அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பிரெஞ்சு தீவு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தினமணி  
Saturday, 05 November 2005

சொந்த நாட்டு மண் மீது வாசம் வீசும் பிரெஞ்சு தீவு  இந்திய வம்சாவளியினர்!

 
புதுவை வந்த பிரெஞ்சு தீவைச் சேர்ந்த இந்திய  வம்சாவளியினர் நம் நாட்டின் மீது அன்பை  பொழிகின்றனர்.
மொரீசியஸ் நாடு அருகேயுள்ள பிரெஞ்சு தீவு "ரீ  யூனியன்'. இது பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதி.
இத் தீவில் 7.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 30  சதம் பேர் இந்திய வம்சாவளியினர். இங்கு 45  எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தனி மாகாண அரசு இங்கு  உள்ளது.
தகவல் தொடர்பு வசதியில்லாத பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இத் தீவில் குடியேறிய இந்தியர்கள் தங்களின்  உறவினர்கள், மூதாதையரின் குடும்ப உறவைத் தொடர  முடியவில்லை.

 
தமிழில் பேச ஏக்கம்!
அங்கு நிலவும் சமூக சூழல், தொடர்பு மொழியாக  பிரெஞ்சு இருப்பதால் சொந்த தாய் மொழியில் பேசுவதை இந்திய வம்சாவளியினர் மறந்து விட்டனர். இருப்பினும்  சொந்த தாய்மொழியில் பேசுவற்கு அவர்கள்  ஏங்குகின்றனர்.
தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த இந்திய நாட்டின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். சுனாமியால்  பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு உதவி செய்ய ஒரு  குழு இத் தீவிலிருந்து புதுவை வந்துள்ளது.
இக் குழுவின் தலைவர் ஜூலியன் ராமன். இவர் தமிழர்.  மேலும் எம்.எல்.ஏவாக இருக்கிறார். தமிழனாக இருந்தும் தமிழ் பேச முடியவில்லை என்பதை நினைத்து  வருத்தப்படுவதாகக் கூறுகிறார். இருப்பினும்,  தன்னுடைய பெயர் தமிழ் பெயராக இருப்பதாக  பெருமைப்படுகிறார்.
இக் குழுவில் வந்துள்ள மற்றொரு இந்திய  வம்சாவளியைச் சேர்ந்தவர் கமலம். இவர் ஆண்.  பெண்ணுக்கு வைக்கும் பெயர் உங்களுக்கு எப்படி?
"இத் தீவில் பலருக்கு இப்படிதான் பெண்களின் பெயர்கள் ஆண்களுக்குச் சூட்டப்பட்டுள்ளன. என்னுடைய தாயின்  பெயர் கமலம். அதே பெயரை எனக்கும்  வைத்துவிட்டனர். இதுபோன்று லட்சுமி, மீனாட்சி  உள்ளிட்ட பல பெண்களின் பெயர்களில் ஆண்கள்  உள்ளனர் என்றார்.
இவர், இத் தீவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  தன்னுடைய மூதாதையர்கள் மலையாளிகள் என்று  சொல்கிறார். இருப்பினும் மலையாளம் தெரியாது.  எங்களுடைய குடும்பப் பெயரும் மாறிவிட்டது. 4  தலைமுறையை இத் தீவில் கழித்து விட்டோம்.  அதனால் கேரளத்தில் இப்போது எங்கள் மூதாதையர்  எங்கு உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியாது  என்கிறார்.


24 துணை மேயர்கள்!
இத் தீவில் மொத்தம் 24 துணை மேயர்கள் பல்வேறு  நிர்வாகங்களைக் கவனித்து வருகின்றனர். இக் குழுவில்  பள்ளி நிர்வாகத்தைக் கவனித்து வரும் மெமோனா  பட்டேல் என்ற பெண்மணியும் வந்திருந்தார். இவர்  முஸ்லிம். அவருடைய மூதாதையர்கள் குஜராத்தி.  அவருக்கு குஜராத்தி தெரியும். குழந்தைகளுக்கு இந்த  மொழியைச் சொல்லிக் கொடுக்க முடியவில்லை என்று  வருத்தப்படுகிறார். உருது மொழியில் பேசுகிறார்.  இங்குள்ள முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
இத் தீவில் உள்ள மதரஸôக்களில் உருது கற்றுக்  கொடுக்கின்றனர். தமிழ்ச் சங்கத்தினர் தமிழ்ப் பள்ளி  நடத்துகின்றனர். அங்கு தமிழ் கற்றுக்  கொடுக்கப்படுகிறது. அதுபோன்று ஒவ்வொரு  பிரிவினரும் தங்களுடைய மொழியைக் கற்பித்து  வருகின்றனர் என்றார்.
மேலும், அரசு நடத்தும் பள்ளிகளில் மாணவர்கள்  சாப்பிடுவதற்கு வசதி இருக்கிறது. ஏழை குடும்பத்தைச்  சேர்ந்த மாணவர்களுக்கு இலவசம். மற்ற  மாணவர்களுக்குக் குறைந்த செலவில் உணவு  அளிக்கப்படுகிறது. இங்கு ஆசிரியர்  பற்றாக்குறையெல்லாம் இல்லை.


விசா கிடைப்பதில் சிரமம்!
இத் தீவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு விசா கிடைப்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது என்கிறார்  மெமோனா.
"இத் தீவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ரசம்,  மோர், முருங்கைக்காய், கருவேப்பிலையை  பயன்படுத்துதல் போன்ற நம் நாட்டு உணவு  பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். மரவள்ளிக்  கிழங்கில் பாயாசம் தயார் செய்யப்படுகிறது' என்கிறார்  கமலம் (ஆண்).
இந்திய வம்சாவளியினர் அரிசி உணவை அதிகம்  சாப்பிடுகின்றனர். குறைந்த விலையில் சீனா அரிசி  கிடைக்கிறது. பிரியாணி போன்றவற்றுக்காக பாசுமதி  அரிசியைப் பயன்படுத்துவோம் என்கிறார் முஸ்லிம்  பெண் மெமோனா.
இத் தீவில் பிரெஞ்சு டிவி, ரேடியாவில்  பத்திரிகையாளராகப் பணியாற்றும் ராம்சாமியும் இக்  குழுவில் வந்திருந்தார். அவரிடம் பேசியபோது, இங்கு  தமிழ் மொழியில் எந்த பத்திரிகையும் இல்லை. பிரெஞ்சு பத்திரிகைகள்தான் என்றார்.
புதுச்சேரி, அக். 21: தினமணி

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  24778478 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2727 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com