அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழை அச்சேற்றிய சீகன் பால்கு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தினமணி  
Wednesday, 05 July 2006

தமிழை அச்சேற்றிய சீகன் பால்கு தரங்கம்பாடி வந்த 300 ம் ஆண்டு விழா

திருச்சி, ஜூலை 5: முதன் முதலில் தமிழை அச்சு ஏற்றியவரும், தமிழ்மொழிக்கு அரும் பணியாற்றியவருமான சீகன் பால்கு தரங்கம்பாடி வந்து சேர்ந்த 300-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் ஜூலை 8,9 தேதிகளில் தரங்கம்பாடியில் நடைபெற உள்ளன.

தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபையின் தரங்கம்பாடி ஆயர் அருட்திரு டி. அருள்தாஸ், பொருளர் பி.எம். பாஸ்கரன் ஆகியோர் திருச்சியில் செவ்வாய்க்கிழமை இத்தகவலை தெரிவித்தனர்.

ஜூலை 8-ம் தேதி காலை அருட்பணி மறுமலர்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. அன்று மாலை சீகன்பால்கு நினைவு தீபம் ஏற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட புதிய எருசலேம் தேவாலயம் திருநிலைப்படுத்தப்பட உள்ளது.

ஜூலை 9ம் தேதி காலை திருப்பவனி நடைபெற உள்ளது. புளூட்சோ தொடக்கப்பள்ளி, குழந்தைகள் காப்பகம், சீகன்பால்கு மாணவர் விடுதி, நினைவுச் சின்னம் ஆகியவை திறந்து வைக்கப்பட உள்ளன.

சீகன் பால்கு வாழ்க்கைக் குறிப்பு: 1682ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த சீகன்பால்கு, டென்மார்க் நாட்டின் திருச்சபை சார்பில் கிறிஸ்தவ மதப் பிரசாரப் பணிக்காக கப்பல் மூலம் 1706-ம் ஆண்டு தரங்கம்பாடி வந்திறங்கினார். வந்த 11வது நாளே தமிழ் கற்கத் தொடங்கினார்.

பின்னர் தமிழ்ப் பள்ளிகள், பெண்களுக்கான பள்ளிகளைத் தொடங்கினார். 17,000 சொற்களைக் கொண்ட தமிழ் அகராதியை உருவாக்கிய அவர், புதிய ஏற்பாட்டை முதன் முதலாக தமிழில் மொழிபெயர்த்தார்.

1710-ம் ஆண்டில் ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரத்தைக் கொண்டு வந்தார். தமிழ் மர அச்சுகளை தயாரித்தார்.

பொற்கொல்லர்களைக் கொண்டு சிறிய தமிழ் அச்சுகளை உருவாக்கினார்.

1715-ம் ஆண்டில் தமிழ் மொழியில் முதன் முதலாக புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். சீகன் பால்குவின் முயற்சியால் இந்திய மொழிகளில் முதல் மொழியாக தமிழ் அச்சேறியது. 1718-ம் ஆண்டில் தரங்கம்பாடியில் புதிய ஜெருசலேம் தேவாலயத்தை உருவாக்கினார். 1719-ம் ஆண்டு மறைந்தார்.

தினமணி:05-07-06


     இதுவரை:  24776443 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2575 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com