அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 08 June 2026

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
தொடர்பு
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கண்ணீருடன்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -எஸ்.பாபு  
Saturday, 09 April 2005

(வணக்கம் மலேசியா இணையத்தளத்தை நோக்கியபோது இலக்கியப்பகுதியில் படித்தவற்றில் பிடித்த கவிதை இது. அப்பால் தமிழ் நோக்கர்களுக்காக இங்கு நன்றியுடன் மீள் பிரசுரமாகின்றது)

உனது தந்தையின் இறப்புச் செய்தி
ஈ-மெயிலில் வருகிறது.
சாப்ட்வேர் சிலந்திவலைப் பின்னலுக்குள்
தகப்பன் நினைவுகளைத் தேடி எடுத்து
கொடுக்கப்பட்ட சிறு இடைவெளியில்
கொஞ்சமாய் அழுகிறாய்.
உயிர்மீட்க உதவாத உனது டாலர்களோடு
நீ வந்து சேரும்போது
எரித்த சாம்பல் கூட எஞ்சியிருக்காது.
அதனாலென்ன நண்பனே..

இறந்து போனவர்களுடன் தொடர்பு கொள்ள
ஒரு வெப்சைட் வராமலா போய்விடும்?


 


     இதுவரை:  28803005 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3060 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com