அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலாக் காய்ந்த இரவு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஈழநாதன்  
Tuesday, 03 August 2004



நிலாக் காய்ந்த இரவொன்றில்
நீயும் நானும்
விழித்துக் கிடந்தோம்.

பாலர் வகுப்பிலிருந்து
பழகிய சிநேகிதம்
பருவத்தின் வளர்ச்சியில்
தானும் வளர்ந்து விட்டிருந்தது.

முதலாம் வகுப்பில்
பென்சில் இல்லா எனக்கு
உன்னதில் பாதியை
முறித்துத் தந்ததில்
ஆரம்பித்த நட்பு.

அன்று அந்த
வெள்ளவத்தைக் கடற்கரையில்
ஒரே குளிர்பானப் போத்தலை
இருவரும் பங்கிட்டு
பசியையும்
நட்பையும்
பரிமாறிக் கொண்டவரை
வளர்ந்து விட்டது.

அடுத்த நாள் காலை
ஏன்
அன்றிரவே
உனக்கோ
அல்லது எனக்கோ
அழைப்பு வரலாம்
மூட்டை முடிச்சுகளுடன்
புறப்படும் படி;
எனக் காத்திருந்தோம்.

யார் முதலில் போனாலும்
மற்றவனுக்கு உதவுவதென்ற
எமது தீர்மானத்திற்கு
சாட்சியாய்க் காய்ந்தது
நிலா!

நண்பனே
நீதான் முதலில்
புறப்பட்டுப் போனாய்.
வாயில் நுழையாத
ஏதோவொர்
உறைபனி தேசத்தூடு
ஐரோப்பா போக.

அதன் பின்னர்
நான் வந்து சேற்ந்துவிட்டேன்
இன்னோர் நாட்டுக்கு.
கூடவே வந்தது
அன்றைய நிலா!
இன்று கூட
நிலாக் காயும் இரவுதான்
நீ மட்டும் எங்கே?

ஆகக் குறைந்தது
உயிருடன் இருக்கிறாயா?

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  24782718 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5945 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com