எழுதியவர்: - மு.புஷ்பராஜன்
|
|
|
Thursday, 04 November 2004

1. சிறு காலப் பூவின் வாசம்
பிரிவதற்காகவோ பிறந்தவரானோம்...
வாழ்வின் வேருக்காய் வெவ்வேறு தொலைவுகளில் நமக்கான காலங்கள் நினைவுகளாகவே கரைந்து போயின..
இணைவு கொண்ட ஈரக் கால மலர்விலும் பிரிவு கொண்ட வெம்மைக் கால உலர்வே அதிகமாக...
ஆயினும் விலகலின் வெம்மையை மீறி சிறுகாலப் பூவின் வாசம் மேவுகிறது உயிர் வேருக்கான உரமாய்... 07-07-2004 2. சிலர்
சிலர் தமக்கோ வாய் மட்டும் இருப்பதாயும் நமக்கோ காதுகள் மட்டும் இருப்பதாயும் நம்புகின்றனர். நாம் பேச விரும்பினாலும் விண்ணப்பித்தாலும் பயனேதுமில்லை. தமது வாயோ கட்டளைக்கு மட்டும்தான் என்ற விதமாக.. 10-05-2003
3. யார்?
ஏனென்ற கேள்விக்காய் வாழ்விடம் இழந்து விரட்டப்பட்ட முதல் அகதிகள் ஆதாம் ஏவாளாயின் அதிகாரத்தால் இதனை முதலில் யார் நிகத்தினர் 29-06-2004 (நன்றியுடன் ஓவியம்:நந்தா கந்தசாமி)
|