அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 20 July 2025

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மனமெனும் மரங்கொத்தி.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்.  
Monday, 06 June 2005

இரவு வந்து பகலை மூடியது.
பின் பின்வாங்கிச் சென்றது.
மீண்டும் வந்தது பகலை மூடியது.

அலையலையாய் இரவுகள்
வந்து பகல்களை மூடுவதும்
விடுவிப்பதுவுமாய்,
காலம் எதற்கும் அகப்படாமல்
எதனுடனும் ஒட்டிக்கொள்ளாமல்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.

மெல்ல மெல்ல என் கிராமத்தின்
வீதிகள் பல இல்லாமற்போனது போலவும்,
என் வீட்டிற்குள் புல்வளர்ந்து
பற்றையாகியது போலவும்,
என் கிணறு தூர்ந்து
தரையாகியது போலவும்,

ஞாபகங்கள்
அலைகளால்
அழிந்து  கொண்டே
போகின்றனவே.

பட்டுப்போன தென்னையை
அலகால் கொத்திக் கொத்திப்
புழுக்களைத்தேடும்
மரங்கொத்திபோல்
இன்னமும் எதனைத் தேடுகிறாய்
மனமே ?

19.05.2005.


 


     இதுவரை:  27190121 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2542 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com