அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 01 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow சலனம் arrow பொதுப்புத்தியின் சுட்டெண்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பொதுப்புத்தியின் சுட்டெண்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: முகிலன்  
Wednesday, 29 June 2005

சாதாரண பார்வையாளர்களின் பொதுப்புத்தியின் சுட்டெண்ணை வெளிப்படுத்திய
சார்சல் - குறும்படமாலை 2005-


1.  அழியாத கவிதை
2.  தாகம்
3.  கனவுகள்
4.  மனமுள்
5.  விலாசம்
6.  நிழல்யுத்தம்
7.  நதி


ஆகிய குறும்படங்கள் நிரம்பிய பார்வையாளர்களைக் கொண்ட சிறிய அரங்கில் 25. 06. 2005 அன்று காண்பிக்கப்பட்டன. படம் பார்த்ததும் ஓடும் வழமைக்கு மாறாக உடகார்ந்திருந்து கலந்துரையாடலில் கணிசமான பார்வையாளர்கள் கலந்தது சிறப்பென்றே கூறவேண்டும். பார்வையாளரில் பெரும் பகுதி பெண்களும், இளைஞர்களாகவும் காணப்பட்டனர்.


· - எல்லாமே சோகம் ததும்பினதான படையலாக எமக்குத் தந்தால் நாங்கள் என்ன செய்வது?, எமது மனதை ஆசுவாசப்படுத்த, மகிழ்வூட்டக் கூடிய படங்களாகத் தரமுடியாதா? - என்ற அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தை முதலிலேயே கொட்டினார் நடுத்தர வயதான குடும்பத்தலைவி.


· - மனமுள் முடிவைச் சொல்லவில்லை, இவ்வகைப்பெற்றோருக்கு விளக்கமான தீர்வு தரவில்லை - என்றாள் ஒரு இளைஞி.
· - மனமுள் பெற்றோருக்குப் பாடம் புகட்டியிருக்கவேண்டும் - என்றான் துடிப்புடன் ஒரு பள்ளி மாணவன்.


· - சிகரெட் பிடித்தல், மதுபானம் குடித்தல் போன்ற தீய பழக்கங்கள் வராதவாறு படங்கள் தயாரிக்கப்படல் வேண்டும் - என்றார் சமூகசேவை புரியும் தொண்டர் ஒருவர்.


· - கனவுகள் கலகலப்பாக இரசிக்கப்பட்டது. தாகம் வித்தியாசமான படமாகவிருந்தது. நம்மவர்கள் நன்றாக நடிக்கிறார்கள். குறிப்பாக தற்போது தொலைக்காட்சியில் வரும் நம்மவர் பாடல் காட்சிகளின் திறமை..... என்று பரவலான கருத்துகள் வெளிப்பட்டன.


· - நதி படத்தை ஒரு ஞாயிறன்று முழுமையாகப் படமாக்கினேன் - சிறப்பாளராக கலந்து கொண்ட நடிகரும் திரைநெறியாளருமான பாஸ்கரன். இவரது நடிப்பாற்றலை கரகோசத்துடன் அவை பாராட்டியது.


· - நிழல்யுத்தம் காண்பிக்கப்பட்டபோது, கோயிலுக்குப் புறப்படத் தயாரான கதாநாயகி அணிந்திருந்த நகை, ஆடை பற்றி பெண்களது பகுதியில் மகிழ்வுடன் சலசலப்பேற்பட்டது.


· - இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்ளாகக் கலந்து பார்வையாளர்களை மகிழ்வித்தவர்கள்
1. திரு வதனன் (2005 பாரிசில் முதல் பரிசு பெற்ற -எதுமட்டும்- இயக்குநர்)
2. திரு மோகன் (2003 பாரிசில் வெளிவந்து பாராட்டினைப் பெற்ற -விலாசம்- நடிகர்)
3. திரு பாஸ்கரன் (2005 பாரிசில் இரண்டாவது பரிசு பெற்ற -நதி;- இயக்குநர் மற்றும் நடிகர்)


இக்குறும்படங்களை நான் பத்து தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன் ஆயினும் நன்றாக இன்றும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது என்றார் எல்லாம் நிறைவுற்றதும் எம்முடன் பணியாற்றும் திரைக்கலை ஆர்வலர்.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 30 Apr 2024 23:56
TamilNet
HASH(0x558878f22ed8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 30 Apr 2024 23:56


புதினம்
Tue, 30 Apr 2024 23:56
















     இதுவரை:  24850308 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 7228 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com