அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 19 September 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சுனாமி அழிவைத் தடுக்கும் 'அலையாத்தி'   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: அரிஸ்டாட்டில்  
Saturday, 05 February 2005

கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெüர்ணமி நாளில் சுனாமி என்ற ஊழிப் பேரலை இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து கடற்கரைப் பகுதிகளில் லட்சக் கணக்கான மக்களை விழுங்கிவிட்டது. அலையாத்திக் காடுகள் இருந்திருந்தால் இந்த அளவுக்கு மனிதர்கள் மடிந்திருக்க மாட்டார்கள். பாதிப்புற்ற இடங்களில் ஒரு காலத்தில் அலையாத்திகள் இருந்தன. அவை அழிந்த இடத்தில் இறால் பண்ணைகள் வந்தன. அலையாத்தி அழிந்த இடத்தில் மீண்டும் அவற்றையே உருவாக்காமல், இறால் ஏற்றுமதி செய்து பணக்காரர்களாகத் திட்டமிட்டதால், இன்று மீனவர்கள் அழிந்தனர். கிராமங்கள் காணாமல் போய்விட்டன.

சுனாமி அழிவுக்கு நிரந்தரப் பரிகாரம் அலையாத்திகளைப் பயிரிடுவதுதான். அலையாத்திகள் மிகுந்துள்ள முத்துப்பேட்டையிலும் பிச்சாவரத்திலும் அழிவு இல்லை. பவழப் பாறைகள் நிறைந்த ராமேஸ்வரத்திலும் அழிவு இல்லை. இவ்வாறே, அலையாத்தி அடர்ந்துள்ள கார் நிக்கோபார் தீவுகளில் உள்ள காடுகள், பவழப் பாறைகள் ஆயிரக்கணக்கான மீனவர்களைக் காப்பாற்றியதாக செய்திக் குறிப்பு உள்ளது.

மாங்குரோவ் என்பதும் அலையாத்தி என்பதும் ஒன்றே. கடலில் அலைகள் ஏற்படுத்தும் சக்தியையும் நீரோட்ட விசையையும் அலையாத்தி மரங்கள் கட்டுப்படுத்துவதால்தான் இவற்றுக்கு இப்பெயர். இந்த சக்தி இம் மரங்களின் சுவாச வேர்களுக்கு உண்டு. இந்தியாவின் நீண்ட கடற்கரையில் பல நூற்றுக் கணக்கான ஆறுகள் சங்கமம் ஆகின்றன. இவ்வாறு சங்கமம் ஆகும் கழிமுகங்களில் அலையாத்தி மரங்கள் வளர்கின்றன. இவை இயற்கை வழங்கிய வரப்பிரசாதனங்கள். இவை அழிக்கப்படாத வரையில் கடல் கொந்தளிப்பாலும் புயலாலும் ஏற்படும் சேதங்கள் குறைவாக இருந்தன. கடல் நீர் கரை கடந்து, நில அரிப்பு ஏற்படாமல் அலையாத்தி மரங்கள் மக்களைக் காப்பாற்றும். சுனாமி உயிர்ச் சேதத்தைத் தடுத்து நிறுத்தும். கடந்த நூற்றாண்டுக்கு முன்பு சென்னையிலிருந்து குமரி வரை ஒரிசா, ஆந்திரத்திலும் கூட கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் அலையாத்திக் காடுகள் இருந்தன.

காலப் போக்கில் கடலில் சங்கமம் ஆகும் ஆற்றுப் படுகைகளில் தூர் படிந்து சாக்கடையாகிவிட்டன. சென்னையில் கூவம், அடையாறு இதற்கு எடுத்துக்காட்டு. கூவம், அடையாறு சங்கமப் பகுதிகளில் ஒரு காலத்தில் அலையாத்தி மரங்கள் இருந்தன. இப்போது இல்லை. அலையாத்தி அழிந்து மழையும் குறைந்து, இன்று வறட்சியே மேலோங்கியுள்ளது. அலையாத்தி மரங்களில் பல வகைகள் உண்டு. ஃபுளோரிடா, சுந்தரவனம் (வங்காளம்), அந்தமான்-நிகோபார் பகுதியில் உயர்ந்த அலையாத்தி உண்டு. தமிழ்நாட்டில் முத்துப்பேட்டையிலும் பிச்சாவரத்திலும் மட்டுமே அலையாத்தி மரங்கள் எஞ்சியுள்ளன. இவை சற்று உயரம் இல்லாதவை. அலையாத்தியின் பின்புலத்தில் பூவரசு, இலுப்பை, தேக்கு, ஓக், மகோகனி, தோதகத்தி, குமிழ் எல்லாமே செழிப்பாய் வளரும். அலையாத்தி மரங்கள் -கண்டல், நரிக்கண்டை, பண்ணுக்குச்சி, காலகந்தன், நல்ல மாடா, மங்கல் என்றும் அழைக்கப்படுகின்றன. நல்ல உயரம் வளரும் ஃபுளோரிடா மங்கல் என்பது சிவப்புப் பட்டையுள்ள மரம். இது இந்தியாவில் அரிது. இங்குள்ள அலையாத்தி கருப்பும் வெள்ளையும் ஆகும். சிவப்பு மாங்குரோவ் அலையாத்தி மரங்களில் விழுதுகளே விதையாகி அடிமரமாகி ஆலமரம் போல் வளரும். இந்திய மாங்குரோவ் மழைக் காலத்தில் கடலிலும் கழி முகத்திலும் நீர் மட்டம் உயரும்போது, நெற்றுக்கள் உதிர்ந்து மரங்களாகும்.கடற்கரைப் பகுதிகளில் ஆறுகள் சங்கமமாகும் பகுதிகளில் அலையாத்தி விதைகளை நட்டு வளர்க்க அரசு முயற்சி செய்தல் நலம். அலையாத்தியின் முக்கிய நன்மை, அதன் வேர்கள் உவர் நிலத்தை நன்னீர் நிலமாக மாற்றும். இதனால் சவுக்கு, சில்வர் ஓக், ஆல், மருதம், பூவரசு, இலுப்பை, தேக்கு, மகோகனி, தோதகத்தி நடலாம். இரண்டாவதாக, அலையாத்தியின் சுவாச வேர்கள்தான் -குறைந்தளவு நன்னீரும் உள்ள உவர்நீர்தான் பவழப் பாறைகள், ஏராளமான மீன்களின் புகலிடம். இயற்கை இறால் இங்குதான் முட்டையிடும். நண்டுகளின் புகலிடமும் இதுவே. அளவிட முடியாத இயற்கைச் செல்வமே அலையாத்தி மர வேர்களில் உள்ளது.

வளர்ச்சிப் பாதை என்ற பெயரில் கடல் பகுதியில் உள்ள கழிமுகத்துக்கு நன்னீர் வராதபடி வேளாண்மைக்கும் இறால் வளர்ப்புக்கும் கால்வாய்கள் திருப்பிவிடப்படுவதால், அலையாத்தி -மாங்குரோவ் மரங்கள் அழிந்துவிட்டன. உதாரணமாக, சென்னையே ஒரு காலத்தில் அற்புதமான மாங்குரோவ் வனமாக இருந்தது. நகர வளர்ச்சி என்ற பெயரில் கூடமும் அடையாறும் நகரக் கழிவுகள் கலக்கும் சாக்கடை ஓட்டமாக மாறியதால் அலையாத்திகள் அழிந்தன. சுனாமிப் பேரழிவு நிகழ்ந்தது. வேதாரண்யக் காடுகள் அழிந்ததால், நாகையில் அழிவு. கடிலம் என்ற ஆறு கலக்கும் கழிமுகம் சாக்கடையானதால் கடலூர், பாண்டியிலும் சுனாமி அழிவு. மீண்டும் அலையாத்தி அரண்களை உருவாக்கி சுனாமி ஆபத்திலிருந்து விடுதலை பெறுவோம்.

நன்றி: தினமணி

 


     இதுவரை:  25696149 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9551 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com