HASH(0x55e7db4c8270)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 10 Jun 2023 09:40


புதினம்
Sat, 10 Jun 2023 09:40
















     இதுவரை:  23720226 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1467 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com