அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இலண்டன் நாடக விழா - சில பதிவுகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு.புஷ்பராஜன்  
Tuesday, 01 June 2004

இலண்டனில் நாடக அரங்க முயற்சிகள் மிக அருந்தலாகவே நடைபெறுவதுண்டு. "அவைக்காற்று கலைக்கழகத்தின்" முயற்சிகளோடு முன்னர் "களரி" அமைப்பும் செயற்பட்டு வந்தன. இன்று "களரி" அமைப்பின் செயற்பாடுகள் இல்லாமலே போய்விட்டது. பின்னர் அரங்காற்று குழவினரின் செயற்பாடுகள் தொடர்ந்ததாயினும் சீரிய அரங்க முயற்சிகளின் அருந்தல் தன்மை நீடித்துக்கொண்டுதன் இருக்கின்றது.

27-09-2003ல் இலண்டன் அரங்காற்றுக் குழவினர் பிரான்ஸ், சுவிஸ் ஆகிய நாடுகளில் இயங்கும் தமிழ் நாடகக் குழக்களுடன் இணைந்து இலண்டன் லூசியம் பகுதியிலுள்ள கோல்ட் சிமித் கல்லூரியின் நாடக அரங்கில் ஒரு நாடகவிழாவை நடாத்தியிருந்தனர்.

பிரான்ஸ் நாடகப் பயிற்சியாளரான அக்ளி அலாஃப் உதவியுடன் தயாரிக்கப்பட்ட "மேட் இன் சிறிலங்கா", "நான் ஒரு கரப்பான் பூச்சி", "விலங்கோடிருந்தல்" ஆகிய ஓரங்க நாடக வகையில் அமைந்திருந்த இம்மூன்று அளிக்ககைளின் கருவும் சிறுசிறு அனுபவ சம்பவ வித்தியாசங்களைக் கொண்டிருந்தாலும் பொதுவாக ஒரே தளத்தில் இயங்குபவைதான். புலம்பெயர் வாழ்வில் வேலைத்தளங்களில் எதிர்கொள்ளும் துயர்வாழ்வு, தந்திரமாக நாகரிக வார்த்தைகளால் அவனைத் தனக்குரிய விதத்தில் வார்த்தெடுக்கும் முதலளாளிகள், உழைத்தாகவேண்டிய நிர்ப்பந்தங்களால் உணர்வுகள் உறுத்தியபோதும் புறமொதுக்கி தனக்காகவும் தொலைதூர உறவுகளக்காகவும் வாழும் வகைமாதிரியான உருவாக்கம். தா.பாலகணேசனே இம்மூன்று அளிக்கையிலும் பெரும்பாலும் தனிநபர் நடிப்பாக வெளிப்படுத்தினார். இதில் உணர்வு நிலைகள் கவிதை வரிகள் கூர்மையாக பளிச்சிடுகின்றன. நடிப்பில் வழமையான நாடகப்பாங்குகளே வெளிப்பட்டன. ஓரங்க நாடகத்திலும் ஒற்றைமனிதன் அளிக்கையிலும் நேரஅளவு கவனிக்கப்பட வேண்டுமென கருதுகின்றேன். மேட் இன் சிறிலங்காவில் முதலாளியின் மன உணர்வுகளை அல்லது சிறிலங்கன் பற்றிய பார்வையை முதலாளியின் மூலமே வெளிப்பட வைத்திருந்தால் கருத்து ரீதியாகவும் பார்வையாளர் மனநிலை ரீதியாகவும் சமநிலை ஏற்பட்டிருக்கலாம்.

சுவிஸ் தமிழ் நாடக கல்லூரியின் தயாரிப்பாக "ஆடுகளம்", "அம்மையே அப்பா ஓப்பிலாமணியே.." அளிக்கை செய்யப்பட்டன. சிலம்பம் கிளித்தட்டு ஆகிய கிராமிய விளையாட்டு வடிவங்களுடன் ஏனைய குறியீட்டு வடிவங்களுக்கூடாக இலங்கையின் இனப்பிரச்சனையின் போராட்ட நிலைகளையும், சமாதான முயற்சியின் பல்வேறு வடிவங்களையும் மக்கள் மனநிலைகளையும் ஆடுகள் கொண்டுள்ளது. இலங்கை அரசு சிலம்புக கம்பால் ஒரு முழவட்டம் போட முனைந்தபோது தமிழ்த் தரப்பு அதைத்தடுத்து அரைவட்டம் போடுவது வித்தியாசமாகவும் ஆர்வமாகவும் இருந்தது.

கருத்தரீதியாக  சர்வதேச மத்தியத்துவும் ஏற்பட்டவுடன் இந்தியாவின் பிரதிநித்துவம் விலகியதாக அரங்கில் காட்டப்பட்டுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு அசைவிலும் இந்தியா தன் இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கின்றது. தென்னாசிய மேலாதிக்க பின்னணியில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, யப்பான், பாகிஸ்தான் என ஒரு பெரிய சூதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் பிரசன்னத்தை தொடர்ந்திருக்கலாம்.

வழமையான வில்லுப்பாட்டு வடிவத்தின் பின்னணியில் அரங்க அளிக்கைகள் இணைந்த ஒரு கலப்பு வடிவம் அமமையே அப்பா ஒப்பிலாமணியே..! இது தலைமுறை இடைவெளிகளின் கலாசார நெரிதல் மோதல் பற்றியது. பெரும்பாலும் புலம்பெயர்ந்த பழைய தலைமுறையினரின் பார்வையிலேயே சொல்லப்பட்டுள்ளது. இருதலைமுறையினரும் வெவ்வேறு உலகங்களுடன் வாழ்கிறார்கள். பழைய தலைமுறையினர் புலம்பெயரும் போது தம்மோடு கொண்டுவந்த கலாசார பண்புகள் தொடரப்படுவதில்தான் வாழ்வின் அர்த்தம் இருக்கின்றதென நினைக்கிறார்கள். இதற்கெதிரான கூரிய சவால்களை வெளியே இவர்கள் எதிர்கொள்வதில்லை. புதிய தலைமுறையினர் இருகலாசார கலவையில் திக்குமுக்காடுகிறார்கள். வீட்டில் ஒரு பண்பு வெளியில் பாடசாலை நட்பு என்று வேறெதனை தெரிவு செய்வதென்பதின் அல்லாட்டம் சீரிய ஆய்வுக்கும் பண்புக்கும் உரிய தளம். எதிரில் எல்லையற்று விரியும் ஒரு தளத்தை எதிரில் எல்லைகளுடன் தெரியும் ஒரு தளத்திலிருந்து நோக்கலாமா...? அவர்கள் தரப்பிலிருந்தும் ஆராய்வதுதான் பிரச்சனையின் வேரினைத்தொடும்.

இலண்டன் அரங்காற்றுக் குழுவின் மயானகாண்டம்-2 செம்மணியின் மனித புதைகுழி தோண்டுவது பற்றியது. ஆயினும் மயானகாண்டம்-2 என்ற தலைப்பு வலுவான உணர்வினை ஏற்படுத்துகின்றது.

அரிச்சந்திரன் தன் சந்திரமதியையும் லோகிதாசனையும் மயானத்தில்தான் கண்டுகொண்டான். ஆனால் தான் காவல்கொண்ட சுடலைக்கப்பால் எந்த மயானமும் இருக்கவில்லை. ஆனால் இலங்கையின் தமிழ் நிலப்பரப்பு மயானங்களால்தான் நிறைந்திருக்கின்றது. எத்தனை அரிச்சந்திரர்களும் சந்திரமதிகளும் லோகிதாசன்களும். இவர்கள் சித்தப்பிரமை பிடித்தவர்களாய் உறவுகளின் புகைப்படங்களைக் கையில் கொண்டு அலைபவர்களாய்தானே ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தலைவிரிகோலமாய் கல்லறையைக் கட்டியழும் அந்தத்தாய் தமிழீழ மாதாவின் குறியீடா?

வெவ்வேறு வகைகளில் பலரும் அனுபவித்த துயரங்களின் பிரதி அரங்கின் அளிக்கையில் மிகவும் கூர்மையாக உணர்வுகளை தொற்றவைத்தார்கள்.

அரங்க அளிக்கை என்ற வகையில் மயானகாண்டம்-2, ஆடுகளம் ஆகியவைகள்  ஏனையகைளைவிட பல சிறப்புத் தன்மைகள் கொண்டவை. பாத்திரங்களின் அசைவுகள் அரங்கைப் பகிர்வு கொண்ட விதம் குறிப்பிடத்தக்கவையே. பொதுவாக எல்லா நாடகங்களிலும் இசை ஒளி ஆகியவைகளின் பங்கு குறைவாக இருந்தமை அதன் செழுமைத்தன்மைக்கு எதிராக இருந்தது.

எல்லா நாடகங்களும் சீரிய தளத்தில் இயங்க முயன்றிருப்பது நல்ல அறிகுறிதான். இன்னும் செல்லவேண்டிய தூரம் வெகுதூரத்தில்தான் இருக்கின்றது. பார்வையாளர்களின் பங்கு வருந்தத்தக்க நிலைதான். இது ஆரோக்கிமான நிலையல்ல.

*05-10-2003 இலண்டன்


     இதுவரை:  24784236 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5112 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com