அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பகை ஏதுள...?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சஞ்சீவ்காந்த்  
Saturday, 09 April 2005

பகை ஏதுள...?


அலைகள் புரள்
அன்னைக் கடல்
நுரைகள் திரள்
அழகுன் உடல்

மலைபோல் எழ
தலைமேல் விழ
உலகம் அழ
பகை ஏதுள...?

கரையைக் கட
காலில் விழு
கதறிஈ அழு
கண்ணீர் விடு

ஆழம் மிகு
கடலே அறி
வீரம் மிகு
தமிழர் குடி

கோரம் மிகு
கொடுமை இது
கொண்டாய் பலி
கொண்டோம் வலி

எதனால் இது
எமக்கேன் இது
எனநீ ஒரு
பதிலைக் கொடு

அழுகைக் குரல்
அகதிச் சுமை
குருதிக் குளம்
போரின் முகம்

இதுநாள் வரை
இதுதான் நிலை
இழந்தோம் பல
இறந்தோம் பலர்

அலையே குறி
ஓயார் இவர்
படகே றுவர்
வலைவீ சுவர்

கோலத் தமிழ்
கொள்கைக் குரல்
வானின் நிழல்
காற்றின் குழல்

தூறும் மழை
புழுதிஈ மணல்
நிலவின் ஒளி
தாய்மண் மடி

இவையே எம்
உறவான பின்
துயர் சூழுமோ?
உயிர் வாடுமோ?


     இதுவரை:  24785382 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2502 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com