அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கண்ணன் எங்கள் நாய்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்.  
Wednesday, 17 November 2004

கண்ணன் என்றொரு நாய்
எங்கள் வீட்டில் வாழ்ந்தது.
அதன் விழிகளுக்கு மேலே
கண்கள் போன்ற இரு வட்டங்கள்;
அதனால்தான் கண்ணனென்ற பெயர்!

நாம் விடுமுறைக்கு வீடுசென்று
காரில் யாழ் திரும்புகையில்
கண்ணனும் காருடன்
கூடவே ஓடிவரும்.
எம்மைப் பிரியக்கூடாதென்ற தவிப்புடன்
வேகவேகமாக ஓடிவரும்.
எம்மேல் அத்தனை பாசம்
எப்படி வந்தது கண்ணனுக்கு!

நெடுங்கேணிச் சந்தி தாண்டி,
வித்தியானந்தா வரையிற்கூட
அது ஓடி வரும்!
எம் காரின் வேகத்துக்குக் கண்ணனால்
எப்படித்தான் ஈடுகொடுக்க முடியும்!
ஏதோவோர் உத்வேகத்தில் எடுத்த ஓட்டம்,
இப்போதோ பெருங்களைப்பு.

இனிக் கண்ணன் வீடு திரும்ப வேண்டும்,
இங்குதான் பிரச்சனை!
ஒவ்வொரு நாய்க்கும்
ஒரு வசிப்பிட வட்டமுண்டு.
இன்னொரு நாயின் இருப்பிட எல்லைக்குள்
நுழைந்தால், நுழைய நேர்ந்தால்,
நிச்சயம் கடிபிடிதான்!
அதற்கெல்லாம் முகங்கொடுத்துக்
காயமின்றி வீடுவருவது
அத்தனை எளிதல்ல!
இது கண்ணனுக்கும் நன்கு தெரியும்.
இருந்தாலும், ஏன்தான் ஒவ்வொரு முறையும்?

என் பிள்ளைகள் இருவரும்
பின் கண்ணாடி வழியாகக்
கலங்கும் கண்களுடன்
பார்த்தவாறு இருப்பார்கள்.
மனைவியோ மனதுக்குள் அழுவாள்.

நான் வெளிநாடு வரும்போது
பஸ்தரிப்பு நிலையத்தின்
படிக்கட்டில் அமர்ந்திருந்து
காத்திருந்து விடைதந்த
என் அன்னையை நினைக்கும் போதெல்லாம்
எம் கண்ணனையும் நினைக்கின்றேன்.

நாயினும் கடையேன் என்று சொல்ல
எவனுக்கும் தகுதியில்லை!
தாயின் பாசத்திற்கூட
தன்னலம் உண்டல்லவா!
எம் நாயின் பாசத்தை
எண்ணியெண்ணிக் கசிகின்றேன்.

01.08.2000


 


     இதுவரை:  24785246 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2492 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com