அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 01 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow சலனம் arrow 'பூக்கள்' டென்மார்க்கில் வெறறி!
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


'பூக்கள்' டென்மார்க்கில் வெறறி!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சாம். இருதயராஜ்.  
Tuesday, 22 March 2005

தற்போது டென்மார்க்கில் வெற்றிகரமாக ஓடுகிறது பூக்கள் திரைப்படம் !
தமிழக திரைப்படங்களின் வசூலை முறியடித்து புதிய சாதனை !

கடந்த மாசி மாதம் 26ம் திகதி டென்மார்க்கில் திரையிடப்பட்ட பூக்கள் திரைப்படம் இப்போது டென்மார்க்கில் உள்ள பல நகரங்களின் திரையரங்குகளில் வெற்றிகரமாக காண்பிக்கப்படுகிறது. முதல் நாள் ஒரே நகரத்தில் அரங்கு நிறைந்த மூன்று காட்சிகள் காண்பிக்கப்பட்டு இப்போது பல நகரங்களிலும் காண்பிக்கப்பட்டு வருகிறது. முற்றுமுழுதாக ஈழத் தமிழ் மக்களால் தயாரிக்கப்பட்ட இப்படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அனைவருமே ஒழுங்கான முறையில் வந்துள்ள முழுமையான திரைப்படம் என்று வாழ்த்திச் செல்கிறார்கள். மக்களிடையே நிலவும் இந்த நல்ல அபிப்பிராயம் இப்படத்தைப் பார்க்கும் மக்கள் தொகையை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்துள்ளது. இதுவரை திரையிட்ட எந்தத் திரையரங்கிலும் வசூலில் தோல்வி காணாமல் பூக்கள் வெற்றி நடைபோடுகிறது.

மேற்படி திரைப்படம் இரண்டு மணி முப்பது நிமிடங்கள் கொண்ட படமாகும். ஒரு கோடம்பாக்கம் திரைப்படத்தில் வரும் அத்தனை விடயங்களையும் உள்ளடக்கி, அதற்கு மேலாகவும் பல விடயங்களை பார்வையாளருக்கு இப்படம் முன் வைக்கிறது. இலங்கைத் தமிழைப் பேசும் ஒரு திரைப்படம் என்ற வேறுபாடே தெரியாமல் இலாவகமாக தமிழ் மொழியைக் கையாண்டு எடுக்கப்பட்டுள்ளது இதில் காணக்கூடிய இன்னொரு சிறப்பம்சமாகும்.

புலம் பெயர் தமிழ் மக்களின் வாழ்வில் நடைபெறும் கதையை சினிமா மூலம் சொல்வது எப்படி? இந்தக் கேள்விக்கான பதில் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்தது. இப்போது அந்தக் கேள்விக்கான பதிலை பார்வையாளர்களுக்கு தருகிறது இத்திரைப்படம். நாடகத் தன்மையில் இருந்து விலகி சினிமாவிற்கான பிரதான சூட்சுமங்களைச் சேர்த்து கதையை முன் வைத்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் மூலக்கதை பார்வையாளருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.

சுமார் 200 க்கும் மேற்பட்ட தமிழ், டேனிஸ், பொஸ்னிய, துருக்கி, கொரிய, சோமாலிய இளைஞர்கள் என்று பல்லினம் சார்ந்தவர்களையும் உள்ளடக்கி இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டவரின் பிள்ளைகளான இரண்டாவது தலைமுறையினர் வன்முறைகளில் ஈடுபடுவதாக ஐரோப்பாவில் நடைபெறும் பிரச்சாரங்களுக்கு செயற்பாட்டு ரீதியான பதிலைத் தருகிறது இந்த முயற்சி. வெளிநாட்டவரைக் குறைகூறுவதைவிட வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதே சரியான வழி என்று ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு ஒட்டுமொத்தமான விளக்கம் தருகிறது இந்த முயற்சி என்று இதன் வெளியீட்டு விழாவில் பேசிய பல்லின கலாச்சார பிரிவு அதிகாரி 'ரொமி காப்ப' தெரிவித்தார்.

திரைப்படத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உண்டு. ஒரு திரைப்படத்திற்குரிய முக்கிய அம்சங்களோடு கிராபிக்ஸ் காட்சிகள், தந்திரமான சண்டைக்காட்சிகள் எல்லாம் நம்பமுடியாத அளவுக்கு சிறப்போடு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒலிச்சோர்க்கை, வர்ணத்திருத்தம் போன்ற பல பணிகளை தமிழ் இளைஞர்களே ஆய்வு கூடங்களில் வைத்து செய்துள்ளனர். படத்தின் பாடல்கள் மேலைத்தேய இசையைக் கற்று அதைத் தமிழில் தரும் ஒரு முயற்சியாக நடைபெற்றிருக்கிறது.

திரையரங்கங்களில் இப்படத்தை எப்படி டொல்பி சரவுண்ட் முறையில் பொருத்துவது என்பது முக்கிய கேள்வியாகும். ஒவ்வொரு திரையரங்கிலும் உள்ள ஒலியமைப்புக்கள், பிரதான படம் காட்டும் கருவியுடனான தொடர்புகளை நாமே ஏற்படுத்த முடியும். சில உப கருவிகளைப் பொருத்தி இதைச் சாத்தியப்படுத்த முடியும். திரையரங்கத்தில் பணியாற்றும் தொழில் நுட்பப்பிரிவினர் ஆச்சரியப்படும்படி அவர்களுடைய படம்காட்டும் பிரிவை தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்கள் சிறப்போடு பயன்படுத்தி வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் பல திரையரங்கங்கங்கள் புதிய கருவிகளை கொள்வனவு செய்ய பூக்கள் திரைப்படத்தின் தொழில்நுட்பப் பிரிவினரே ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

மேலும் பூக்கள் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் டேனிஸ் மக்களிடையே பரவலாகப் பெருகி வருகிறது. இதன்காரணமாக அரசின் உதவியுடன் டேனிஸ் மொழியின் அடிக்குறிப்புக்கள் போடும் பணி ஆரம்பித்துவிட்டது. டேனிஸ் திரையரங்க உரிமையாளர்கள் மிகக் கூடிய அக்கறை காட்டி விலைகுறைப்பு செய்து தமது திரையரங்குகளை வழங்கிவரும் புதிய சூழலையும் எங்கும் காணமுடிகிறது.

ஈழத்தமிழ் மக்கள் திரைப்படத் துறைக்குள் சரியான காலடியை வைத்துவிட்டார்கள் என்பதை இப்போது பலரும் நிஜமாகவே ஏற்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த நிஜத்தை இப்போது ஒவ்வொரு திரையரங்குகளிலும் நிதர்சனமாகக் காண முடிகிறது.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 01 May 2024 11:13
TamilNet
HASH(0x560da9bb19c0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 01 May 2024 11:13


புதினம்
Wed, 01 May 2024 11:13
















     இதுவரை:  24850773 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3827 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com