அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 08 October 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


போர் சப்பித் துப்பிய எச்சங்களாய்...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வெங்கட் சாமிநாதன்  
Monday, 19 September 2005

ஜீவனுடன் 2 நாட்கள்  
 
டொரோண்டோ போய்ச்சேர்ந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே ஏற்கெனவே எழுத்து மூலம் எனக்கு அறிமுகமானவர்களும் நான் அறிமுகமாகியிருந்தவர்களும் நேருக்கு நேர் சந்தித்து உரையாடக் கிடைத்த சந்தர்ப்பங்கள், மிக மகிழ்ச்சியானவை. சில சமயங்களில் ஆச்சரியம் தந்தவை.

எனக்குத் தெரியும், எண்பதுகளின் தொடக்கம் தொடங்கி, உயிர் பிழைக்க, ஊரை, நாட்டை விட்டு வெளியேறி, எங்கெங்கோவெல்லாம் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்றெல்லாம் அலைந்து, துரத்தப்பட்டு, கடைசியாக ஒரு கணிசமான பேர் கனடா போய்ச் சேர்ந்திருந்தனர்.

அதிலும் டோரண்டோ நகரில், கிட்டத் தட்ட ஒரு லட்சத்திற்கும் மேல் இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். எனக்கு வேடிக்கையாக இருந்தது, ஆங்கிலம் அவ்வளவாகச் சரளமாகவோ, அதிகமாகவோ பேசப் பழகியிராத, ஆனால் பிரெஞ்சு மொழிதான் அதிகம் சிரமமில்லாமல் பேச முடியும் என்று சொல்லும் தமிழர்களையும் காண முடிந்தது.

அவர்களில் நான் சந்திக்கும் வாய்ப்புள்ளவர்கள், கவிஞர்களாகவோ, சிறுகதை, நாவல் எழுதுபவர்களாகவோ இருக்கக்கூடும். ஆனால் அங்கு ஓவியர் ஒருவரைச் சந்திப்பேன் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஏன் இருக்கக் கூடாது? இருக்கலாம்தான். ஆனால் சாத்தியங்கள் குறைவு என்ற காரணத்தால்தான்.

"ஜீவன் வருவார் உங்களை அழைத்துப் போக' என்றார், மகாலிங்கம். மகாலிங்கத்தைப் பற்றி நிறைய சொல்லவேண்டும், அது இன்னொரு சந்தர்ப்பத்தில்.

காரிலிருந்து இறங்கி, உள்ளே வந்த இளைஞர், "நான் ஜீவன். உலகத்தமிழ் இணையத்தில் நீங்கள் எழுதி வருவதை விடாமல் படித்து வருகிறேன்' என்றார். அட, இணையம் இப்படிக் கூட எங்கெங்கோ இருந்தெல்லாம் அறிமுகங்களையும் நண்பர்களையும் தேடித் தருகிறதே என்று மகிழ்ச்சியாக இருந்தது.

இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்றாலும், நான் எழுதுவதற்கு இணக்கமான அறிமுகங்கள் கிடைத்ததுதான் ஆச்சரியம். உள்ளூரிலேயே விலைபோகாத ஆள் அல்லவா நான்! மத்திய கிழக்கு அரபு நாடு ஒன்றிலிருந்து நான் ஜாதி வெறியன் என்று முடிவு செய்து, தன் சீற்றத்தையெல்லாம் கொட்டி ஒரு நீண்ட கடிதம் வந்தது. அது ஒன்றுதான் எனக்கு வந்த ரசிகர் கடிதம்.

"குறிப்பாக, நீங்கள் ஒரு டிஜிட்டல் ஒவியர் பற்றி எழுதியிருந்தது, நீங்கள் இங்கு வந்துள்ளதால் சந்திக்க வேண்றுமென்று நிரம்ப ஆவல்" என்றார் ஜீவன். "ஏனெனில், இப்போது நானும் கணினியிலேயே எனது ஓவியங்களையும் தீட்டுகிறேன். இங்கே சில மாதிரிகளை உங்கள் பார்வைக்காகக் கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொல்லித் தான் கொண்டு வந்திருந்த, கணினியில் உருவாக்கி, அச்சுப் பதிவு எடுத்திருந்தவற்றைக் காட்டினார்.

அவரது வர்ணத் தேர்வுகளும், உருவச் சமைப்பும் அவரது தனித்துவத்தோடு, கண்ணைப் பறிக்கும் ஒளிவீச்சுடன் உரத்த குரல் எழுப்பிக் கதறுவது போல் இருந்தன. ஒன்றிரண்டு உருவங்களில் கண்கள் பளிச்சிட்டு, அவற்றிற்காகவே முகம் வரையப்பட்டது போல் தெரிந்தன. அநேகமானவற்றில் கண்கள் இருக்கும் இடத்தில் ஒரு கோடு அல்லது ஒரு இருள் பூச்சு.

"இதற்கு முன்னால் என்ன செய்து கொண் டிருந்தீர்கள்?' என்று கேட்டேன். "கோடுகளால் ஆனவற்றையே வரைவேன். என் ஆரம்பமே, எனக்கு இதில் ஈடுபாடு வந்ததே அப்படித்தான். சிறு வயதில் அப்பா கோவிலுக்கு வர்ணச் சீலைகள் வரைவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நானும் வரைவேன். வரைவது இயல்பாக வந்தது. நான் எங்கும் கற்றுக்கொள்ளவில்லை. சின்ன வயதில் நிறைய வரைந்து வீட்டில் சுவர்களில் ஒட்டி வைத்திருப்பேன். இது எனக்குத் தொழிலோ, சம்பாதிக்கும் வகையோ இல்லை. என் இஷ்டத்திற்கு வரைகிறேன்...' சொல்ýக்கொண்டே போனார், ஜீவன்.

"உங்கள் உலகத்தமிழ் இணையக் கட்டுரைகள் எனக்குப் பிடித்தவை. நான் அவற்றைத் தொடர்ந்து படித்து வருக்கிறேன். இதோ இது உங்கள் பார்வைக்கு' என்று இணையத்தில் வந்த கட்டுரைகள் அனைத்தையும் அச்சுப் பிரதி எடுத்து "ஸ்பைரல் பைண்டிங்' செய்து புத்தகமாக்கியதை என் முன் வைத்தார்.

இப்படி ஒரு வாசகரை நான் கண்டதில்லை. திகைப்பாக இருந்தது. இரண்டடிக்கு மூன்றடி என நீள் சதுரத்தில் பெரிய அளவில் அச்சுப் பதிவுகள் எடுத்த தன் டிஜிட்டல் ஓவியங்களை அறை முழுதும் நிரப்பி, அந்த அறையையே ஒரு ஓவியக் கண்காட்சியகம் ஆக்கிவிட்டார்.

நற்ஹ்ப்ண்க்ஷ்ங்க் ச்ண்ஞ்ன்ழ்ங்ள்-க் கூட, கண்கள் தீட்டப்படாத, அல்லது வெறும் நிழல்பூச்சுகளாக, ஒற்றைக் கோடுகளாக வரையப்பட்டவற்றில் கூட சோகமும் வேதனையுமே படர்ந்திருந்தன. வாýப வயதை எட்டிய காலத்திýருந்து ஜீவன் அறிந்தது அவர் மக்கள் வன்முறையால் கொடுமைப்பட்ட வாழ்வு தான். அதுதான் அவர் பாதிப்பாக இருந்தது. இந்தப் பாதிப்பு என்றென்றும் நீளும், உடன் வாழும் பாதிப்பாக இருந்துள்ளது. அவருக்கு மட்டுமல்ல.

அவர் ஒரு பேட்டியில் சொல்கிறார்: "வானத்தை அண்ணாந்து பார்க்கும்போது வெளிர் நீலமோ, மாலை பொன் மஞ்சள் நிறமோ எனக்குத் தெரிய வில்லை. இரைச் சலுடன் இறக்கை விரிக்கும் இயந்திரப் பிசாசுகளுக்கு ஒளிந்தோடும் மக்களும் அவர்களின் அவலங்களும்தான் காட்சிகளில் வந்து போகின்றன. எனவே இருண்டு கருகிப் போகிறது எனக்கான வானம். குண்டு பட்டுச் சிதறிச் சிதிலமாகிப் போகின்றன பாட சாலைகள், கோவில்கள், வீடுகள், மனிதர்கள் என.

இவற்றை ஆக்ரோஷமாய் அதே கொடூரங்களுடன் பதிவு செய்ய.... என்னைப் பாதிப் பவற்றை நான் கீறுகிறேன். மக்களின் துன்பங்களும், துயரங்களும் என்னை வெகுவாகப் பாதிப்பவை. போர் சப்பித் துப்பிய எச்சமாயிருக்கிறோம் நாம். தேசம் தொலைந்து அகதிகளாய் அவலப்பட்டுப் போன வாழ்க்கை, இவையெல்லாமேதான், என் ஓவியங்கள்.

வெகுவாக அவலமாகிப் போன வாழ்க்கை, சிதிலமாகிப் போன மனது, இப்படித்தான் ஓவிய வாழ்க்கை தொடக்கம் பெறுகிறது. இவருக்கு மட்டுமல்ல, கவிஞர்கள், புனைகதையாளர்கள் எல்லோருக்குமே, இருபது ஆண்டுகளுக்கு மேலாகின்றன, சொந்த மண்ணை விட்டு நீங்கி, அகதிகளாய்த் திரிந்து... இந்நிலையில் அழகின் ரசனைக்கான அமைதி நிறைந்த சித்திரங்கள், எண்ணங்கள் சலனிப்பது சாத்தியமில்லை.

"எனது ஓவியங்களில் என் புற அக நிலைமை களையே, அவற்றைச் சுயமாய் பதிவு செய்யவும் அவற்றின் தாக்கங்களை வெளிப் படுத்தவும் முயல்கிறேன்.'

இத்தாக்கங்களில் வன்முறை என்பது ஒரு பக்கச் சாய்வு கொண்டதல்ல. வன் முறை என்பது வன்முறையாகத்தான் இருக்குமே ஒழிய, சித்தாந் தங்கள் சார்ந்தவன்முறை வேறு ஏதாகவும் ஆகிவிடாது.

காத்தான்குடி, ஈழப் போராட்ட வாழ்வில் ஒரு திருப்பு முனையென, சர்ச்சைக்கு இடமான வன்முறை சம்பவத்தால் விசேஷமாக குறிப்பிட வேண்டிய ஒன்று. சம்பந்தப்பட்டவர்கள் அது பற்றிப் பேசாது இருப்பதையே விரும்புவர். அப்படி ஒன்று நிகழவே இல்லை என்று அது நினைவிýருந்து மறைந்துவிட்டால் இன்னும் நல்லது.

ஈழ மக்களிடையே மத விரோதங்களுக்கு விதையிட்ட வன்முறை, காத்தான்குடி விட்டு உயிர் பிழைக்க முஸ்லீம் மக்கள் தப்பி, அம்பாரை நோக்கியோடிய சம்பவத்திற்குக் காரணமான இடம், நிகழ்வு. இதுவும் மனித இனம் காயம் பட்ட நிகழ்வுதான். ஜீவன், காத்தான்குடி சம்பவத்தால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானவர். அவரது சிறப்பான ஓவியப் பதிவுகளுக்கு காத்தான் குடி காரணமாக இருந்துள்ளது. வன்முறை யாருடைய வன்முறையாக இருந்தால் என்ன? இரையானது எந்த மதத்தினராக இருந்தால் என்ன.. மனித ஜீவன் தான்.

"இதை நான் எடுத்துக் கொள்கிறேன். எவ்வளவுக்குக் கொடுப்பீர்கள்? என்று அந்தக் காத்தான்குடி சித்திரத்தைச் சுட்டி, கேட்ட அம்மையாருக்கு, "இதை நான் விற்பதாக இல்லை. நான் ஓவியம் தீட்டுவதும் காட்சிக்கு வைப்பதும் பணம் சம்பாதிக்க அல்ல' என்று சொல்ý விட்டதாகச் சொன்னார் ஜீவன். கனடாவில், பாரீஸில், ஸ்வீடனில் என்று பல இடங்களில் புலம் பெயர்ந்து வாழும் ஈழ மக்களின் புத்தகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் ஓவியங்கள் வரைந்து தருகிறார் ஜீவன்.

வன்முறையும் மனத் துயர்களும் எல்லா மனித இதயங்களையும் பாதிக்கின்றன. ஜீவனது ஓவியங்களின் கருப்பொருள், இருபது ஆண்டுகளுக்கு முன் இவர் விட்டு வந்த ஈழ மக்களின் வதைபடும் வாழ்வைப் பற்றியிருந்தாலும், அது மனித இனம் முழுதும் புரிந்துகொள்ளும் அவலம்தானே! செசென்யாவில், குரோஷியாவில், ஆப்கனிஸ்தானில், இராக்கில் நிகழும் வன்முறைகள் எப்படி மாறுபட்டன?

"துயர் படும் என் மக்கள்' என்னும் ஜீவனின் ஓவியக் கண்காட்சி பற்றி எழுந்த விமர்சனங்கள், "மனித வாழ்வில் காணும் வன்முறையைச் சித்தரிக்கும் ஜீவனின் ஓவியங்கள் மிக தைரியத்துடனும் உரத்தும் வெளிப்படையாகவும் வந்துள்ள சக்திவாய்ந்த வெளிப்பாடுகள்' என்றும், "தான் விட்டு வந்த மண்ணின் வேதனைகள் நிறைந்த நினைவுகளை ஜீவன் தன் ஓவியங்களில் சித்தரித்துள்ளார்', என்றும் கனேடிய பத்திரிகைகள் எழுதியுள்ளன.

ஜீவன் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரது கணினியில் அவர் சித்திரம் தீட்டும் முறையை விளக்கிச் சொன்னார். உருவங்களைச் சமைப்பதிலும் வர்ணங்களைத் தேர்ந்து கொள்வதிலும் தான் விரும்பும் வண்ணம் அச்சித்திரம் குணமாற்றம் பெறுவதிலும் அவர் வெகு சுலபமாகச் செய்து விடுகிறார். கணினி சுலபமாகச் செய்துவிடுகிறது, சரி. ஆனால் ஓவியம் அதன் கோடுகளோடு, வண்ணங்களோடு, கருவோடு பிறப்பெடுப்பது அவரது ஆளுமையின் தன்னறியா ஆழத்தில் அல்லவா? அங்கு அவர் வீட்டில் அவர் குழந்தைகள் வெகு சீக்கிரம் ஒட்டிக்கொண்டுவிட்டன.

(தமிழகத்தில் இருந்து வெளிவரும் அமுதசுரபி à®“வியச் சிறப்பிதழில் இருந்து நன்றியுடன் மீள் பிரசுமாகின்றது.)  
 
 


     இதுவரை:  25811842 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6494 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com