அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 01 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow சலனம் arrow கனவுகள் நிஜமானால்..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கனவுகள் நிஜமானால்..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்.  
Thursday, 02 June 2005

ஈழத்திரைப்பட பூங்கா மலர்ந்துவிட்டது என்று துணிந்து  கூறலாம் போல் உள்ளது. ஜுன் மாதம் முழுவதுமான  பாரிசின் வார இறுதிநாள் நிகழ்ச்சி நிரலினை திரைப்படக்  காட்சி நிகழ்வுகளே நிறைத்திருக்கின்றன.(விபரங்களிற்கு  எமது தளத்தில் செய்திகள் பிரிவில் யாவரும் அறிவது   பகுதியை அழுத்தி தெரிந்து கொள்ளலாம்) கடந்த இரு வாரங்களின் இறுதிநாட்களிலும் இலண்டனில் தயாரிக்கப்பட்டடு புதியவனால் நெறிப்படுத்தப்பட்ட 'கனவுகள் நிஜமானால்..' மொத்தம் மூன்று காட்சிகள் பாரிசில் காண்பிக்கப்பட்டது. ஆனால் இம்மூன்று காட்சிக்கும் போதிய அளவு பார்வையாளர்கள்  வரவில்லை. பார்வையாளர் வரத்தவறியமைக்கு  ஈழத்தமிழ்த் தேசியத்திற்கும் திரைப்படத் துறைக்கும்  என்ன சம்பந்தம் என்ற 'இளக்காரம்' ஒரு காரணமாக  இருக்கலாம். ஆனால் நம்மவரிடையேயான இந்த  இளக்காரத்தை போக்குவதற்கு ஈழத்தமிழ் சமூக  ஆர்வலர்களும் ஊடக்கங்களும் கடுமையாக உழைக்க  வேண்டியது கட்டாயமாகின்றது. ஏனெனில் தமிழ் கூறும்  நல்லுலகிற்கு தமிழ்நாட்டு திரைக்கலை செய்த நாசங்கள்  அளப்பரியது.(இதற்கு எமது தளத்தில் உள்ள சலனம்  பகுதியை அழுத்தினால் பலகட்டுரைகள் இவ்விடயம்  பற்றி பேசியுள்ளதை காணலாம்) ஈழத்து திரைக்கலை  துறையும், ஈழத்து சஞ்சிகை, நூல் வெளியீட்டுத்துறையும்  நலிவுற்றமைக்கு இந்திய அரசின் கலாச்சார  பரிவர்த்தனை ஒருவழிப்பாதையாக அமைந்தது முக்கிய  காரணம். புலம்பெயர்ந்த நம்மவர் தம்வாழ்வை  வலிமைமிக்கதாய் மாற்றி அமைத்ததன் பின்னரும்  இவ்வகை நலிவிலிருந்து மீள முயற்சிக்காது விட்டால்  ஈழத்தேசியம் சிதைவுறும். இன்றைய புலம்பெயர்  சமூகத்தின் பண்பாட்டு கலாச்சாராத்தை வடிவமைப்பது  தமிழ்நாட்டு திரைக்கலை என்றால் மிகையில்லை.  ஆதலால் நாமும் நமக்கென்றோர் நலியாக்  கலையுடையோம் என்பதை நிறுவ வேண்டிய கட்டாயம்  நமது தோள்களிலேயே உள்ளது.  
இந்த கனவுகள் நிஜமானல் திரைப்படம் புலம்பெர்  ஈழத்தமிழரின் இலண்டன் வாழ்வியலை பேச  முற்படுகின்றது. தலைமுறைகளுக்கு இடையேயான  மோதலை முன்னிறுத்தும இந்தப்படம் இதுவரை  புலம்பெயர் நாடுகளில் தயாரிக்கப்பட்ட படங்களின்  உள்ளடக்கத்தில் ஒருபடி முன்னேறியுள்ளதுடன் நம்மவர்  திரைக்கலைக்கான பாதையிலும் அடியெடுத்து  வைத்துள்ளது.
அண்மையில் காலமான க.கலைச்செல்வனுக்கான  அஞ்சலியுடன் தொடங்கிய இத்திரைப்படம் கல்வியை  பகட்டாய் கருதும் இலண்டன் வாழ் தமிழ்க்குடும்பத்தின்  மனோபாவத்தை வெளிப்படுத்தும் காட்சியுடன் விரிய ஆரம்பிக்கின்றது. இலண்டன் தமிழர்களிரிடையே  மலிந்து காணப்படும் வாழ்வியல் போலிமைகள்  பலவற்றை காட்சி சட்டகத்திற்குள் உள்ளடக்கும்  முறைமையில் இயக்குநரின் சமூக நோக்கு தெளிவாக  புரிந்து விடுகின்றது. மற்றைய தேசியங்களை இழிவாக  நோக்கும் உளப்பாங்கு, அசட்டுத்தனமான  சாமத்தியசடங்கு,  போன்ற இன்னோரன்ன விடயங்களை  சுட்டிச செல்லும் இப்டம் சமூக விமர்சனத்தை   துணிச்சலுடன் முன்வைக்கிறது என்றே சொல்லலாம்.   இலண்டன் வாழ் தமிழ்க்குடும்பம் ஒன்றினை சுற்றி  பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையில்  குடும்பத்தலைவனான பாத்திரம் அழுத்தமாக  இடம்பெறுகின்றது. அப்பாத்திரத்தை ஏற்றிருந்த நடிகர்  வாசுதேவனின் இயல்பான நடிப்பும் அப்பாத்திரத்திற்கு  உயிரூட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்  குடும்பத்தலைவியாக ஏற்றவா நடிப்பும் பாத்திர வார்ப்பும்  நல்ல தேர்வென்றே சொல்லலாம்.
ஆனால் இந்த திரைப்படத்தை முன்வைத்து  பேசுவதற்கும், விமர்சிப்பதற்கும் ஏராளமான விடயங்கள்  இருக்கின்றன. ஏனெனில் பல்வேறு குறைபாடுகளை  இப்படம் கொண்டிருக்கின்றது. இவ்விமர்சனங்கள்  சிலவற்றை கனவுகள் நிஜமானால் கலைஞர்களுக்கு  முன்வைத்தபோது அவர்கள கேட்கும் செவி  உள்ளவர்களாய் இருந்தது ஆறுதல் அளித்தது. அத்துடன் தம் திரைப்படைப்பில் இருக்கும் குறைகளை அக்கலைஞர்கள் புரிந்திருக்கிறார்கள் என்பதும் அதற்கான  விமர்சனங்களை எதிர்பார்ரத்திருந்தனர் என்பதும்  இரட்டிப்பு மகிழ்ச்சியளித்தது. இவர்கள் நல்ல  திரைக்கலையை நோக்கி பயணிப்பார்கள என்ற  நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. தமிழ்த் தேசியத்திற்கு  வலுச் சேர்க்கும் திரைக்கலையை வளத்தெடுக்கும்  திரைக்கலை ஆர்வலர்களை வாழ்த்தி வரவேற்போம்.

> பாரிசில் புலம்பெயர் தமிழரின் சினிமாக்கள்

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 01 May 2024 00:57
TamilNet
HASH(0x563f52660ef0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 01 May 2024 00:57


புதினம்
Wed, 01 May 2024 00:57
















     இதுவரை:  24850314 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 7182 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com