அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow குஞ்சரம் arrow நேரத்திற்கு பதில் மணிக்கூடு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நேரத்திற்கு பதில் மணிக்கூடு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: Administrator  
Thursday, 14 March 2002

அப்போது நேரம் இரவு பன்னிரண்டு மணியைத் தாண்டியிருக்கும். பாரிசின் பிரதான தெருவொன்றிலிருக்கும் பஸ் தரிப்பில் பஸ்சிற்காக காத்திருந்தேன்.

எனக்குச் சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருப்பது நமது பையன்தான் என்பது தெரிந்தது. வேலை முடிந்து வீட்டிற்கு போவதற்காக காத்திருக்கிறான் என்பது தெரிந்தது. சில நிமிடங்கள்தான் சென்றிருக்கும். ஒரு கறுப்பின இளைஞன் அவனை அணுகினான். இவன் சற்று அச்சத்துடன் இவனை பார்ப்பது தெரிந்தது. நேரம் என்ன? என்று அந்த கறுப்பின இளைஞன் நம்மவரிடம் கேட்பது எனக்கும் கேட்டது. அவன் பிரெஞ்சு மொழியில் கேட்டான்.
கேட்கும் போது இவருக்கு புரியவேண்டும் என்பதற்காகவே அவன் தனது கையைக்காட்டி கேட்டான்.
நம்மவர் நடுங்கியவாறு கையில் இருந்த மணிக்கூட்டை கழற்றி அவன் கையில் கொடுத்தார். நேரத்தைப் பார்த்து அதனை பிரெஞ்சு மொழியில் சொல்வது தெரியாததால் அப்படிச் செய்வதாக நினைத்தேன். ஆனால் கறுப்பின வாலிபனோ ஒன்றும் புரியாமல் கைகளை உயர்த்திக் காட்டிவிட்டு மணிக்கூட்டுடன் சென்றான்.

அருகில் நின்ற நான் என்ன நடக்கின்றது என்று புரியாமல் அவரருகில் சென்று 

- ஏன் தம்பி மணிக்கூட்டை கொடுத்தீர் - என்று கேட்டேன்.
- அண்ணே நீங்கள் தமிழா.. நான் உங்களைப் பாகிஸ்தான்காரன் என்டெல்லோ நினைச்சன்- என்றார்.
- ஏன் தம்பி ம..?- என்று மீண்டும் அவரிடம் கேட்டேன்.
- என்ன அண்ணே செய்யிறது அவன் கேக்கேக்கை குடுக்காட்டி அடிச்செல்லே போடுவான்- என்றார் அவர்.

எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

[வழி மூலம் - பாரிஸ் ஈழநாடு]


மேலும் சில...
கருமி
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
உணவகக் குசினி
மீண்டும் தட்டிக்கொடுப்பு
மக்களை கைவிட்ட கடவுள்
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
வீடும் வலியும்
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
கைநாட்டு
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 14:09
TamilNet
HASH(0x5555590de470)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 14:09


புதினம்
Mon, 15 Jul 2024 14:09
     இதுவரை:  25361536 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2599 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com