அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 04 December 2023

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


புதையல்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மெலிஞ்சி முத்தன்  
Thursday, 08 September 2005

மொட்டைக் கனவுகள் பூக்கும்
அற்புதத் தீவுக்கு
புதையல் எடுக்கப் புறப்பட்டு வந்தான்
நீண்ட கனவுகளின்
சொந்தக்காரன் ஒருவன்.

நான்குபுறமும் 'கடனால்' சூழப்பட்ட
அத்தீவின்
வீதியோராத்து விளம்பரப் பலகைகளின்
நிர்வாணப் பெண்களோடு
எலும்புகளை உரசி
காமத்தீ மூட்டி குளிர்காய்ந்தான்.

அவன் தனது ஆயுள் ரேகைகளை
ஆளும் வர்க்கத்திடம் பறி கொடுத்தான்.

அவனது முற்றத்தில் பல
புது விளக்குமாறுகள்
கூட்டிக்கொண்டிருந்தன
பின்னாளில் அவைகளே பழசாகி
குப்பைகள் ஆகின.

அவன் புதையல் எடுக்கத் தோண்டுகையில்
பல மனித எச்சங்களைக் கண்டான்.
தோண்டித் தோண்டி
அவனே புதைந்து போகிறான்.


     இதுவரை:  24326934 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2042 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com