அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இருண்மையை நோக்கி...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மெலிஞ்சி முத்தன்  
Monday, 06 June 2005

ஒரு பெருமூச்சின்
வலித்த புள்ளியொன்றில்                            தொடங்குகிறேன்.                                                       உறை போட்ட கலவிகட்குள்
சின்னத் துளிகளாய்
இருண்மைக்குள் போன கூறுகளே
ஒன்று கேளீர்!

பிந்தி வீழ்ந்த துளியொன்றால்
பிறழ்வாய் பிறந்தவன் நான்.
நந்திபோல்
கர்ப்பக்கிரகங்களை மறைக்கும்
வித்தைகளை கண்ணுற்று
கலங்குகிறேன்.
கருவறைக்குள் போகும்போதே
மரபு சுமந்தேன்.
இன்னமும் இறக்கி வைக்கவில்லை.

வெளியே வெளிச்சமென்றார்கள்.
வெளிச்சமென்றால் என்ன?
இருளின் எடைகுறைந்த பாகம்தானே?
எப்போதும் இருப்பதால்தான்
இருளுக்கு இருளென்று பெயராம்!
நீவிர்
எப்போதோ இருண்மைக்குள் போனதால்
இருக்கின்றீர் என்பதுதான் உண்மையோ!
நானோ
வெளிச்சங்களைப் பொறுக்கி
இருள் செய்து கொண்டிருக்கிறேன்.
உமக்கொன்று தெரியுமா?
உண்மையில் இருளைத்தான்
வெளிச்சமென்று சொல்லிக் கொள்கின்றார் பலர்.
இருளின் வெளிச்சங்களுக்குள்
தொலைந்து கிடக்கின்றது
இருளின் செறிவு மிக்க வாழ்வு.

வெறென்ன துளிகளே
இன்னொரு நாளில்
இறந்தவர்களின் கல்லறைகளில் அமர்ந்து
சாத்தான்களின் இலக்கணங்களையும் கற்று
வாழக்கைக்கான பாடலின்
வரிகள் செய்வோம்.

அதுவரை
வெளிச்சங்கள் பொறுக்கி
இருள் செய்கிறேன்.

05-06-2005

 


     இதுவரை:  24773196 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2257 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com