அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 18 January 2020

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 14 arrow சுனாமி லொத்தர்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சுனாமி லொத்தர்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: - யதீந்திரா  
Tuesday, 08 March 2005

1

சுனாமி அரசியல் குறித்து பலரும் எழுதி இருக்கின்றனர். அவரவர்அவதானத்திற்குட்பட்டவாறு. ஆனால் சுனாமி லொத்தர் குறித்து எவரும் எழுதியதாகத் தெரியவில்லை. தென்னாசியப் பிராந்தியத்தை உலுக்கிய சுனாமி சிலருக்கு அவரவரின் நிலைக்கும் தேவைப்பாடுகளுக்கும் ஏற்ப ஓர் அதிஸ்டலாபம் போல் தெழிற்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் எரிகிற வீட்டில் அகப்பட்டதை சுருட்டிக் கொள்ளும் நோக்கில் துடிப்புடன் செயலாற்றி வருகின்றனர். ஏகாதிபத்திய நலனைப் பொறுத்தவரையில் குறிப்பாக அமெரிக்காவைப் பொறுத்த வரையில் அமெரிக்கா சுனாமிக்கு பின்னரான சூழலை, தென்னாசியப் பிராந்தியத்தில் காலூன்றுவதற்கு கிடைத்த அரியதொரு சந்தர்ப்பமாகக் கருதுகிறது. அது இந்த சந்தர்ப்பததை சரியாக பயன்படுத்திக் கொள்வதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது. அரசு சாரா நிறுவனங்களின் கதையோ இலகுவில் சொல்லி விடக் கூடியதல்ல.

2

முதலில் சிங்கள அரசில் சூழலில் சுனாமி எவ்வாறு ஒரு லொத்தராகத் தொழிற்பட்டு வருகிறது என்பதைப் பார்ப்போம். கடந்த டிசம்பர் 26ற்கு முன் திருமதி சந்திரிக்கா குமாரதுங்கா அவர்களின் நிலைமை என்ன? அவரின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகியிருந்தது. தென்பகுதி அரசியல் பல்வேறு பிரச்சினைகளால் தினறி;க் கொண்டிருந்தது ஒருபுறம் தென்பகுதி மக்கள் மத்தியில்ää மாவீரர்தின உரையைத் தொடர்ந்து புதிதாக உருவாகிய யுத்தம் குறித்த அச்சம், அதளபாதாளத்தை நோக்கிச் சென்ற நாட்டின் பொருளாதார நிலைமை. சமாதானப் பேச்சுவார்த்தையை தொடங்கினால் மட்டுமே எம்மால் உதவி செய்ய முடியுமென கடன் வழங்கும் நாடுகள் கைவிரித்தமை, தனது பங்காளிக் கட்சியான J.V.P இன் தொல்லைகள் உண்மையில் திருமதி சந்திரிக்கா திண்டாடிக் கொண்டிருந்தார். அவரால் புதிதாக எழுந்த எந்தவொரு சவாலையும் சமாளிக்க முடியாமல் இருந்தது.

இந்த வேளையில்தான் சுனாமி அவரைக் காப்பாற்றியது. தனது சர்வ அதிகாரங்களையும் சுனாமியை மையப்படுத்தி ஒருமுகப்படுத்தினார். தனது தொல்லையாக இருந்த J.V.P யை ஒரு பிடிபிடிப்தற்கும் சில விடயங்களில் ஓரங் கட்டவதற்கும் சுனாமியை பயன்படு;தினார். பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரலிகளின் மத்தியிலேயே திருமதி சந்திரிக்கா விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு மிகவும் பாதிப்படைந்திருக்கிறது எனவே அவர்களால் உடனடியாக ஒரு யுத்தத்ததை தொடங்க முடியாது எனக் கூறியிருந்தார். இதனை அவர் மிகவும் பகிரங்கமாகவே கூறியிருந்தார். இக் கூற்று அவர் ஒரு யுத்தம் குறித்த அச்சத்தில் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தியது. அதே வேளை இக் கூற்றானது சுனாமிக்குப் பின்னரான அரசியலின் தொடக்கப் புள்ளியாகவும் அமைந்தது எனலாம். மேலும் வெளிப்டையாக உரத்துப் போசிய போதும் எப்பொழுதுமே விடுதலைப்புலிகளின் இராணுவ வலுதான் அரசுக்கு பிரச்சனையாக இருந்திருக்கிறது என்பதையும் இக் கூற்று மறைமுகமாக உறுதிப்படுத்தியது

ஆரம்பத்திலிருந்தே தென்பகுதி அரசியல் சூழலில் ஒவ்வொரு அரசியல் தரப்பினரும், பாதிக்கப்பட்ட மக்களை முன்னிலைப்டுத்தி தங்களது அரசியல் நலன்களை பேணிக் கொள்வதில்தான் கருத்தூன்றி செயல்பட்டனர். இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போதே திருகோணமலையில் ஒரு சம்பவம் இடம்பெற்றது. J.V.P இன் பின்னனியில், திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான காணியில் இரவோடு இரவாக சிங்களவர்களை குடியேற்றுவதற்கான முயற்சி மேற் கொள்ளப்பட்டது. தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அம் முயற்சி கைவிடப்பட்டது. இவ்வாறான முயற்சிகள் முலம் J.V.P தனது செல்வாக்கை மேலும் பலப்படுத்திக் கொள்ள முயல்கிறது ஒரு வேளை அரசிலிருந்து வெறியேற வேண்டி ஏற்பட்டாலும், அதற்கிடையில் சுனாமியைப் பயன்படுத்தி தனது ஆதரவுத் தளத்தை விஸ்தரித்துக் கொள்ள முயல்கிறது. திருகோணமலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது J.V.P அரசுடன் கூட்டுச் சேர்ந்ததன் காரணமாகவே ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற முடிந்தது.  

3

அடுத்து சமூகத் தளத்தில் சுனாமிக்கு பின்னரான நிலைமைகளைப் பார்ப்போம். சுனாமியால் தனது குடும்பத்தையே இழந்தவரின் அழுகுரல் ஒரு புறமாகவும். அநாதையாகி நின்ற குழந்தைகளின் கதறல் இன்னொரு புறமுமாகவும் ஒலித்துக் கொண்டிருந்த போதே "கனடாக்கு போற போம் எவ்வளவாம். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேனும்" என்ற குரல்களும் ஒலித்தது. தமிழர் தேசத்தில் உப்புச் சப்பிலாத ஒரு வர்க்கம் உருவாகியிருக்கிறது. அதனது குரல்தான் இது. இந்தக் கூட்டம் பொங்கு தமிழிலும் நிற்கும். பின்னர் ஆளுனருக்கு பாராட்டு விழாவும் நடத்தும். சிங்கள மந்திரிமாருக்கு ஆலவட்டமும் பிடிக்கும். இவ்வர்க்கம் தமிழர் தேசியம் குறித்தோ அதற்கான பணிகள் குறித்தோ எந்தவித்திலும் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் இந்த வர்க்கம்தான் நமது சமூதாயத்தில் தீர்மானிக்கும் அதிகாரத்துவங்களைக் கொண்டிருக்கிறது. சுனாமியால் பாதிக்ப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கனடிய அரசு தனது திட்டம் பற்றி அறிவித்ததும் நான் மேல் சொன்ன வர்க்கத்தினரிரைச் சேர்ந்தோர் கனடியத் தூதரகத்திற்கு முன்னால் முண்டியடித்துக் கொண்டு நின்றனர். உண்மையில் சுனாமியால் பாதிக்பட்ட மக்களோ அடுத்த வேளை உணவுக்கா காத்துக் கொண்டிருந்தனர். இதுவரை சுனாமியால் பாதிக்கபடாமல் கனடாவிற்கு போனவர்களுக்கும் சுனாமி ஒரு லொத்தர்தான்.

இனி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள்(NGO)  பற்றிப் பார்ப்போம்சுனாமிக்குப் பின்னர், இதுவரை சமார் 600 அரசு சாரா நிறுவனங்கள் இலங்கை வந்திருப்தாக ஒரு தகவல் கூறுகிறது. இவை சுனாமி என்.ஜி.ஓக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வாறான நிறுவனங்களுக்கும் ஏலவே நிலை கொண்டிருக்கும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களுக்கும் தமது இருப்பை மேலும் நியாப்படுத்துவதற்கும் பலப்படுத்திக் கொள்வதற்கும் சுனாமி ஒரு வரப்பிரசாதமாகும். தவிர மதமாற்றலைத் தொழிலாகக் கொண்ட அரசு சாரா நிறுவனங்கள், இன்னும் சுதந்திரமாக தங்கள் தொழிலைச் செய்வதற்கு சுனாமி நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இவ்வாறான நிறுவனங்கள் யாவும் உடனடியாக காலூன்றுவது கிழக்கு மாகாணத்தில்தான். அதிலும் குறிப்பாக திருகோணமலையில்தான். திருகோணமலையில் எல்லோருக்கும் அக்றைப்படுவதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. இவ்வாறான நிறுவனங்களில் சில மதமாற்றத்தை இலக்காகக் கொண்டவை. மதமாற்றம் என்றவுடன் சமீத்தில் திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விடயம்தான் நினைவுக்கு வருகிறது. நான் சமீபத்தில் சுனாமியல் பாதிக்கப்பட்ட குச்சவெளிபபகுதிக்குச் சென்றிருந்தேன்ää அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறினார் "தம்பி இஞ்ச ஒரு பெரியவர் சாப்பாட்டுச் சாமான்கள கொண்டு வந்து போட்டு ஜோன்சன் வா, ஸ்டிபன் வா, மேரி வா என்டு கூப்பிட்டுத்தான் நிவாரணம் கொடுத்தவர். நாங்களும் ஜேன்சனாகினாத்தான் தருவேர் போல கிடக்கு." பின்னர் அறிந்து கொண்டேன் அது நீண்டகாலமாக திருகோணமலையில் இயங்கிவரும் ஒரு கிறிஸ்தவ துறவியை தலைவராகக் கொண்ட என் ஜி ஓ என்று. அந்த நிறுவனம் தாங்கள் மதச் சார்பற்றவர்கள் என்று கூறிக்கொண்டாலும் இதில் அவர்களின் சாயம் வெளுத்து விட்டது. ஒருவர் தானாக விரும்பி மதம் மாறுவதும்ää பணபலம் மிக்கவர்கள் மற்றவரின் வறுமையைப் பாவித்து மதம்மாற்றுவதும் ஒரே தரத்தானதல்ல. மதமாற்றம் பற்றியும் அதன் அரசியல் பற்றியும் பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.

இதை வாசிக்கும் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழக் கூடும். அப்படியானால் சுனாமிக்குப் பின்னர் தமிழ் மக்களின் நிலைதான் என்ன? தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சுனாமி வேலியால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதை போன்றது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இனவாத யுத்தச் சுனாமியால் வாழ்விழந்து நின்ற தமிழர்கள் இப்பொழுது இயற்கைச் சுனாமியால் தாக்குண்டு மேலும் சீரழிந்த கிடக்கின்றனர். சுனாமி ஏற்பட்ட மறுதினம் எனது இலக்கிய நன்பரொருவர் கூறினார் "இயற்கையும் எங்களுக்குத்தான் எதிராக இருக்கிறது நாம் என்னதான் செய்வது".


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 18 Jan 2020 19:43
TamilNet
Indian Prime Minister Narendra has been successful in culminating a two-year-long “silent background work”to rebuild relations with Rajapaksa siblings, observes Constantino Xavier, a research fellow at Brookings India in New Delhi. In an interview to Rediff, the Portuguese academic, who specialises foreign policy and defence in South Asia says, however, India was risking that Mr Gotabaya could repeat the game Nepal’s Prime Minister KP Olie played with India during the last three years. Mr Oli “gave in to all of Indian protocol demands and political optics, visited Delhi first, proclaimed India first, then waited for India to forget about him, and went on to do more business with China,”the US-India think-tanker told Rediff.com on Thursday.
Sri Lanka: US-India ‘think-tankers’advise New Delhi to put Tamil concerns on the backburner


BBC: உலகச் செய்திகள்
Sat, 18 Jan 2020 19:43


புதினம்
Sat, 18 Jan 2020 19:43
     இதுவரை:  18276008 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3017 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com