அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 01 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow சலனம் arrow ஈழத் தமிழனின் 'கனவுகள் நிஜமானால்'
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழத் தமிழனின் 'கனவுகள் நிஜமானால்'   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஏ. ரகுநாதன்.  
Thursday, 31 March 2005

கடந்த 25.02.2005 லண்டன் ரூற்றிங், லெசர் சென்ரர் இரவு 9 மணிக்கு 'கனவுகள் நிஜமானால்" இரண்டாவது காட்சி (இது லண்டனில் 5வது காட்சியாக திரையிடப்படுகிறது). நம்மவர் படங்களைப் பார்த்துவிடவேண்டும் என்ற வெறியில் அழைத்து செல்லும்படி நண்பனை உபத்திரவப்படுத்தி, அந்த இரண்டாம் காட்சிக்கு இருவரும் இலண்டன் குளிருக்குள் உடல் நடுங்க காத்து நிற்கிறோம். (1939ம் ஆண்டு முதல் விதேசிப் படங்களைப் பார்க்க அலைந்தவன் நான் 1966 முதல் ஈழத்தமிழனின் படைப்புக்களைப் பார்த்துவருபவன்)  முதல் காட்சி முடிந்து பார்வையாளர்கள் திரளாக வெளியே வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நம் கலைஞர்களை நம்மவர் திரளாக வந்து ஆதரிக்கும் காலம் வந்துவிட்டதனை நேரில கண்கள் பனிக்க நெஞ்சு நிமிர ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

எப்படி ஒரு மிகச் சிறந்த படத்தைப் பார்த்துவிட்டு வரும் ரசிக மனங்கள் முகங்கள் மலர வருவார்களோ அப்படி அந்த 300 பேரும் வந்தார்கள். அங்கு நின்று கொண்டிருந்த படத்தில் பங்குகொண்ட கலைஞர்களில் சிலரை அணைத்தவர்கள் சிரித்தார்கள், முத்தமிட்டார்கள், கைகுலுக்கினார்கள். இக்காட்சிகளை à®®à®•à®¿à®´à¯à®šà¯à®šà®¿ பொங்க à®ªà®¾à®°à¯à®¤à¯à®¤à®ªà®Ÿà®¿à®¯à¯‡ மாடியேறி நான்காவது வரிசையில் அமர்ந்தேன். படம் ஆரம்பித்தது. பருத்த என் உடம்பில் பாதியைக் கூட அமர்த்த முடியாத சிறு கதிரைதான் எனக்கு (எங்களுக்கு) இருக்கையாக கிடைத்தது. என் வயதோ 70 நேரமோ இரவு தூங்கப்போகும் பத்து மணிக்குமேல் ஆகியிருந்தது. எப்படிப் பார்க்கப்போகிறேன் என நினைத்தேன். படம் 90 நிமிடங்கள். படம் முடிந்தது எனக்குத் தெரியவில்லை. உடல் அலுப்புப் புரியவில்லை பின்னால் உட்கார்ந்திருந்தவர் ஐயா உங்கடை தலை மறைக்குதென்று ஆர்வமிகுதியால் அடிக்கடி தொட்டுக்கொணடது மட்டும் ஞாபகம்.

பார்வையாளர்கள் ரசித்து மகிழ்ந்து கரைகோஷங்கள் செய்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள். நானும்தான். ஈழத்தமிழனின் 'கனவுகள் நிஜமானால்" இது படத்தின் விளம்பரவாசகம். ஆனால் அது நிஜமாகிவிட்டது. வாழ்த்துக்கள்-தொடரட்டும் உங்கள் பணி.  இதில் பங்குபற்றிய நடிகர்கள் வாசு - அகிலா - கீலிசெல்வகுமார் கந்தன் மற்றும் திரைக்கதை எழுதிய கஜேந்திரா ஒளிப்பதிவு செய்த பொபி. இசையமைத்த வேந்தன் இயக்குநர் புதியவன் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்.


 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 01 May 2024 00:57
TamilNet
HASH(0x563f52660ef0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 01 May 2024 00:57


புதினம்
Wed, 01 May 2024 00:57
















     இதுவரை:  24850352 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6856 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com