அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 21 March 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 26 arrow வேம்படிச்சித்தன் கவிதைகள்.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வேம்படிச்சித்தன் கவிதைகள்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வேம்படிச்சித்தன்  
Tuesday, 02 May 2006

01.
கடலடியில் அகப்பட்ட
காற்றுத் துளி
நிலைக்குத்தாய்
நீந்திச் சென்று
காணாமற் போனது.

காணமற்போன எல்லையில்
அது எழுதிய
விடுதலையின் பாடலை
அழித்துச் சென்றது
காற்றால் பிறந்த
அலை.


02.
கடந்து போன
பருவமொன்றில்
கழன்று காய்ந்துலர்ந்து
மரத்தின் அடிவேரை அண்டி
இன்னமும் கிடந்தன
சில இலைகள்

வசந்தத்தில்
புதிதாய்த் தளிர்த்த
தளிர்களைக்கண்டு விடுத்த
பெருமூச்சின் ஒலியில்

உறங்கிக் கிடக்கின்றன
மண்ணினுள் வேர்கள்.

  •  


03.
அடுத்த பக்கம்
சென்று சூரியன் மறைந்தபின்
அலைந்தலைந்து முகில்மூடும்
உருண்டைச் சிறைக்குள்
 
நான்கண்ட எல்லா மரங்களும்
காண்போரற்ற
தனிமையை வாழும்

இன்றிரவு
நான் பகல் கண்ட காடொன்றின்
அனைத்து மரங்களும்
என் மனக்காட்டின்
தனிமையில் வாடும்.

  •  

மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 21 Mar 2023 19:06
TamilNet
HASH(0x556f418ce4f0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 21 Mar 2023 19:06


புதினம்
Tue, 21 Mar 2023 18:14
















     இதுவரை:  23443243 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1980 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com