அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 11 March 2026

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இன்றே வாழ்ந்து விடு..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எ.ஜோய்  
Thursday, 12 January 2006

நான் தனித்திருந்த பொழுதுகளில்
எனக்குள் கவிஞனாகவும்
பார்ப்போருக்கு பைத்தியமாகவும்
கழியலாம் அந்தக் கணங்கள் …

ஆயினும்
தனிமையும் அந்தக் கணங்களும்
எனக்குப் பிடித்திருக்கிறது …

காற்று சுமந்து வந்த
இலை ஒன்று
என் கன்னத்தில் அறைந்து
ஏளனம் செய்தது …

விழித்த விழிகளுக்குள்
மணல் துகள் புகுந்து
சில்மிஷம் செய்தது …

அணிவகுத்த பூக்களில்
பட்டாம் பூச்சி கலவிக்க
சொட்டுச் சொட்டாய்
சிந்தியது தேன் …

நான் தனித்த போதெல்லாம்
களித்த பொழுதுகளாய்
இயற்கையோடு நான் இருந்தேன்
அப்பொதெல்லாம்
எனக்குள் கவிஞனாகவும்
பார்ப்போருக்கு பைத்தியமாகவும்
கழியலாம் அந்தக் கணங்கள் …

அந்தக் கணங்களே
என் நிகழ்காலக் கணங்களாய்
வாழப்படும் போது
பார்ப்போருக்கு
நான் பைத்தியமாகிறேன் …

நேற்றைய காலம்
மரித்துப் போன காலம்
நாளைய காலம்
நிச்சையமற்ற காலம்
இன்று மட்டுமே
எனக்காய் நிச்சையிக்கப் படும் போது
வாழ்ந்துவிடுகிறேன்
அப்போதெல்லாம்
எனக்குள் கவிஞனாகவும்
பார்ப்போருக்கு பைத்தியமாகவும்
கழியலாம் அந்தக் கணங்கள் …

26-08-2005

 


     இதுவரை:  28380305 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2158 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com