அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மரம் காய்க்கும் மனிதம் வேண்டும்...!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: செ.லோகநாதன்  
Wednesday, 12 July 2006

உப்புமிழ்ந்து கடல் சூழும் எம்மண்ணில்
உவர்ப்புக்கோ பஞ்சமில்லை.
கனிமங்கள் கரைந்தோடி
நிலநீரும் அவையாகும் மண்ணெமது.

அந் நிலமிடையே முகையெடுத்து
வேரோடி மரமான மரமொன்று
பூக்காது காய்க்காது முடமாச்சு.

அதன் இலை கருகிக் காய்ந்திருக்கும்
கிளை சூம்பி விரல் மடிக்க
குருவிச்சை படர்ந்ததனில் மதம்பிடிக்க
அதனிடையே குருவியொன்றின் கூடிருக்க
சிலகுஞ்சு அதனுள்ளே தலைநீட்டும்...
அப்போதும் அந்தமரம் முகையெடுக்கும்..!

என்றாலும் அந்தமரம்
பூமலர்த்திக் காய்கண்டு
பழமுதிர்த்தி விதை பரப்பி
இனம் தனைப் பெருக்கிடத்தான்
முயற்சிமேல் முயற்சிக்கும்..!

ஆனாலும்... ஆனாலும்...
நிலநீரில், மண்முழுதாய்
கலந்திருக்கும் கனிமங்கள்
அந்தமர மரபணுவில் கலந்திருந்து
மரமதனை பூமலர்த்த மறுத்துரைக்கும்..!?

இச் சூட்சுமங்கள் புரியாத - மனமெனது 
மரமதனைத் தறித்தெறிய
ஏதேதோ தேடிச்செல்லும்.

என்னத்தைத் தேடுகின்றேன்...?
அரிவாளை - கோடரியை... 
எதற்காக அது எனக்கு...?
அறுக்கவேண்டும்... தறிக்கவேண்டும்...
என்ன..?
காலத்தே காய்க்காத - தன்
கோலத்தை மாற்றாத
தேவை எந்தன் புரியாத மரமதனை...!?
அறுக்கவேண்டும்... தறிக்கவேண்டும்..!

ஐயையோ.. ஐயகோ..
மரமது காய்க்காதோ..!!
நிலையெது அறிவாயோ மடைப்பயலே..?

ஆழ்நீரும் - மண்வகையும்
புலம்மீது உப்புவர்ந்து கிடக்கையிலே
மரமதனின் குறையறிந்து
உழுத்தமண் உவர் போக்க
உரியவை சேர்த்தாங்கே
உள்வள மாற்றஞ்செய்...
அதற்கான தேடலினை
நிலமெலாம் தேடிச்செல்...

அதுவரைக்கும்.. அதுவரைக்கும்..
அறுக்காதே அறுக்காதே
மரமதனைத் தறிக்காதே.

18.06.2006

 


     இதுவரை:  24785127 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2478 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com