அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஆதியிலே தனிமையிருந்தது.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -வாசுதேவன்-  
Wednesday, 08 December 2004

ஆதியிலே ஒரு தீவும்
நெடும்பனைகளும் தென்னைகளும் மாத்திரமே
இருந்தன.
பின் வேப்பமரங்களும் காகக் கூடுகளும்
கடவுளரால் படைக்கப்பட்டன.

கருப்பைத் தோணி புயலிலுடைந்து நான் மனிதனாக
இத்தீவிலே கால அலைகளினால் ஒதுக்கி விடப்பட்டேன்.

வெள்ளிக்கிழமையென நாமமிட ஒரு நாய்கூட
இல்லாத என் தீவின் தனிமைக்குள் நான் நாட்களை
எண்ணிக்கொண்டிருந்தேன்.

பின் ஒரு பனை மரத்தின் உச்சியிலொரு நாள் அமர்ந்து
அருகெல்லாம் வேறு வேறு தீவுகளைக் கண்டேன்.

அயற்தீவில் ஒருவன் அலைந்துகொண்டிருந்தான்.
சைகைகளால் வானத்தைப் பார்த்து
வினாவிக்கொண்டேயிருந்தான்.
சூரியனிடம் சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டிருந்தான்.

தனித்தீவில் வாழும் மூத்த மனிதனே!
உன் தீவுக்கு வர வழி சொல்
நான் அங்கு வந்தவுடன் எனக்கு நீ
வெள்ளிக்கிழமையென நாமமிடு
என ஒங்கிக் கத்தினேன்.
என்குரல் அவனுக்கு எட்டவில்லை.
அவன் வானத்துடன் உரையாடிய மொழி
எனக்குப் புரியவில்லை.

மூத்த மனிதன் முழங்கினான் முறுவலித்தான்.
போர்ப்பறையறைந்தான்.
புரட்சி செய்தான்.ஆர்ப்பரித்தான்.
ஓ! உன் தீவின் தனிமைக்குள் வாழ்ந்த
மு.த. மனிதனே!
என் தீவின் தனிமையைத் தீர்ப்பதற்கு
ஒரு தோணி அனுப்புக என இறைஞ்சினேன்.
என்குரல் அவனுக்கு எட்டவில்லை.
அவன் வானத்துடன் உரையாடிய மொழி
எனக்குப் புரியவில்லை.

காலம் ஓடியது.
இறந்ததைச் சுமந்து கொண்டே
நிகழ்வது நிகழப்போவதை நோக்கி
ஓடியது.

ஆதித் தனிமையெனும் எனும் என் தீவுக்குள்
அகப்பட்டு எனக்காகவே ஆக்கப்பட்ட தோணி
என் கரைகளை வந்தடையும் காலம் வரை
நான் காத்துக்கிடந்தேன்.

மேற்குக் கரையில் நான் மேவியவேளை
மு.த மனிதனின் "மெய்யுள்" தோணி அங்கு
எனக்காகக் காத்து நின்றது. அவனின் பிரஞ்ஞை
மிதப்புகளால் ஆக்கியிருந்தான் அவன்
அத்தோணியை.

அவன் தோணியேறி அவன் தீவை ஏகினேன்.
அவனின்றி அவன் தீவு தனித்திருந்தது. 
என் தீவின் தனிமையையும்
அவன் தீவின் தனிமையையும் இணைத்தோர்
புதுத் தீவை ஆக்கி அங்கு
சில பனைகளையும் தென்னைகளையும்
நாட்டினேன்.
பின் வேப்பமரங்களும் காகக் கூடுகளும்
கடவுளரால் படைக்கப்பட்டன.

அன்றைய உன் தனிமைத்தீவில்
இன்று நான் குடியிருக்கிறேன் மு.த மனிதனே.
நீ போய்விட்ட பின்னால்
உன் தீவில் கைவிடப்பட்ட
உன் வெள்ளிக்கிழமை நான்.
உன் தனிமை என் தீவு.

11.11.2004.
(புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் வெளியிட்ட தென்னங்கீற்று 2004 சிறப்பு மலிரிலிருந்து இக்கவிதை நன்றியுடன் மீள் பிரசுரமாகின்றது)


     இதுவரை:  24712675 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5668 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com