அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 01 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow சலனம் arrow ஆண்டிப்பட்டியில் 'அகிராகுரோசவா'
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஆண்டிப்பட்டியில் 'அகிராகுரோசவா'   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மனோஜ்குமார்  
Tuesday, 24 May 2005

விக்டோரியா டீ சிகா-வின் உலகப் புகழ்பெற்ற 'பைசைக்கிள் தீவ்ஸ்' திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. டி.வி.யில் ஓடும் அப் படத்தை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது அக் கூட்டம். சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள். மொழி புரியாவிட்டாலும் கதையோடு ஐக்கியமாகிப் பார்க்கிறார்கள். படம் முடிகிறது. கூட்டத்தின் முன் நின்று அந்த இளைஞர் பேசுகிறார். படத்தைப் பற்றிக் கேட்கிறார். சிறுவர்களும் பெண்களும் தாமாகவே முன்வந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். ரசித்ததையும் புரிந்துகொண்டதையும் சாதாரணமாகப் பார்க்கும் தமிழ்ப் படங்களுடன் இந்தப் படங்கள் எப்படி வேறுபடுகின்றன என்பதைப் பற்றியும் போட்டி போட்டுக்கொண்டு சொல்கின்றனர். கடைசியாக அந்த இளைஞர் அப்படத்தின் காட்சிகள், திரைக்கதை அமைப்பு, கேமரா கோணங்கள், இயக்குநரைப் பற்றிய தகவல்கள் என தொகுத்துக் கூறுகிறார். இப்படியாக திரைப்பட ரசனையை கிராமந்தோறும் கொண்டு சென்று வளர்த்து வருகிறார். அந்த இளைஞர் சென்னையைச் சேர்ந்த ப.திருநாவுக்கரசு.
தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதைச் சார்ந்த கிராமங்களிலும் உள்ள மக்களுக்கு, புகழ்வாய்ந்த சர்வதேசப் படங்களைத் திரையிட்டுக் காண்பித்து வருகிறார். ஒரு டி.வி, விசிடியை வைத்து இந்த திரையிடல் சுற்றுப்பயணம் நடக்கிறது.
ரஷிய இயக்குநர் ஐசென்ஸ்டீனின் 'பேட்டில் ஷிப் ஆப் பொடெம்கின்', பிரபல ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசவாவின் 'ரோஷமான்', சத்யஜித்ரேயின் 'பதேர் பாஞ்சாலி', கிரிப்பித்தின் 'பர்த் ஆப் தி நேஷன்' என்று தொடங்கி பல்வேறு தரம் வாய்ந்த படங்களைப் பார்க்கும் வாய்ப்பை சாதாரண மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்.
'சென்னையில் 1983 முதல் 1990 வரை சென்னை பிலிம் சொசைட்டி தீவிரமாக இயங்கி வந்தது. ஆனால் அதன் பின் சற்றுத் தேக்கம் ஏற்பட்டுவிட்டது. 1994-ம் ஆண்டு உலகத் திரைப்பட நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் சென்னையில் எந்த செயல்பாடும் இல்லையே என்று வேதனையாக இருந்தது. இதனால் நண்பர்களுடன் சேர்ந்து உலகப்புகழ் 'கிளாசிக்' படங்களை தமிழக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கினோம். இதற்கு யமுனா ராஜேந்திரன், ராமானுஜம். மா. பாலசுப்பிரமணியம் உள்பட பல வெளிநாட்டு நண்பர்கள் உதவினர். அவர்கள் அனுப்பிவைத்த சிறந்தபடங்கள் ஐம்பதுக்கும் மேல் சேர்ந்தன. அதைக்கொண்டு நகர்ப்பகுதிகளிலும் கிராமப்பகுதிகளிலும் உலக சினிமாவை திரையிடும் பணியைத் தொடங்கினோம். தற்போது ஓர் இயக்கமாக அது வளர்ந்துவிட்டது' என்கிறார் திருநாவுக்கரசு.
தமிழகத்தில் குறும்படம் மற்றும் ஆவணப்பட ஆக்கங்கள் ஊக்கம்பெற்றதிலும் இவரது பங்கு கணிசமானது.
'குறும்படத்தை எடுப்பது, அதை எப்படி திரை விழாக்களுக்கு அனுப்புவது, விநியோகிப்பது என்பது சிதம்பர ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. குறும்படம், ஆவணப் படம் இயக்குவதில் ஞானம் உள்ள இளைஞர்கள் அதற்கான வழி தெரியாமல் இருந்துவந்தனர். எனவே இதுபோன்ற திறமையுள்ள இளைஞர்களின் படைப்புகளை உலகறியச் செய்ய வேண்டும் என்று கருதினோம். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பலரை முறைப்படுத்தி குறும்படம் எடுக்க வைத்தோம். அதைத் தொகுத்து லண்டன், பாரிஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் திரையிடச் செய்தோம். இதன்மூலம் வந்த பணத்தைப் பிரித்து குறும்படம் இயக்கியவர்களுக்கு சன்மானமும் சான்றிதழும் வழங்கினோம். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. தமிழக இளைஞர்கள் இடையே குறும்படம் எடுப்பதில் புதிய உந்துதலை இது ஏற்படுத்தியது'என்கிறார். வாய்ப்புக் கிடைக்காமல் இருக்கும் அசலான கலைஞர்களை இனம்கண்டு அவர்களுக்கு உரிய வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் சர்வதேசத் தரம் வாய்ந்த சினிமா, ஆவணப்படங்கள், குறும்படங்கள் இங்கிருந்து பரவலாகப் பிறக்கும் என்பது இவர் எண்ணம்.
நவீன சினிமாவுக்காக 'நிழல்' என்ற இதழை நடத்தி வருகிறார். இசைத்துறையிலும் நாட்டம் மிக்கவர். இசைக் கலைஞர்கள் வரலாற்றையும் இசைக் கருவிகளின் வரலாற்றையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வமிக்கவர். 'டி.என். ராஜரத்தினம்பிள்ளை வரலாறு', 'கொடுமுடி கோகிலம்' (கே.பி. சுந்தராம்பாள் வரலாறு), 'வீணை அதன் பேர் தனம்' ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். சினிமா தொடர்பான பல்வேறு ஆய்வு நூல்களையும் வெளியிட்டு வருகிறார். வீணை தயாரிப்பு குறித்த ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார்.
நன்றி:தினமணி


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 01 May 2024 03:59
TamilNet
HASH(0x55f50ece4c30)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 01 May 2024 03:59


புதினம்
Wed, 01 May 2024 03:59
















     இதுவரை:  24850504 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5826 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com