அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 23 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஒரு அகதி ஐரோப்பியனாக முடியுமா?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கோபு  
Thursday, 14 October 2004

 à®œà¯‡à®°à¯à®®à®©à®¿à®¯à®¿à®²à¯ புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து தஞ்சமடைந்து வாழும் மக்களுக்கும் கூடத் தங்கள் எதிர்காலம் பற்றிச் சிந்திக் வேண்டிய அவல நிலை.
 
இங்கு தொழிற்சாலைகள் பலவும் நட்டத்தில் இயங்குவதாகத் தெரிவித்து தொழிலாளர்கள் பலர் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றார்கள்- ஆட்குறைப்புத் திட்டம். அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மோட்டார்க் கார் உற்பத்தி செய்யும் சில நிறுவனங்கள் உற்பத்திச்செலவைக் குறைப்பதற்காக இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் மோட்டார்க் கார்களை உற்பத்தி செய்வதற்கு அங்குள்ள நிறுவனங்களுடன் இணைந்து செய்வதற்கு முன்வந்துள்ளன.  இதனால் தொழிலாளர்களுக்கு வழங்கும் வேதனச் செலவு வெகுவாகக் குறைந்து விடுகிறதாம்.  உள்நாட்டில் தொழிலாளர்கள் வேலைவாப்ய்பை இழந்தாலும் வெளிநாடுகளில் மோட்டார்க் கார்களை உற்பத்தி செய்வதன் மூலம் முதலாளிமார்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும்.  உற்பத்திச் செலவும் குறையும்.
ஜேர்மனியிலுள்ள பெரிய வர்த்தக நிறுனவம் ஒன்று பல நகரங்களில் கிளைகளைக் கொண்டது.  பல்லாயிரம் ஊழியர்கள் இதில் வேலை பார்க்கிறார்கள்.  இந்நிறுவனம் ஆட்குறைப்புத் திட்டத்தின் கீழ் 8500 ஊழியர்களை வேலை நீக்கம்செய்வதாக அறிவித்திருக்கிறது.
சமூக சேவை உதவி வழங்கும் திட்டத்திலும் ஜேர்மன் அரசு உதவி வழங்குவதிலும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவிருக்கிறது.
சமூகசேவை உதவி பெறுபவர்கள், பொதுமக்கள் பூங்கா துப்புரவு பணியிலும் ஈடுபட வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கிறார்கள்.  இதனால் அகதிகளையும் இவ்வேலைகள் செய்யும்படி பணிக்க வேண்டுமென்று ஜேர்மனியர்கள் கேட்கிறார்கள்.  சமூகசேவை உதவிவழங்கும் திட்டத்தில் மாற்றம் செய்வதை எதிர்த்து அதிபர் ஸ்ரோடருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றன.
இதே சமயம் ஜேர்மனியில் இரண்டு வருட விசாவில் தங்கியிருக்கும் அகதிகள் அதாவது நீலப் புத்தகம் வைத்திருக்கும் அகதிகள் பலரையும் தங்கள்சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு சில பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இவர்கள் உடனடியாச் சட்டத்தரணிகளின் உதவியை நாடுவது நல்லதென்றுஅறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
ஜேர்மன் அரசு இப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் அதே சமயம் அகதிகள் மீது சில ஜேர்மனியர்களுக்கு காழ்ப்புணர்ச்சியும், எரிச்சலும் ஏற்படுகின்றது.
நான் ஜேர்மனிக்கு உல்லாசப் பயணியாக வந்த சிலவாரங்களில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமென்று நினைக்கிறேன்.
மெஸடே என்ற ஒரு அழகான கிராமத்தில் வாழும் சில நண்பர்களும், அன்பர்களும் கோடைகாலத்தில் கூடி மகிழும்  ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  இதைக் „கிறில்பார்ட்டி“ (grill party)  என்று சொல்லுவார்கள்.  அதாவது கோடைகாலத்தில் ஒரு விடுமுறை தினத்தில் நண்பர்கள் குடும்பங்களாகச் சேர்ந்து அழகான, வசதியான இடத்தைத் தேர்ந்து அங்கு கூடி சகல கவலைகளையும் மறந்து சிறிது நேரம் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதுதான் இக்கிறில்பார்ட்டிச் சந்திப்புக்களின் நோக்கமாகும்.  வேடுவர் காலத்தைப் போல இறைச்சியைச் சுட்டு, பியர்பானம் அருந்தி மகிழ்வதுடன், ஓட்டப்போட்டி, கிளித்தட்டு மறித்தல் போன்ற எமது தேசிய விiளாயட்டுக்களும் இடம்பெறும்.  அன்று  நாங்களும் மெஸடேயில் ஒரு தேவாலயத்தை அடுத்த வளவில் கூடினோம்.  தேவாலய தமிழ்க் குருவானவரும் மிகச் சாதாரண ஒருவராக விளையாட்டுகளிலும் கலந்து சிறப்பித்தார்.  விiயாட்டு முடிந்ததும் மாலையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லோருமாகக் கூடி சுற்றிவர அமர்ந்து பாட்டுக்குப்பாட்டுப் போட்டி நடாத்திக் கொண்டிருந்தோம்.  இச்சமயம் மூன்று ஜேர்மனிய இளைஞர்கள் அவ்வழியால் வந்தார்கள்.  நாங்கள் சுற்றிவர உட்கார்ந்து பாட்டுப் போட்டி நடாத்தி உல்லாசமாக இருப்பதைப் பார்த்து அவர்கள் கடந்து சென்றார்கள். இவர்களில் ஒருவன் தான் அணிந்திருந்த அரைக் காற்சட்டையை பின்புறம் கீழிறக்கி தனது குண்டியை எங்களுக்குக் காண்பித்து விட்டுச் சென்றான்.  சிறிது நேரம் கழித்து அம்மூவரும் திரும்பி அதே வழியால் வந்தனர்.  இந்த அரைக் காற்சட்டைக்காரன் திடீரென எங்களுக்கு மத்தியில் நுழைந்து குத்துக்கரணம் அடித்துவிட்டு எங்களுக்கு மேலால் பாய்ந்து கடந்து சென்றான்.
அகதிகளாக வந்து தங்கியிருக்கும் நாங்கள் உல்லாசமாகச் சிறிது நேரம் பொழுதைக் கழிப்பது அந்த ஜேர்மனியனுக்குப் பிடிக்கவில்லை.  பொதுவாகவே இப்படி வேறு பலருக்கும் ஆத்திரம் இருக்கலாம்.

ஜேர்மனியில் மட்டுமல்ல மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலுமுள்ள அகதிகளுக்கும் இதே  நிலைதான்!
சமீபத்தில் டென்மார்க்கில் அகதியாக வந்து தஞ்சமடைந்திருந்த ஈரானியர் ஒருவர் குடியுரிமை கோரி மனுச் செய்திருந்தார். இவரது மனு நிராகரிக்கப்பட்டு, அவரது ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாது அவரை டென்மார்க் அரசு வலுக்கட்டாயமாக ஈரானுக்கு நாடுகடத்தியது. ஈரான் சென்றதும் அவர் அங்கு கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்.  இணர்டு வருடங்களின் பின் டென்மார்க் வந்திருக்கும் அந்த ஈரானியர் தமக்கு ஏற்பட்ட நிலைமையைத் தெரிவித்து தமது விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயமாக ஈரானுக்கு அனுப்பிவைத்ததற்காக டென்மார்க் அரசிடமிருந்து பெருந் தொகைப்பணத்தை இழப்பீடாகக் கோரி டென்மார்க் நீதிமன்றத்துக்கு மனுச் செய்திருக்கிறார்.  இவ்வழக்கு டென்மார்க்கில் மட்டுமல்லாது மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலியை ஏற்படுத்தலாம்.
ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்புப் பிரச்சினை மற்றும் சமூக சேவை உதவிகள் குறைவதற்கான வாய்ப்புகள் காரணமாக புலம் பெயர்ந்தோர் பலர் (குடியுரிமை பெற்றவர்கள்) லண்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுவதற்காகப் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.  எங்கே போனாலும் சொந்த நாடு போலாகுமா?

 à®µà®´à®¿ மூலம் - ஈழமுரசு


     இதுவரை:  24796514 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2788 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com