அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow கருத்துக்கணிப்பு arrow இந்திய அரசின் செம்மொழி அறிவிப்பும், உலக அரங்கில் தமிழின் பரவலாக்கமும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இந்திய அரசின் செம்மொழி அறிவிப்பும், உலக அரங்கில் தமிழின் பரவலாக்கமும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.முகுந்தன்  
Thursday, 05 August 2004

"1918ஆம் ஆண்டு முதல் முன்வைக்கப்பட்ட தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற வேண்டும் என்ற கோக்கை 2004இல் நிறைவேறும் தருணத்தில் இது தொடர்பாகச் சிலவற்றைப் பொறுப்புடன் விவாதிப்பது தமிழர்கள் அனைவரது கடமை." -என்னும் முனைவர் துரையின் எதிர்பார்ப்புகளுடன் இக்கட்டுரையத் தொடங்கலாம். (காலச்சுவடு)

"உயிர் உன்னதமானது உயிரினும் மேலானது எமது தாய்மொழி. ஒரு மொழி, ஒரு நாடு என மக்கள் வாழும் இந்த உலகில் நாடு ஒன்று இல்லாமல் பல நாடுகளிலும் வாழுகின்ற துர்ப்பாக்கியநிலை தமிழர்களுக்கு மட்டுமே இருந்து வருகின்றது. தமிழனுக்கென்று சுதந்திர நாடு ஒன்று இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இன்று 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 600 கோடி மக்கள் பேசும் மொழி பத்தாயிரத்துக்கும் மேலுள்ளன. 23 நாகரிகங்கள் இருந்துள்ள உலகில் 21 நாகரிகங்கள் அழிந்துபோயுள்ளன. ஆனால், இன்றும் உலகில் இரண்டு நாகரிகங்கள் மட்டும் அழியாமல் நிலைத்துள்ளன. அவற்றில் ஒன்று சீனம். அடுத்தது எமது தமிழ்.
இன்று தமிழ்மொழி உலகில் 24 மணித்தியாலயங்கள் தொடர்ச்சியாகப் பேசப்பட்டுவருகிறது. மொழிக்குப் பேச்சும் சொல்லும் அவசியமானது. தமிழ்மொழிக்கு இவற்றுடன் பொருள் மொழி என்ற சிறப்பும் உள்ளது."  -என்றார் யாழ்.திருமறைக் கலாமன்றம் நடத்திய இசைநாடக விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய யாழ்.வெகு சன அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் சொ.சூ. சிறில் (உதயன்)

தமிழ் ஒரு செம்மொழி என்பதை வலியுறுத்திக் கூறும் கட்டுரையை எழுதவேண்டியுள்ள நிலையே தனக்கு வினோதமாகத் தோன்றுவதாகக் காலச்சுவடில் குறிப்பிடும் ஜார்ஜ் எல் ஹார்ட் பின்வரும் நான்கு விடயங்களை வலியுறுத்துகிறார்.

1. à®¤à®®à®¿à®´à¯ குறிப்பிடத்தக்க தொன்மை வாய்ந்தது. தற்கால இந்திய மொழி இலக்கியங்களுக்கெல்லாம் ஓராயிரம் வருடம் முந்தையது. அதன் மிகப் பழமையான நூலாகிய தொல்காப்பியம், தொடக்க காலத் தமிழ்க் கல்வெட்டுகளை வைத்து நிர்ணயிக்கும் போது, கி. மு. 200க்கு முந்தி எழுதப்பட்ட பகுதிகளைக் கொண்டது.
2. à®‡à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà¯à®•à¯à®•à¯‡ உரிய அதே சமயத்தில் சமஸ்கிருதத்தினடியாக வராத இலக்கியப் பாரம்பரியத்தைத் தமிழ் மட்டுமே கொண்டிருக்கிறது. உண்மையில் தென்னகத்தில் சமஸ்கிருதம் செல்வாக்குப் பெறுவதற்கு முன்னரே, தமிழ் இலக்கியம் எழுச்சியடைந்துவிட்டது.
3. à®šà®®à®¸à¯à®•à®¿à®°à¯à®®à¯, கிரேக்கம், லத்தீன், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் பெரும் இலக்கியங்களுக்கு ஒப்ப நிற்கும் தகுதி தமிழின் செவ்விலக்கியங்களுக்கு இருக்கிறது. இம்மொழியிலுள்ள படைப்புகளின் நுட்பமும் ஆழமும் (இந்தியாவின் நவீன இலக்கியத்துக்கு முந்தைய காலகட்டத்தில் அடித்தள மக்களைப் பற்றிப் பேசியவை தமிழ் இலக்கியங்கள் மட்டுமே) உலகளாவிய தன்மையும் உலகச் செவ்விலக்கியங்கள் மற்றும் பாரம் பயங்களில் ஒன்றாகும் தகுதியைத் தமிழுக்குத் தருகின்றன. உலக அளவில் அறவியலைப் பற்றிய பெரும்நூல்களில் ஒன்றாகத் திருக்குறளை அனைவரும் அறிவார்கள்.
4. à®¨à®µà¯€à®© இந்தியாவின் கலை மற்றும் மரபு பற்றி அறியத் தற்சார்புடைய முதன்மை ஆதாரங்களுள் தமிழ் ஒன்று. சமஸ்கிருதக் கவிதை மரபின்மீது தென்னக மரபின் செல்வாக்குப் பற்றி நான் விரிவாக எழுதியிருக்கிறேன். இதற்குச் சமமான முக்கியத்துவத்துடன் கவனிக்கப்பட வேண்டியது சங்க காலத்திலிருந்து தொடங்குகிற தமிழிலுள்ள இந்துமத நூல்களாகும்.

இதே சமயத்தில் இயல்பாக எழும் வினாவையும் முன்மொழிகிறார்:
தமிழ் ஏன் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதைப் புந்துகொள்ள முயலும்போது, அரசியல் காரணத்தை மட்டுமே என்னால் உணரமுடிகிறது. செம்மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்டால் பிற இந்திய மொழிகளும் அதே அந்தஸ்துக்கு உமை எழுப்பும் என்னும் அச்சம். இது தேவையற்ற கவலை. தற்கால இந்திய மொழிகளின் செழுமை குறித்த புரிதல் எனக்கு உண்டு. இன்று பேசப்படுகிற மிகவும் வளமான, தொன்மை வாய்ந்த, படைப்பாற்றல் மிக்க மொழிகளில் அவையும் அடங்கும்.

«நாம் தமிழுக்குச் செம்மொழி என்னும் தகுதி வேண்டுமென்று கேட்கும்போது கொஞ்சம் எச்சக்கையாக இருக்க வேண்டும். தமிழ் செம்மொழி மட்டுமல்ல, நவீன மொழியும்கூட. செம்மொழி என்கிற தகுதி வரும்போது, நவீனமொழி என்கிற தகுதி போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசைப் பொறுத்த வரையில், செம்மொழிகளுக்குப் பணம் ஒதுக்கும் முறையே வேறு. நவீன மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் முத்தமிழுக்குத் தேவையென்றால், தமிழ் நவீன மொழி என்ற தகுதியையும் காத்துக்கொள்ள வேண்டும்» 

« சுமார் 120 ஆண்டுகளுக்கு முன், சமஸ்கிருதம் கல்லூரியில் தாய்மொழிக் கல்விக்குப் பதிலாக ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டால் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை வாழும் மக்கள் ஒரே விதப் பண்பாடு கலை, சிந்தனைப்போக்கு உருவாகி, அனைவரும் பாரத மக்கள் எனும் உணர்வைப் பெறுவர். இதனால் மக்களிடையே ஒருங்கிணைவும், ஒற்றுமையும் உருவாக்கமுடியும் என்றெல்லாம் கூறிய அதிகார வர்க்கம், கல்லூரிகளில் தாய்மொழிக் கல்வியைத் தொடர முனைந்த வைராசியர் கர்சான் பிரபுவை திக்குமுக்காட்டுவித்தனர். அத்துடன் இந்தியப் பாரம்பரியத்திற்கு செம்மொழி தகுதி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்பதால், சமஸ்கிருதத்தையே பாடமொழியாக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
இதைக்கேட்டு வெகுண்டெழுந்த வடமொழி வல்லுநரும் தமிழ்ப் பேராசிரியருமான சூரியநாராயண சாஸ்திரிகள், சமஸ்கிரகத்தைவிட பன்மடங்கு தகுதிபடைத்த செம்மொழி தமிழ் என வாதிட்டார். இதற்கு தகுந்த உறுதுணையாக இருந்தவர் மு.சு. பூரணம்பிள்ளை. இத்தகைய முனைப்பால் அன்று பாடமொழியாகியது தமிழ். அன்றுதொட்டு நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த கோரிக்கைதான் தமிழ் செம்மொழி என்ற கோரிக்கை.»  -என்ற வரலாறை ஞாபகமூட்டுகிறார் தமிழுக்காகவென்றே வாழும் தமிழ்ப்பற்றாளர் மணவை முஸ்தாபா.

« தமிழ்மொழி செம்மொழியென்று ஆகிவிட்டால், அரசியல் சட்டம் எட்டாம் பிரிவின்படி நவீன இந்தியமொழி என்று அதற்குக் கிடைத்துவரும் உரிமைகளும், சலுககைகளும் பாதிக்கப்பட மாட்டா என்பது என்ன நிச்சயம்? ஒரே மொழி இரண்டு தகுதிகளுக்கும் உரியது ஆகாதென்று மனிதவள மேம்பாட்டுத்துறை கூறாது என்பது உறுதியா?» -என உரத்துக் கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாட்டு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி.

மேலும், தமிழ் ஆங்கிலத்தைப்போல், பிரெஞ்சைப்போல், ஸ்பானிசைப்போல், அரபினைப்போல் ஐநாவில் ஒலிக்கப்போகும் காலம் வந்துவிட்டதென ஒரு இலண்டன் தமிழர் ஹிந்து நாளிதழில் எழுதுகிறார் - கேட்க இனிமையாக இருக்கிறது. ஆனால் ஐநா அரசியல் என்பது வேறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசியல் வேறு என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை என்று மேலும் பரிதாபப்படுகிறார் இந்திரா பார்த்தசாரதி.

"ஐந்நூறு அல்லது ஆயிரம் சின்னக்கிளிகள் தொடர்ந்து ஒரு மனிதனை நச்சப்பது - கண் காதினுள் நுழைவது, கழுத்தில் ஊர்வது - மூலம் அவனைச் சிந்திக்க, எழுத, வாசிக்க, தூங்கவிடாமல் செய்யமுடியும். மூளை குழம்பிய நிலைக்கு அவனைத் தள்ளமுடியும்  இதுதான் இப்போது நடந்துவருகிறது.''

மீடியா ஒரு ஜனநாயக அமைப்பின் நான்காம் தூண் என்ற ஒரு மூடநம்பிக்கை உண்டு. அரசின் வரம்பு மீறல்களை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்து, மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உருவாக்கி ஜனநாயகத்தைப் பேணுவது மீடியாவின் கடமையாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று ஊடகங்கள் அந்தக் கடமையை ஆற்றுகின்றனவா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று அத்தகைய எந்தக் கடமையையும் மீடியா பொதுவாகப் பேணுவது இல்லை…. 
தனது வன்முறையை மறைக்க அதிகாரவர்க்கம் செய்யும் பல தந்திரங்களில் ஒன்று சொற்களைச் சாதுர்யமாகப் பயன்படுத்துவது. இந்தத் தந்திரத்திற்கு மீடியா முழு ஆதரவு வழங்குகிறது…… -என்று இடித்துரைக்கிறார் பதிப்பாளரும் ஆசிரியருமான கண்ணன் தனது காலச்சுவடு இதழில்.

«எனது ஐரோப்பியக் கலைப் பயணம் சொன்னதெல்லாம் இனி தமிழனுக்கு திசைகள் நான்கல்ல, நாலாயிரம்» -என்று குறிப்பிட்டார் கலை விமர்சகர் இந்திரன் தீராநதி என்னும் குமுதம் குழுமத்தின் சஞ்சிகையில்.

ஐரோப்பிய மண்ணில் அப்பால் தமிழில் நான்கு வாரங்கள் கருத்துக்கு விடப்பட்டிருந்த கருத்துக்கணிப்பில்:

செம்மொழி?

உலக அரங்கில் தமிழ் அறிவிப்பின்றியே பரவலாகும் என 16.3% தமது தன்னம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அடுத்ததாக, தாமதமான அறிவிப்பு என 9.2 வீதத்தினரும்,
அதிகரிக்குமென 57.1 வீதத்தினரும் வாக்களித்துள்னர்.
இது தமிழின் வளர்ச்சிக்காகும் என 57.1% + 9.2% + 16.3% = 82.6% வாக்களித்துள்ளனர் என்ற முடிவுக்கு வரலாம்.

தவிரவும், அதிகரிக்காது என 4.1 வீதத்தினரும், காலம் பதிலிறுக்கும் என 13.3 வீதத்தினரும் தமது கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்கள். இது தமிழின் வளர்ச்சிக்காகாது என 4.1% + 13.3% = 17.4 வீதத்தினர் வாக்களித்ததாகக் கொள்ளலாம்

21ம் நூற்றாண்டில், தாயகத்துக்கும் அப்பால்…
வாழும் மொழியாய் விரிகின்றது தமிழ்!
தயக்கமாய் "செம்மொழி" பட்டம் பெறுகிறது இந்தியாவில்!


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 00:10
TamilNet
HASH(0x55ba8e07ee70)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 00:10


புதினம்
Fri, 29 Mar 2024 00:10
















     இதுவரை:  24714492 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4656 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com