அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வேம்படிச்சித்தன் கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வேம்படிச்சித்தன்  
Wednesday, 12 July 2006

01.
மீண்டும் மீண்டும்
புறப்பட்டுக்கொண்டேயிருக்கிறது
புகையிரதம்.

எந்தத் தரிப்பிடத்திலும்
இரண்டாம் முறை
தரிக்காத புகையிரதம்.

முன்னைய தரிப்பிடத்தில் தரித்தபோது
அதனுள்ளிருந்த நானைத் தேடுகிறது
அடுத்து வரும் தரிப்பிடத்தில்
தொலைந்து விடப்போகும் போகும் நான்.

மீண்டும் மீண்டும்
புறப்பட்டுக்கொண்டேயிருக்கிறது
தண்டவாளங்களில் நிரந்தரமாய்த்
தொலைந்து கொண்டேயிருக்கும்
புகையிரதம்.


02.
நறுமணமலர்ச்சோலை
பார்க்குமிடமெங்கும்
பரந்து பூத்திருக்க

ஒருவன் மட்டும்
இருளில் வந்த பூனை
அச்சோலையின் தூரத்து
முடுக்கொன்றில்
கழித்த மலத்தில்
மொய்த்த ஈயைக்
கண்டு மிரண்டு
கொண்டிருந்தான்.

மூக்கு வழி நுழைந்த மலமணம்
அவன் மூளைக்குள் புகுந்து
குடிகொண்டது.


03.
சிலவேளை
அகேனமாக
பெரும்பாலும்
சாத்தியமில்லாமலே
போய்விடலாம்.
சிலவேளை
எண்ணியபடியே
சரியாகவும்
அமைந்துவிடலாம்.
சிலவேளை
கண்டிப்பாக
சிலவேளை
பெரும்பாலும்
நடந்தேறுவதற்கான
வாய்ப்புகளும்
உண்டு.

சிலவேளைகளில்
அனைத்துமே
தலைகீழாகியும்
நேரிடலாம்.
சிலவேளை
அனேகமாக
எண்ணியது
சாத்தியமாகவும்கூடும்.
சிலவேளை
பெரும்பாலும்
அனேகமாக
நடக்கவும் கூடும்.
அசாத்தியம்
சிலவேளை
சாத்தியமாகும்
போலவும்
பெரும்பாலும்
தெரிகிறது.

காத்திருத்தல்கூட
இப்போ கயிற்றில்
நடத்தல் போலாகிவிட்டது.

 


     இதுவரை:  24804583 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5158 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com