அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow பிரெஞ் படைப்பாளிகள் arrow பால்ஸாக்கின் 'கிழவன் கோரியே'
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பால்ஸாக்கின் 'கிழவன் கோரியே'   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தமிழில்: திருவேணி சங்கமம்.  
Monday, 30 January 2006

பால்ஸாக்கின் 'கிழவன் கோரியே'
-உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு நாவல்.

பால்சாக் என்ற பெயர் பலவகை எண்ணக்கோலங்களைத் தோற்றுவிக்கக் கூடியது. அடிக்கடி கருங்கோப்பியை தொப்பை வயிற்றுக்குள் தள்ளி, தெம்பேற்றிக் கொண்டு, தனது பாத்திரங்களை தன்னோடு தேநீர் அருந்தி நெருக்கமாகி போனவர்கள் போன்று வாழ்க்கையையும் விட மிக யதார்த்தமாக அவர்களைச் சித்தரித்துக் காட்டும் ஒரு எழுத்தாளன். துறவிகள் அணியும் தொளதொளப்பான வெள்ளை மேலங்கியும் அதற்கு மேலாக கழுத்துப் பட்டி போன்று தங்கச் சங்கிலியும் அணிந்து, ஒரு குந்தில் பன்னிரெண்டு மணித்தியாலம் வாரக்கணக்காக விடாமல் எழுதித் தள்ளும் தேவதூதன் போன்ற மனத்துக்கினிய சிருஷ்டி கர்த்தா. மற்றது, முரட்டுத்தனமான எழுத்து நடை, வெறும் பாவனைப்பொருட்களைப் பற்றிய தேவையற்ற விவரங்கள், மட்டுமீறிய நிதி விபரங்கள், கதையோட்டத்தை நகைக்கும் தத்துவார்த்தை, விஞ்ஞான, உளவியல் விளக்கங்கள், அலுப்புத்தட்டும் விளக்கவுரைகள் சீர்கெட்ட உலகம் பற்றி அதிகப் பிரசங்கித்தனம் செய்யும் கதாபாத்திரங்கள் நிறைந்த அவரின் நாவல்கள். இப்பண்புகள் அவரின் சிறப்புக்கு வேட்டு வைக்கக்கூடியன. இதனாலேயே அவரைப் பற்றி இருவேறு அபிப்பிராயங்கள் பிரான்சிலும் மற்றும் இடங்களிலும் சொல்லப் படுகின்றன. எனினும் எவரும், எச்சந்தர்ப்பத்திலும் பிரான்சிய சமூகத்தை சித்தரித்துக்காட்டும்  அவரின் வியத்தகு திறன் பற்றியோ மனித இயல்புகளை உள்ளார்ந்து நோக்கும் ஆற்றல் பற்றியோ கேள்வி எழுப்பியது
கிடையாது. பதினைந்து பாகங்களைக் கொண்ட 'மனித இன்பியல்' (வாந hரஅயn உழஅநனல) என்ற பிரமாண்டமான தொகுப்பில் பிரெஞ்சு சமூகம் பற்றிய அற்புத சித்திரங்களை அவர் தீட்டித் தந்துள்ளார்.

1799இல் ரூவர்ஸ் என்ற இடத்தில் குடியானவர் வம்சத்தில் பால்ஸாக் பிறந்தார். கடும் உழைப்பு காரணமாக நலிவுற்று 1850இல் அவர் இறந்தார். இக் குறுகிய வாழ் நாளில் மிகப் பெரும் இலக்கிய அறுவடையை சிரு~;டித்தார்.
படாடோபமாக வாழ்ந்து கொண்டு, அதன் நிமித்தமாக கடன் பட்டுக்கொண்டு, சதா கடனாளியாக இருந்து கொண்டு, உலக வாழ்க்கையை கண்ணாடி போல் காட்டும் நாவல்களை எழுதிக் கொண்டும் திட்டமிட்டுக் கொண்டும் அவர் வாழ்ந்தார். இந்த வாழ்க்கை தனது மூளையில் பதிந்து போய்க் கிடக்கிறது என்று அவர் சொல்லிக்கொண்டார்.

அவர் எழுதிய நாவல்கள், திட்டமிட்டவைகள் யாவற்றினதும் பொதுத் தலைப்பு 'மனித இன்பியல்" ஆகும்.
'நம்பகமான வரலாற்று ஆதாரங்களைத் தேடி ஆய்ந்து, நவீன சமூகத்தின் இயல்புகளை தத்துரூபமாக வெளிப்படுத்துவதே அவைகளின் நோக்கமாகும்' என்று பால்ஸாக் குறிப்பிட்டார். தனிப்பட்ட வாழ்க்கை, வட்டார வாழ்க்கை, பாரிஸ் நகரத்து வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, இராணுவ வாழ்க்கை, நாட்டுப் புற வாழ்க்கை என்று பல தொகுப்புக்களை ஷமனித இன்பியல்ஷஉள்ளடக்கியுள்ளது. ஒரு பிரபல பிரஞ்சு விமர்சகர் குறிப்பிட்டது போல் ஒரு பதிவகம் போல் அது உள்ளது.       
யூலை முடியாட்சியில் பதவி மோகமும் பணமோகமும் தலைவிரித்தாடிய அன்றைய பிரெஞ்சு சமூகத்தை, அதன் பல்வேறு சமூக தட்டுக்களை, பிரெஞ்சு புரட்சியால் விடுவிக்கப்பட்டு மேலோங்கிக் கொண்டிருந்த மத்தியதர வர்க்கத்தை, புதிய மாற்றம் ஒன்று ஏற்படப் போவதை கட்டியம் கூறி நின்ற, சமூக, பொருளாதார, அரசியல் கருத்துக்களை எல்லாம் மிக யதார்த்தமாக அவருடைய படைப்புக்கள் வெளிக்காட்டின. இவைகளோடு பாரம்பரியமாக வாழ்ந்து கொண்டிருந்த நாட்டுப்புறத்தையும் சேர்த்துக் கொண்டார். தனது மனதில் சிறை பிடித்திருந்த மக்களை விஞ்ஞான நோக்குடன் அவதானித்து சிருஷ்டித்துவத்துடன் வெளிப்படுத்தினார்.

'மனித இன்பியலில்" மொத்தமாக 4000 பாத்திரங்களையாவது படைக்க வேண்டும் என்று பால்சாக் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரால் சகலவகை மாதிரியும் கொண்ட 2000 பாத்திரங்களையே படைக்க முடிந்தது. அவருக்கு நாகரீகம் சுழித்தோடும் பாரிஸ் நகர வாழ்வு மிகவும் பரிச்சயமாகியிருந்தது. அவரே மாணவராகவும் பத்திரிகையாளராகவும் வழக்குரைஞரின் எழுத்தராகவும் அங்கு வாழ்ந்திருக்கிறார். வர்த்தகர்கள், நடிகர்கள், கலைஞர்கள், குடியானவர்கள், ஊர் சுற்றும் சிறு வியாபாரிகள், சிறைக்கைதிகள், நாடோடிகள் மற்றும் கள்ளர்களும் கந்துவட்டிக்காரர்களும் மலிந்த பாரிஸ் நகரின் புற நகர்ப்பகுதி மக்கள் யாவரையும், அவர்கள் தொடர்பான சின்னஞ்சிறு விபரங்கள் - உடைகள், பேச்சுப்பாங்குகள், பின்னணிகள் - உட்பட யாவற்றையும் அவரால் தீட்டிக்காட்ட முடிந்தது. தனக்கு தனிப்பட்ட முறையில் பரிச்சயமற்ற அல்லது தனிமைப்பட்டுப்போன பிரிவினர் சார்ந்த பாத்திரங்களைச் சித்தரிக்க நேரிட்டால், அவர்களை தெருக்களிலாவது தேடிக்கண்டு உறவாடி அவர்களின் முழுப்படிமத்தையும் உள்வாங்கிக் கொள்வார். இதை ஷஎன்னுடைய ஆன்மாவை அவர்களில் செலுத்தி அவர்களை உணர்ந்து கொள்கிறேன்.ஷஎன்று பால்சாக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாத்திரங்களை வெறுமனே சித்தரிப்பதுடன் திருப்தியடையாமல் அவைகளை நன்கு விளங்கிக் கொண்டார்.
சமூக விஞ்ஞானத்தில் தான் ஒரு டாக்டர் என்று அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மனிதனை உள் உணர்வுகளும் சுயலாபங்களும் இணைந்து வழி நடத்துவதாக அவர் கருதினார். முறைமைகள், சட்டங்கள் என்ற மேற் பூச்சுகளுக்கு பின்னால் சுயநலமும் சுய இச்சையும்தான் வல்லாட்சி புரிகின்றன என்பது அவரது திடமான நம்பிக்கை.
இதுதான் சமூகத்தின் சீரழிவுக்குக் காரணமாகும். இப்பண்பினராகவே அவரின் கதாபாத்திரங்களில் அனேகர் உள்ளனர். இவர்களின் பாத்திரவார்ப்பு மிக நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் அமைந்துள்ளன.
அப்பாத்திரங்கள் சோகமயமானவர்களாகவும் பரிதாபத்துக்குரியவர்களாகவும் தோன்றுகின்றனர்.
பால்சாக்கின் நாவல்களில் தீமைகள் மலிந்த யதார்த்தம் காட்டப் படுகிறது. வாழ்க்ககையின் அழகிய அம்சங்களை விட அசிங்கமும்; அவலமும் கொடுமைகளுமே தூக்கலாகக் காணப்படுகின்றன. இவை வாசகர் மனதில் சஞ்சல உணர்வுகளைத் தோற்றி வித்தாலும் அவை நிஐவாழ்வின் வெளிப்பாடாகும். இதை நுட்பமாக சித்தரிப்பதன் ஊடாக வாழ்க்கையை உணர்த்துவது அவரின் தனி உத்தியாகும். இவ்வாறான சிறப்பியல்வுகள் ஒருங்கே கொண்ட படைப்பாக 'மனித இன்பியல்' தொகுப்பில் உள்ள "கிழவன் கோரியேற்" என்ற நாவலை விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதன் கதை பால்சாக்கின் மற்ற நாவல்கள் ஆரம்பமாகும் வழக்கமான பின்னணியில்தான் ஆரம்பமாகிறது. பாரிஸ் நகரத்தில் சன சந்தடி மிகுந்த பகுதியில் வெகு சாதாரணமான விடுதி. அதை நடத்துபவர் மேடம் வோக்கர் என்ற விதவை.
அவள் வாடிக்கையாளர்கள் ஒழுங்காக வாடகை செலுத்தும் பட்சத்தில் அவர்களோடு சுமூகமாக நடந்து கொண்டாள். அவளது வாடிக்கையாளர்கள் பலதிறத்தினராக இருந்தனர். கொமிசரி  ஜெனரல் ஒருவரின் விதவையான மேடம் கோச்சர் எழும்புறுக்கி
நோயால் அவதிப்படும் இளம் பெண் விக்டோரின் ரைலெபெர், செக்குமாடுபோல் உழைத்து, நலிந்துபோய் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஓரு கிழவன், கலியாணம் தட்டுப்பட்டுப் போய் விட்ட முதுகன்னி மில்லே மைச்சோனேவ், அவன் பச்சை நிறத்தில் ஊத்தைப்பட்டுத்துணி ஒன்றை எப்பொழுதும் முண்டாசு போல் கட்டிக் கொண்ட படி இருப்பாள். விக்டோரினைத் தவிர மற்றவர்களெல்லாம் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இயல்புகள் ஏது மற்றவர்களாகவும் இருந்தனர். விக்டோரின் இனித்தான் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டு உலகனுபவம் பெறவேண்டியிருந்தது. இவர்கள் எல்லோரிடமிருந்து மாறுபட்டவனாக மொன்ஸியர் வவ்ரின் காணப்பட்டான். கட்டுமஸ்த்தான உடல்வாகு கொண்ட அவன் ஆர்ப்பாட்;டமாகச் சிரிப்பான். கிருதாவுக்கு மை ப+சி 'விக்" போட்டுக் கொண்டுதான் எப்போதும் நடமாடுவான். விடுதியில் உள்ளவர்கள் அவனை விரும்பினர் எனினும் அவன் என்ன செய்கிறான், எப்படி வாழ்கிறான் என்று யாருக்கும் தெரியாது.
அச்சத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தும் வண்ணம் அவனுடைய கூரிய பார்வை இருக்கும்;. மற்றொருவன், தற்காலிகமாக அங்கே தங்கி சட்டம் படிக்கும் யுகேனே ரைஸ்டனக், அழகிய வாலிபனான அவன் தெளிவும் உறுதியும் கொண்டவன். எப்படியும் பாரிஸ் நகரத்தில் முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுபவன். கடைசியாக கிழவன் கோரியேற், பிரெஞ்சில் சொல்வதென்றால் பியர் கொரியெட்.

1819 இல் கதைதொடங்கும் போது அவ் விடுதியில் கிழவன் கோரியேட் ஆறாண்டுகளைக் கழித்து விடுகிறான். சேமியா செய்பவனாக இருந்து இளைப்பாறிய அவன் அலுமாரி நிறைந்த சாமான்கள், வெள்ளிப் பாத்திரங்கள்,மற்றும் கை நிறைய பணம் ஆகியவற்றுடன் அங்கே வந்து சேர்ந்தவன். ஒவ்வொரு தடவையும் பணமுடை ஏற்படும் போது பாத்திரங்கள் ஒவ்வொன்றாக வெளியேறின. இரண்டு வருடங்களின் பின் தாக்குப் பிடிக்க முடியாமல் மலிவான அறை ஒன்றுக்கு இடம் மாறிக் கொண்டான். இதனால் விடுதியில் வதிவோரிடையே அவன் சூதாடுகிறான் என்றும் பெண்களுக்கு கண்டபடி செலவழிக்கிறான் என்றும் கதை அடிபட்டது. அவன் அடிக்கடி நாகரிகமாக உடுத்தி வரும் இரு இளம் பெண்;களை சந்தித்து வருவதை சிலர் கண்டிருக்கிறார்கள். இதனால் கிழட்டு கொரியெட் ஒரு கெட்ட நடத்தைக்காரன் என்று பலர் சொல்லிக்கொண்டார்கள். ஒரு நாள் மேடம் வோக்கர் நேரடியாகவே
இதைப்பற்றி அவனிடம் கேட்டு விட்டாள். கோரியேற் 'அவர்கள் இருவரும் எனது பிள்ளைகள், சொந்தப் பிள்ளைகள்' என்று பதிலளித்தான்.
ஆயினும் ஒருவரும் இதை நம்பவில்லை. அடுத்து மூன்று வருடங்களில் அவன் தனது செலவுகளை மேலும் சுருக்கிக் கொண்டான.; மிகவும் சிறிய அறை ஒன்றாகப் பார்த்து
இடம் மாறிக் கொண்டான். உடைகள் போன்றவற்றுக்கான செலவுகளையும் இயன்றவரை கட்டுப் படுத்தி அடிக்கடி வெளியே போவதையும் தவிர்த்துக் கொண்டான். 'ஏன் உனது பிள்ளைகள் உன்னைப் பார்க்க வருவதில்லை?" என்று மேடம் வோக்கர் ஒரு நாள் நக்கலாக கேட்டாள் 'அவர்கள் சில வேளைகளில் வருவார்கள்" என்று கம்மிய குரலில் கோரியேற் பதில் சொல்வான்.

இந்த நூலின் பிரதான தொனிப் பொருள்களில் ஒன்று இச் சம்பவங்களின் பின்னால் உள்ளது. கிழவன் கோரியேற் பால்ஸாக்கின் விருப்பத்துக்குரிய பாத்திரமாவான். அவனில் வெளிப்படும் தந்தைக்குரிய பாசம் இதற்குக் காரணமாகும். மிக இளம் வயதில் மனைவியை இழந்த அவன் தனது புத்திரிகளான டொல்பின், அனஸ்டாசி என்பவர்கள் மீது உயிரையே வைத்திருக்கிறான். தன்னிடம் உள்ள பணத்தை அவர்களின் ஆடம்பரச்செலவுகளுக்கு வாரி இறைக்கிறான். அவர்களின் அற்ப விருப்பங்களையும் எப்பாடுபட்டாவது நிறைவேற்றி வைக்கிறான். "தகப்பன் மார்கள் எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இதுவே உன்னை உண்மையான தகப்பனாக்கும்" என்று அவன் அடிக்கடி சொல்லிக்கொள்வான். அவனுக்கு எல்லாமே அவர்கள் தான். வசதியான இடத்தில் அவர்களைக் கட்டிக் கொடுத்தான். ஒருவன் பிரஞ்சு உயர்குடியைச் சேர்ந்தவன் மற்றவன் பணக்கார Nஐர்மன் வங்கியாளன். நிறைந்த சீதனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே அவர்கள் திருமணம் முடித்தனர். அந்த எதிர்பார்ப்பில், நாகரீகமான அவர்களின் வீடுகளுக்கு கோரியேற் வரும்போது  இன்;முகத்துடன் வரவேற்கப்பட்டான். தங்களது எதிர்பார்த்தது போல் நிலமையில்லை என்றறிந்ததும் கதவை இழுத்து மூடிக்கொண்டனர். எனினும் கிழவன் தனது மகள் மாரை வேறு இடங்களில் சந்தித்து வந்தான். அவர்களின் செலவுகளுக்கு தன்னை ஒறுத்து - கரண்டிகளைக் கூட விற்று - புகையிலையைத் தவிர்த்து - பணவுதவி செய்து வந்தான். ஆனால் அவர்கள் கண்டபடி செலவழித்தனர். பொறுப்புணர்வற்று நடந்து கொண்டனர். கள்ளக் காதலர்களைக் கூட வைத்துக்கொண்டனர். பிதா சுதன் பரிசுத்த ஆவிக்கு என்னை விற்றுவிடத் தயாராக உள்ளேன். "எனது பிள்ளைகள் கண்ணீர் விடாமல் இருக்க" என்பான் கோரியேற். அவன் கொடுக்கும் போது அவர்களின் முகத்தில் தோன்றும் புன்முறுவல் ஒன்றே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
இவ்வளவிருந்தும் அவனை அவனது மகள்மார் நேசித்ததாய் இல்லை. மாறாக அவனைக் கசக்கிப் பிழிந்தனர்.
அப்படி தனது பிள்ளைகளுக்காக துன்புறுவது அவனுக்கு இன்பமளித்தது. அவர்களின் பகட்டான உடைகளை தொட்டுப்பார்த்தும் அவர்கள் ஆடம்பர வண்டிகளில் செல்வதை கண்டும் பரவசம் அடைந்தான்.'
'நான் அழிந்து வரும் ஊத்தைச்சடலம். எனது ஆத்மா பிள்ளைகளில் உள்ளது"என்பான். அவன் அவர்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கவில்லை ஆனால் அவ்வப்போது அவர்கள் கேட்பதைக் கொடுக்கும் போது அவர்கள் முகத்தில் தோன்றும் புன்னகையும் மலர்ச்சியும் அவனுக்கு ஒரு சந்தோ~ உணர்வைக் கொடுத்தன. இந்தப் பொய்மை அவனுக்குத் தேவையாக இருந்தது. இந்த கசப்பான பொய்மையை கதையின் ஆரம்பத்திலிருந்து நாம் கண்டுகொள்ள முடியும்.
           
இப் புத்தகத்தின் ஒரு தொணிப் பொருள் யூகேனேயின் முயற்சி பற்றியதாகும். அவன் நாட்டுப்புறத்து வறிய குடும்பம் ஒன்றிலிருந்து வந்தவன். எப்படியாவது ஒரு மனிதனாகி விட வேண்டும் என்ற ஆவலில் இயங்கிக் கொண்டிருப்பவன். அவன் வீட்டார் ஏதோ பிச்சுப் பிடுங்கி அனுப்பிக் கொண்டிருந்தனர். அவனின் ஒன்று விட்ட சகோதரனின் உதவியால் நாகரீகமாக பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கிப் படிக்க வாய்ப்புக் கிடைக்கிறது.
அப்பகுதியிலேயே கோரியேற்றின் மகள்மார்களான டெல்பின், அனஸ்டாசி என்பவர்களினதும் வீடுகள் இருக்கின்றன. அவர்களின் சந்தோ~மற்ற மனவாழ்க்கையும் சுயநலப்போக்கையும் அவன் அறிந்து கொள்கிறான். அவனுக்கு இது மனச் சங்கடத்தையும் அளிக்கிறது. சமூகத்தில் முன்னேறி ஒரு நல்ல நிலைக்கு வருவதற்கு வீட்டிலிருந்து கிடைக்கும் பணம் காணாமல் இருக்கும் நிலையிலும் மனம் தளராமல் "எல்லாம்  நிர்ணயிக்கப்பட்ட சமூகத்தின் முன் நான் தனியே நிற்கிறேன். இதை நான் எப்படியும் வெற்றிகொள்ள வேண்டும் ". என்ற ஓர்மத்தில் யூகேனே இருக்கிறான். வெற்றிதான் முக்கியமே தவிர அதன் வழிமுறைகள் அல்ல என்ற முடிவுக்கு அவன் வருகிறான்.
இது வவ்ரின் அவனை தனது நயவஞ்சகமான செயல்களுக்கு சம்மதம் அளிக்க வாய்ப்பளிக்கிறது. வவ்ரின் திட்டம் மிக எளிமையானது விக்டோரின் ரெய்லெபெருக்கு ஒரு தம்பி இருக்கிறான்.
அவன் பெரும் சொத்துக்கு வாரிசு. அவனோடு மல்யுத்தத்துக்கு ஒழுங்குபண்ணி அதில் அவனைக் கொல்வது. இதனால் அச்சொத்துக்களுக்கு விக்டோரின் ரெய்லெபெர் வாரிசாவாள். அவனை யூகேனே விவாகம் செய்தாள் மில்லியன் பிராங்குகள் பெறுமதியான சொத்துக்களை அடையலாம். இதற்காக யுகேனே வவ்ரினுக்கு தரவேண்டியது வெறும் இருபதில் ஒரு பங்குதான். இதைக் கேட்டவுடன் யுகேனே அதிர்ந்து போனான். ஆயினும் ஆசை யாரைத்தான் விட்டது.

இதற்குப்பின் நாவல் யுகேனேயின் முன்னேற்றத்தை விபரித்தபடி நகர்கிறது. அவனுக்கும் கிழவன் கோரியேற்றுக்குமிடையே வளர்ந்து வருகின்ற நட்பும் டெல்பினோடு அவனுக்கேற்படும் உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடும் நூலில் விபரிக்கப் படுகின்றன. யூகேனே தனி இருப்பிடம் ஒன்றுக்கு இடம் மாற்றிக் கொள்ள கோரியெற் மீதியாக உள்ளவைகளைக் கொடுத்து உதவுகிறான். இவ்விடம் டெல்பின் வீட்டுக்கு மிக அருகைமையில் அமைகிறது. அது அவர்களின் உணர்ச்சி பூர்வமான நெருக்கத்துக்கு சாதகமாகிறது. மல்யுத்தத்தில் விக்டோரின் சகோதரன் கொல்லப்படுகிறான். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. பழியிருந்து வவ்ரின் தப்பித்துக் கொள்ள முடியவில்லை . அவன் பாரிஸ் நகரில் இயங்கும் 'கீற்டெத் என்னும் பாதாள உலகக் கோ~;டியைகச் சேர்ந்தவன் என்றும் சிறையில் இருந்து தப்பி மறைந்து வாழ்பவன் என்றும் தெரியவருகிறது. பொலிஸ் கடைசியாக அவன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கிறது. இதற்கு மில்மச்சோனேவ் பொலிசுக்கு உதவுகிறாள். அவனுக்கு நிறைய சாராயம் கொடுத்து அவன் தோளில் குற்றவாளிக்குரிய அடையாளம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிசுக்கு தகவல் கொடுக்கிறாள். பொலிஸ் திடீரென பாய்ந்து அவனை முரட்டுத்தனமாக பிடித்து தள்ளும் போது அவன் அணிந்துள்ள 'விக்' கிழிந்து போகிறது. சிவப்பு மை பூசப்பட்டு குட்டையாக கத்தரிக்கப்பட்;ட மயிர் பளிச்சிடுகிறது.
இப்போது அவனின் முகத் தோற்றம் முற்றிலும் மாறிக்காணப்படுகிறது. "மனிதனின் பலமும் அவதந்திரமும் அதில் இணைந்து தோன்றின. நரகத்தின் நெருப்பின் அருகே மனிதனின் உயிரும் ஆன்மாவும் நின்று தவிப்பது போல் அவன் தோற்றம் இருந்தது. அவனின் முகம் இரத்தம் போல் சிவந்து காணப்பட்டது. அவனின் கண்கள் பூனையின் கண்கள் போல் பளபளத்தன" இவ்வாறு தொடங்கி மனித சமூகம் மீத கடும் பழிப்புரைகளைப் பொழிகிறார் ஆசிரியா.; (இவ்விடத்தில் மிகை உணர்ச்சிப் பாங்காக நாவல் உள்ளது) இதன் பின்னர் வவ்ரினை பொலிஸ் இழுத்துச் செல்கிறது.
இக்கட்டத்தில் நாவலின் கதை உச்சநிலையை அடைகிறது. மனமுடைந்த பரிதாப கோலத்தில் டெல்பின் கோரியேற்றிடம் வருகிறாள். nஐர்மனிய வர்த்தகனான அவளுடைய கணவன், தொழிலை மேலும் விருத்தி செய்யப் போவதாகக் கூறி, சொத்துக்களை எல்லாம் எழுதி எடுத்துக் கொண்டு விட்டானாம். அவைகளை திருப்பிக் கேட்காத பட்சத்தில் காதலனை வைத்துக் கொள்ள அனுமதிக்கிறானாம். அவன் தன்னை வஞசித்து மோசம் செய்துவிட்டான் என்று அவன் புலம்பி அழுதாள். இதன் பிறகு இதே போன்ற கதையுடன் அனஸ்டாஸி வந்தாள்.
அவள் தனது காதலன் சூதாட்டத்தில் பட்ட கடனை அடைப்பதற்காக குடும்ப வைர மாலையை விற்று விட்டிருக்கிறாள். அது அவளுடைய கணவனுக்கு தெரிந்து போய்விட்டது. விடயத்தை பகிரங்கப்படுத்த போவதாக அவனைப்பயமுறுத்தி எல்லா சொத்துக்களையும் அவன் எழுதி எடுத்துக் கொண்டுவிட்டான். மேலும் உடனடியாக 2000 பிராங்குகள் தரவேண்டும் என்று கிழவனிடம் அடம் பிடித்தாள். அவனோ கடைசியாக மிஞ்சியிருந்த 1200 பிராங்குகளை யூகேனேக்கு கொடுத்துவிட்டான். 'எனக்கு, உனக்கு" என்று சகோதரிகள் இருவரிடையேயும் சண்டை மூண்டுவிட்டது. அவர்களைச் சமாதானப்படுத்த கிழவன் பெரிதும் முயற்சித்தான். முடியவில்லை மனம் தளர்ந்து படுக்கையில் வீழ்ந்து "பிள்ளைகளே, நான் செத்துப் போய்விடுவேன், நீங்கள் இப்படியே சண்டையிட்டால் " என்று சொல்லி அழுதான். அனஸ்டாசி உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டாள். தொடர்ந்து டெல்பின் அன்று இரவு அவன் தனது தகப்பன் சுகவீன முற்றுக்கிடக்கிறான் என்பதையும் பொருட்படுத்தாமல் காதலனுடன் நாடகம் பார்க்க போய் விட்டாள். அடுத்த நாள் யுகேனே மாத்திரம் கிழவனைப் பார்க்க வந்தான். மிக மோசமாக சுகவீனமுற்று அரை மயக்கத்தில் கிடந்த நிலையில் தன்னிடம் எஞ்சியிருந்த வெள்ளிப்பாத்திரம் ஒன்றை விற்று அனஸ்டாஸிக்கு புத உடுப்பு ஒன்று வாங்க வேண்டும் என்றும் ஒடிஸ்ஸாவில் உள்ள சொத்துக்களை மகள்மாரின் பெயருக்கு மாற்ற வேண்டும் என்று பிதற்றிக் கொண்டிருந்தான்.

அன்று இரவு, டெல்பினிடமிருந்து யூகேனேக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவள் அவன் தன்னை அலட்சியப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியிருந்தாள். அவன் அவளை பின்னர் சந்தித்து, தகப்பனை வந்து பார்த்து பராமரிக்கும் படி மன்றாடினாhன். ஆனால் இதெல்லாம் அவள் காதில் விழவில்லை. அவளோ அவளை தன்னோடு நாடகம் பார்க்க வரும்படி வற்புறுத்தினாள். இதனிடையே கிழவன் கோரியேற்றின் நிலை மிகவும் மோசமாகி படுக்கையில் கிடக்கும்படியாயிற்று. அடுத்த நாள் சற்று தேறி எழுந்திருந்தான். தனது பிள்ளைகள் தன்னை வந்து பார்க்க இல்லை என்ற ஆதங்கம் அவனைப் பெரிதும் பாதித்து விட்டது. அவர்கள் தன்னோடு பாசமாக இல்லை என்பதை முற்றிலும் புரிந்து கொண்டான். ஆயினும் அவன் எல்லா வயோதிப தகப்பன்மார்களையும்போல தன்னையே நொந்து கொண்டான். "அவர்கள் ஒன்றுமறியா பிள்ளைகள், சனங்களுக்கு இது தெரியாது"
என்று சொல்லி பிள்ளைகள் மீத ஏற்பட்டிருக்கும் இகழ்ச்சியை போக்க முயன்றான். "நான்தான் அவர்களின் பொறுப்பற்ற நடத்தைக்கு காரணம். அவர்களின் சிறுபிள்ளைத்தனமான போக்குகளுக்கெல்லாம் விட்டுக்கொடுத்து
அவர்களைக் குட்டிச் சுவராக்கிவிட்டேன். பதினைந்து வயதில் வாகனம் கேட்ட போது வாங்கிக் கொடுத்தேன். அவர்களின் எந்த விருப்பத்தையும் மறுத்ததில்லை. நான் .... நான் தான் அவர்களை நேசிப்பதன் ஊடாக அவர்களைப் பாவவாளியாக்கிவிட்டேன். அவர்களின் குரல் என் இதயத்தை கரைக்கிறதே 'என்று அளவுக்கு மீறி செல்லம் கொடுத்த அவர்கள் கெட்டுப்போக காரணமாயிருந்ததைச் சொல்லி அழுதான்.
செத்துக் கொண்டிருந்த அவனின் மனநிலை திடிரென மாற்றம் அடைந்தது. அவர்கள் தன்னைப்பார்க்க கட்டாயம் வந்திருக்க வேண்டும், அது அவர்களின் கடமை, சட்டமும் அதைத்தான் சொல்கிறது. பட்டாளத்தைக் கொண்டாவது அவர்களை வரபண்ணியிருக்க வேண்டும். கெட்ட, கல்நெஞ்சம் கொண்ட பெண்கள் அவர்கள் என்று ஏசி திட்டினான். சில நிமிடங்களில் மனநிலை மாறி ஒடிஸ்ஸாவுக்கு போய் மில்லியன் பிராங்குகள் பெற்றுவர வேண்டும் என்று முணு முணுத்தான். இப்போது அவனின் வெறுப்பு மருமக்கள் மீது திரும்பியது. அவர்கள் தான் தனது பிள்ளைகளை வரவிடாமல் தடுக்கிறார்கள் என்றான். அவனின் உணர்வுகள் விரைவாக அடங்கிக் கொண்டு வந்தன."பிள்ளைகளை காணாமல் என் உயிர் போய்க் கொண்டிருக்கிறது" என்றான்.

கடைசியாக யூகேனே அவர்களை அழைத்துவர சென்றான். டெல்பின் மாத்திரம் வருவதாகச் சொன்னாள். ஆனால் அவள் வருவதற்கிடையில் ஒரு பக்கத்தில் யூகேனேயும் மறுபக்கத்தில் மருத்துவ மாணவனும் இருக்க, அவர்களை தனது பிள்ளைகள் என்ற நினைப்பில், அவர்களின் தலைகளைத் தடவியபடி ஆ, எனது தேவதைகள்' என்று முனகிய வண்ணம் அவன் உயிர் பிரிந்து விட்டது.

அவனது இறுதிக் கிரியைகள் மகள்மாரின் குடும்பங்களிலிருந்து எவ்வித உதவியும கிடைக்காததால் வெகுசாதாரணமாகவே நடந்தேறின. அவர்கள் அதில் பங்குகொள்ளவும் இல்லை. யூகேனேயும் விடுதியில் இருந்த வேலைக்காரன் ஒருவனுமே முன்னிற்று நடத்தினர். சடங்குகள் எல்லாம் இருபது நிமிடங்களுக்குள் நிறை வேற்றப்பட்டன. இவ்வாறு கிழவன் கோரியேற் அமைதியடைந்தான். வேலைக்காரன் அவனது கல்லறை வாசகங்களைப் படித்ததான்."ஒரு நல்ல, கருணையுள்ளம் கொண்ட மனிதன். அவன் எவரையும் கண்டித்ததுமில்லை, கடிந்து கொண்டதுமில்லை. எவரை நோக்கியும் சத்தமாக சொற்களை உச்சரித்ததுமில்லை".
                
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை அடைய வேண்டும் என்ற யூகேனேயின் வேணவா நிறைவேற்றிற்றா? அவனது கண்களிலிருந்து கண்ணீர் வெளியேறி கோரியேற்றின் கல்லறை மீத விழுந்தது". எனது இளமைக் கனவுக்களுக்கு அது கடைசிச் சொட்டுக் கண்ணீர் என்று சொல்லி அவன் நின்றிருந்த குன்றின் கீழே பார்த்தான் அங்கே, பாரிஸ் மாநகரின் விளக்குகள் பகட்டாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.
அந்த இரவிலிருந்து டெல்பினோடு உண்டு உறவாடி நெருங்கி அறிந்தது போல், அடுத்த நாவலின் கதை நிகழ்வுகளை திறந்துவிடத் தொடங்குகிறார் பால்ஸாக்.

-ஆங்கிலத்தில், லோரன் வில்சன்
-தமிழில், திருவேணி சங்கமம்.
"100 great books"என்ற நூலிலிருந்து எடுக்ப்பட்டது.  


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 19 Apr 2024 02:24
TamilNet
HASH(0x5568075a0db8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 19 Apr 2024 02:33


புதினம்
Fri, 19 Apr 2024 02:33
















     இதுவரை:  24779041 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2977 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com