அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 25 September 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 20 arrow ஈழத்து ஓவியர் க.இராசரத்தினம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழத்து ஓவியர் க.இராசரத்தினம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தா. சனாதனன்.  
Sunday, 11 September 2005

ஈழத்தமிழரிடையில் பல தேவைகளுக்காக 'படம்' என்பது புளக்கத்திலிருந்தாலும், ஓவியத்தை தமது சுய ஆர்த்மாத்த வெளிப்பாடாக, திருப்தியாக காண்கிற 'ஓவியர்களை' இனம் காணல் என்பது அரிதானதொன்று. இந்நிலையில் ஓவியனாக இருத்தல், ஓவியனாக வாழ்தல் என்பதென்பது மிகவும் அருந்தலானதும், புறநடையானதுமான விடயங்களாகவே எமது சமூகத்தில் இன்றும் இருந்து வருகின்றன. எமது பிரதேசத்தின் சமூக வரலாற்று, பொருளாதார நிலைவரங்கள் ஓவியம் என்பதை கலை வெளிப்பாடு என்பதிலும் ஆசிரியர் தொழி லுடன் வர்த்தக விளம்பரப் பலகைகளுடனும் தொடர்புபடுத்திக் காணவே எம்மைப் பழக்கியுள்ளன. அரச மற்றும் வேறு நிறுவனப்பட்ட ஆதரவுகள் அற்ற நிலையில் தனது உள்ளார்ந்த அழைப்புகளுக்கு மாத்திரம் பதில் அளித்துக்கொண்டு ஓவியனாக வாழ்தல் என்பது சவால்கள் நிறைந்த போராட்டம் என்பதுடன் புதினமான விடயமும் கூட. ஓவியர்களாக இருந்த ஒரு சில புறநடையான பள்ளி ஆசிரியர்களுடன்தான் நவீன யாழ்ப்பாணத்தின் ஓவிய வரலாறு ஆரம்பிக் கின்றது. இவர்கள் தான் 'ஓவியம்' என்ற கலை வடிவத்தை எமது சமூகத்தில் தக்க வைக்க தனித்து நின்று போராடியவர்கள். உரிய அங்கீகாரமும் எதிர்பார்த்த பலனும் கிட்டாமலும் தொடர்ந்து இயங்கிய மூத்த ஓவியர்களின் படைப்புகளாலும் செயற்பாடுகளாலும்தான் இன்று அடையாளப்படுத்தத்தக்க ஓர் ஓவிய வரலாறு உருவானது.

இந்த வரலாற்றில் தனது 78 ஆவது வயதில் எம்மை விட்டுப் பிரிந்த ஓவியர் இராசரத்தினத்திற்கு தனித்துவமான இடமுண்டு. 1927 இல் பிறந்த இவர், சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியப் பயிற்சி பெற்றவர் என்பதுடன் யாழ்ப்பாணத்தின் முன்னோடி ஓவிய அமைப்பான வின்சர் கலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டவர்.

அவரின் நீண்ட சித்திர ஆசிரியர் பணிக்கு மேலாக அவர் வரைந்த மெய்யுரு ஓவியங்கள் (Portrait)யாழ்ப்பாணத்து ஒவிய வர லாற்றில் முக்கியமான இடத்தினை அவருக்குப் பெற்றுத்தந்தன. பெரும்பாலும் மேலைத்தேய அக்கடமி யதார்த்தவாத அணுகுமுறையைத் தழுவிய அவரது மெய்யுருக்களில் உள்ள தீர்க்கமான வரைதல் முறையும் தூரி கைக் கையாள்கையும் வர்ணப் பாவனையும் மிகுந்த கவனிப்பிற்குரியவை. அத்துடன் இம்மெய்யுருக்களில் கொணரப்பட்ட உயிரோட்டமும் பாத்திரங்களின் குணவியல்பும் முகச்சாயலும் மெய்யுருவரைதலில் அவருக்கிருந்த தேர்ச்சியையும் தாடனத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. இவரால் எழுதப்பட்ட மெய்யுரு பற்றிய நூல் தேர்ச்சிபெற்ற கலைஞனுக்கு உத்திநுட்ப திறனுடன் இருக்க வேண்டிய கலை வரலாற்று விமர்சன அறிவிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.

இறக்கும் வரை ஓவியம் பற்றிய ஓயாத வாதப் பிரதி வாதங் களுடனும் சர்ச்சைகளுடனும் எந்தவித சமரசமும் அற்ற கல கக்காரனாகவே திகழ்ந்த ஓவியர் இராசத்தினம் எமது சமூகத் தில் காணக்கிடைக்கும் புதினங்களில் ஒருவர். அவரின் ஓவி யங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பின்னாலிருந்த வலிமையும் ஓவியன் என்ற அடையாளத்தின் கிறுக்கும் எமக்குணர்த்துவது அவருக்குத் தன்மீதிருந்த நம்பிக் கையையும் ஓவியம் மீதிருந்த பற்றுறுதியையும் தான் ஓவியனாக அவரின் கலகத்தனமாக இருப்பும் அதற்கான தனித்த போராட்டமும் இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் அழுத்தமாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். அதுதான் அவரின் பங்களிப்பையும் இழப்பையும் சரிவர இனங்காண உதவும் என்பதுடன் அதுதான் இன்றைய யாழ்ப்பாணத்து கலைச் சூழலுக்கான வழிகாட்டியாகவும் அமையும்.

நன்றி: உதயன் 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 25 Sep 2023 00:50
TamilNet
HASH(0x5579d613abf8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 25 Sep 2023 00:38


புதினம்
Mon, 25 Sep 2023 00:50
















     இதுவரை:  24044274 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1412 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com