அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Monday, 31 May 2004
பக்கம் 5 of 5

புலம்பெயாந்த ஒருவரால் அண்ணளவாக தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பத்துப்பேரை தன் தோள்களில் சுமக்க முடிந்தது. இது தாயகத்தின் போர் நெருக்கடியைப் பொருளாதார நெருக்கடியைத் தாங்கித்தரிக்க, முகங்கொள்ளச் செய்தது. புலம்பெயர்தோர் பெரும்பாலானோர் பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்குக் குறையாமல் குளிரில் முள்ளெலும்பு தேய உழைத்தனர். தம் தேவைகளை குறைத்து வாயைவயிற்றைக் கட்டி பணத்தை சேமித்தனர். இவற்றால் புலம்பெயர் நாடுகளில் நம் சமூத்தினரிடையே நிகழும் இளவயது மரணங்களின் விழுக்காடு வம்பவாரிசுகள் அறியாதது. ஈழத்தமிழர்களுக்கான தனித்துவம் மிக்க ஊடகங்களை (பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி), புதிய தொழில்சார் துறைகளை அவர்களால் நிறுவமுடிந்திருக்கின்றது.
இருமொழி மும்மொழி மட்டுமே தெரிந்திருந்த ஈழத்தமிழ்ச் சமூகத்திற்கு தற்போது ஆகக்குறைந்தது பத்து மொழிகள் தெரிந்திருக்கின்றது. சர்வதேச தரமிக்க அறிவுத்துறைகளில் எல்லாம் கால்பதிக்க முடிந்திருக்கின்றது. இந்தியாவின் தென்கோடியிலும் இலங்கை மலேசியாவிலும் முடங்கிக்கிடந்த தமிழ் சர்வதேச மொழியாக மாறி நிற்கின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக தமிழ்ப் பரப்பிற்கு சர்வதேச முகவரியைப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. இன்னும் இன்னும் நான் அடுக்கிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் தென்கிழக்காசியாவின் சூத்திரதாரிகளுக்கும் சிறிலங்கா பேரினவாதிகளுக்கும் மட்டுந்தான் சங்கடத்தையும் சிக்கலையும் தோற்றுவிப்பது. இங்கேதான் கம்பவாரிதியின் அரசியல் அம்பலமாகின்றது. சூத்திரதாரியினதும், பேரினவாதியினதும் அரசியல் ஆதங்கத்தையே கம்பவாரிதியும் வெளிப்படுத்தியுள்ளார். அயோத்தியில் இராமர் கோயில் கட்டவும், இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிக்கவும், அகண்ட பாரதத்தை அமைக்கவும் கூடியதான காவிமயமான அரசிற்கு சேவை செய்வது வம்பவாரிதி போன்றோரின் விருப்பதிற்குரியதாய் இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை.
கம்பவாரிதி எள்ளி நகையாடும் புலம்பெயர்ந்தோரின் சிறுமைத்தனங்கள் தமிழ்ச் சமூகத்திற்கு மட்டும் உரியவையல்ல. இவை உலகளாவியவை, சமூக உளவியல் சார்ந்தவை. முன்னைய உயர்குடியினர் ஆடிய ஆட்டங்களை வாய்பிளக்க பார்த்த சாதாரணர் தங்கள் வசதியின் போது ஒருதடவை அப்படிப் பாவனை செய்யத்தான் முயற்சிப்பார்கள். இப்பிரச்சனைகளை நேசத்துடன்தான் அணுகமுடியும், ஆலோசனை கூறமுடியும். அதைவிட தாயகத்தாருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையேயான முறுகல்கள், மனக்குமுறல்கள் தாய்பிள்ளைகளுக்கு இடையேயான கோபதாபங்கள் போன்றதே. நமது மொழியில் சொல்வார்கள் கோழி மிதித்து குஞ்சுகள் சாவதில்லை. அரசியல் மொழியில் கூறுவதானால் இவை அகமுரண்பாடே தவிர பகைமுரண்பாடல்ல. (கம்பவாரிதிக்கு இதுபற்றிய விளக்கம் குறைவாக இருக்கும். மேலதிக விளக்கத்திற்கு மல்லிகை ஜீவாவை அணுகலாம்)
புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள், வேறுநாடுகளில் குடியேறியோர் தாயகம் திரும்புதல் அவர்களது ஆதார உரிமை சார்ந்தது. மனித உரிமை சார்ந்தது. இதனை மறுத்துக் கருத்துக் கூற ஆலோசனை வழங்க கம்பவாரிதி முயற்சித்திருப்பது நச்சுத்தனமானது. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த பாவத்திற்கு இணையானது.
இந்தப் பாவத்தில் இருந்து அவர் மீள வேண்டுமானால் என்னால் வழங்கக் கூடியதான ஆலோசனை இதுதான். தமிழில் முறைசார் கல்வியையோ முறைசாராக் கல்வியையோ  மேற்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழையாயினும் (உங்களிடம் தமிழ் அறிவு இருக்குமாயின் ஏனெனில் தமிழ் மொழி என்பது கம்பராமாயணத்திற்கும் அப்பாற்பட்டது) கற்றுக்கொடுக்க முயற்சியுங்கள். அதனைவிட போர்ச் சூழலால் மனப்பிறழ்வுக்கும் பாதிப்புக்கும் உள்ளாகி இருப்போருக்கு ஆன்மீக வழியில் நம்பிக்கை அளிக்க முடியுமா என யோசியுங்கள். அதையும் விட ஆகக்குறைந்தது முகாம்களில் தங்கியுள்ள பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஒரு நேர உணவாவது வழங்க முடியுமாயின் வழங்குங்கள். உங்களுக்குப் போகுமிடத்தில் புண்ணியமாவது மிஞ்சும்.
"வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா" - கம்பன்

*இக்கட்டுரை மல்லிகை, மற்றும் சுடர்ஒளி ஆகிய இதழ்களுக்கு அனுப்பப்படுகின்றது. தேவை கருதி புலம்பெயர்ந்தோர் ஊடகங்களுக்கும் அனுப்படுகின்றது.




     இதுவரை:  24715921 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4422 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com