அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 09 December 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எதற்காக அழுகிறோம்?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நளாயினி தாமரைச்செல்வன்  
Friday, 09 September 2005



காலத்தின் கடமையை
எட்டி உதைத்தவிட்டு
ஒராயிரம் மைல் கடந்தோம்.

எங்கள் வலிகளை
தூக்கி இறக்கி வைக்க
வலுவான வார்த்தைகள்
இல்லைத்தான்.

நறுமண ஞாபக
குவியல்களும்
உங்கள் வலிகளின்
முனகல்களும் தான்
எங்களை வாழச்சொல்கிறது.

முகாரிகளுக்குள்ளும்
உறைபனி முகடுகளுக்குள்ளும்
எம் உணர்வுகளை
முக்காடு போட்டு
மறைத்துக்கொண்டாலும்
எல்லாம் பொய்த்து விடுகிறது.

சில செயல்கள்
எதற்காக செய்கிறோம்
என்றே தெரியாமல்
பல தடவை செய்தாச்சு.

அடுத்த முறை இப்படி
செய்யக் கூடாது என
மனது சப்தமின்றி
சத்தியம் செய்தாலும்
ஏதோ செய்துதான்
தொலைக்கிறோம்.

வண்ணாத்துப்பூச்சியை
தும்பியைப்பிடித்து
சின்ன வயசில்
சிரச்சேதம் செய்தவர்கள்-நாம்

சின்னக் குருவி ஒண்டு
சாகப்போறதைப்பாத்து
காப்பாத்துங்கோ
காப்பாத்துங்கோ
என அரற்றிய என்னை
இழுத்துப்பிடித்து
என்ன நடந்தது உங்களுக்கு
என்கிற போது தான்
சுய நினைவுக்கு வந்திருக்கிறோம்.
 
நறுமண ஞாபக குவியல்களுக்கள்
உங்கள் ஆறா வலி முனகலுக்குள்
அடிக்கடி மூழ்குவதால்
சுயநினைவை இழக்கின்றோம்.

ஆனாலும் என்ன
வண்டில்காரன் தூங்கிவிட்டால்
மாடு பத்திரமாய்
வீடுவந்து சேர்வது போல்
எம் நாளாந்த கடமைகள்
அத்தனையும் நடக்கத்தான்
செய்கிறது.


அருகில் வந்து
யாரும் கதை கேட்டால்
உணராது
என்ன செய்யுறீங்கள் என
கரம் ஒன்று தொடும்போது
மட்டுமே திடுக்கிட்டு
விழித்துநிற்போம்.
அழும் விழிகளுடன்.


பயத்தில் அழுகிறோமா?
நினைவால் அழுகிறோமா?
வலிமுனகலால் அழுகிறோமா?
இந்த வெள்ளையர்க்கு
எங்கள் சோகம் எப்படி
புரியும் என நினைத்து அழுகிறோமா?
தலைசாய்த்து நாம்  ஆற அருகில்
ஒரு à®®à®Ÿà®¿ இல்லையே  என அழுகிறோமா?


எதற்காக அழுகிறோம்?
இன்னும்தான் புரியவில்லை.


     இதுவரை:  26118108 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6008 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com