அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 28 arrow என் பார்வையில் சமத்துவம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


என் பார்வையில் சமத்துவம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நல்லைக்குமரன் (Melbourne)  
Wednesday, 23 August 2006
பக்கம் 1 of 3

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சமத்துவம் என்ற சொல் ஆதிகாலம்தொட்டு அநாகரீகமாகவே இருந்து வந்துள்ளது என்பதை பலவேறு காரணிகளால் ஊகிக்கக்கூடியதாய் இருக்கின்றது.
அண்மையில் தமிழ்/ஆங்கில அகராதியில் 'egalitarian'  என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்று பார்க்கப்போன சமயம்தான்; இந்த பாரிய சமுதாயத் தவறு தெரிந்தது. தவறென்று கூறமாட்டேன் தமிழினத்தை இழிவுபடுத்தும் திட்டமிட்ட தப்பு இது. இந்த அநியாயத்துக்கு எமது புத்திஜீவிகளே காரணிகளாகி அவர்களின் கையாலாகாத எடுபிடிகளும் துணைபோயிருக்கின்றார்கள் என்பது தான் மிகப்பெரிய கவலையாகும். இதன் காரணமாகவே ஆற அமரச் சிந்தித்து சகல ஆதாரங்களையும் திரட்டிய பின்னர் நான் இந்தக் கட்டுரையை எழுவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவசியத்தின் நிமித்தம் ஆங்காங்கே ஆங்கில மொழிப்பிரயோகம் தவிர்க்க முடியாததாக உள்ளது. 
 
1862 ல் (New Delhi, Madras) வெளியான Winslows’s - A comprehensive Tamil & English Dictionary  என்னும் தன்னிகரற்ற அகராதி 11வது மீள்பதிப்பை 1998 ல் பதிப்பித்துள்ளது. ISBN:  81-2006-0000-2.
அதில் சமன் என்ற சொல் உண்டு. ஆனால் சமத்துவம் என்ற சொல் காணப்படவில்லை. 
 
இது144 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விடயங்கள்.
 
சமத்துவம் என்ற வார்த்தை தமிழ் மக்கள் நாவில் வரக்கூடாது என்பதற்காகவே அகராதியில் அது காணப்படவில்லையா? அல்லது புதுடில்லியில் அகராதிகள் உண்டாக்கியவர்கள் வேண்டுமென்றே தவிர்த்தார்களா?
'egalitarian' எனப்படுவது சகலருக்கும் சமத்துவம் வழங்கப்படவேண்டும் என்று பகிரங்கமாக பரிந்துரைப்பதைக் குறிக்கும் சொல்லாகும் (advocating equal rights for all).   
                                                                 விழுப்புண்கள் படுத்தும்பாடு:

‘தமிழ்நாடு ஜைனர் ஆதிக்கத்திலிருந்தபோது தமிழர்கள் பிரகிருதத்துக்கு அடிமையானார்கள். பௌத்த செல்வாக்கு இருந்தபோது பாளி மொழிக்கு அடிமையானார்கள். வட இந்திய வைதீகர் வந்த நாள் தொட்டு அவர்கள்தம் சமஸ்கிருத மொழிக்கு அடிமையானார்கள். இன்றும் கோவில்களில் சமஸ்கிருத மொழியின் அடிமைகளாக இருக்கின்றார்கள். இப்படியாக அவ்வப்போது ஆதிக்கம் செலுத்துபவர்களின் மொழிக்கு அடிமையாகி ஆங்கிலம் , தமிழ் கலந்த ‘தமிங்கில மொழி’ யைப் பேசுவதில் இன்று இன்பம் காண்கின்றார்கள். எனவே தமிழகத் தமிழர்கள் எங்கு செல்கின்றார்கள் என்பது புரியவில்லை. தமிழ்நாட்டின்மேல் ஆயிரக்கணக்கான அரசியல் படையெடுப்புக்கள் நிகழ்ந்துள்ளன. வெற்றியும் தோல்வியும் வந்தன. போயின. ஆனால் அவ்வப்போது அயல் நாட்டார் இட்டுச் சென்ற கலாச்சாரக் கலப்புக்கள் தமிழர் வாழ்வை விட்டு அகலவேயில்லை. விலகவே இல்லை. அடையாளம் தெரியாத விழுப்புண்களாக நூற்றுக்கணக்கான பண்பாட்டுப் படையெடுப்புக்களின் வெற்றிச்சின்னங்கள் மறைந்து நிற்கின்றன. உண்மையில் தமிழர்தம் நடைமுறைவாழ்வில் தமிழகத்தில் தமிழ்ப்பண்பாடு அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காணப்படுகின்றன. அவைகூடச் சில சந்தர்ப்பங்களில் ஒளிந்தும் மறைந்தும் கண்ணுக்குப் புலப்படாமல் அமுங்கிக் கிடக்கின்றன.’ - இந்த அறைகூவல் க.ப. அறவாணன் அவர்களின் உள்ளக் குமுறலைத் தெளிவாகக் காண்பிக்கின்றது.

தொடர்கதையாக நடைமுறையிலுள்ள இந்த விழுப்புண்களை அகற்றுவது என்பது இன்று இலகுவான காரியமல்ல. அவைகள் முற்று முழுதாக அகற்றப்பட்டாலே தமிழ் மணம் வீசும். தமிழ் நாட்டில் தமிழ் படும்பாடு பரிதாபத்துக்குரியதுதான்! அதற்கு அடிப்படைக்காரணம் கல்வி என்னும் பொக்கிஷம் அவர்களில் அநேகருக்குக் கிட்டாத ஒன்றாகக் காலம் காலமாகப் பார்ப்பன வர்க்கம் திட்டம்போட்டுக் கட்டியாண்டதுதான். தமிழர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மை தலைமை வழிபாட்டுடன் சங்கமித்துவிடுகின்றது. அவர்களைக் குற்றம் சொல்வது அழகல்ல. உண்மையில் அவர்கள் இன்றும் பல நூற்றாண்டுகளாகத் ( 691 வருடங்கள்) திணிக்கப்பட்ட அன்னிய கலாச்சாரப் படையெடுப்புக்களின் கோரப்பிடியில் சிக்கியே நிற்கின்றனர். 
  
தமிழர்களின் பண்பாடு , கலாச்சாரம் என்று பார்க்கும்போது பெண்களைப் பற்றியும் அவர்களது பொட்டும், தாலியும், நடை, உடை, பாவனைகள் மட்டும் ஆண்களால் அரங்குகளில் அலசப்படுகின்றன. ஆனால் ஆண்களின் ஒழுக்கங்கெட்ட பழக்கங்கள், இழுக்கான வழக்கங்கள் பற்றிச் சிறிதும் பேசப்படுவதில்லை. ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக தென் இந்தியாவிலும் இலங்கையிலும் பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள் ஆகிவிடுகின்றார்கள்.

உண்மையில் கலாச்சாரம் , பண்பாடு என்ற பெயரில் பெண்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்- ஆண்களால் அடிமைப்படுத்தப்படுகின்றனர். கொட்டும் பனியில் சேலை அணிவதுதான் எமது பண்பாடு என்று சொல்லிக்கொண்டு சிட்னி மாநகரில் சேலை உடுத்திக்கொண்டு திரியமுடியுமா?  தமிழ் மக்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லாத காலங்களில் யாழ்ப்பாணத்தில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் சிங்கள இராணுவத்தினரின் கழுகுக் கண்களிலிருந்து தங்களைக் காப்பாற்றும் எண்ணத்துடன் குங்குமம் அணிந்து மணமானவர்களாக நடித்ததை எல்லோரும் அறிவார்கள்.

அதற்கு முன்பாக மழைக் காளான்கள்போன்று பல இயக்கங்கள் முளைத்து இருந்த காலகட்டத்தில் இயங்கிய ‘கள்வர்’ களுக்குப் பயந்து மணமான பெண்கள் தங்கள் பவுண்தாலியையும் கொடியையும்; கழற்றி வைத்துவிட்டுத்தான் வெளியே போய் வந்தார்கள். கணவர் முன் செல்ல மனைவி பின் செல்லவேண்டும் என்ற காலகட்டம் கடந்து போய் கோவிலுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ மனைவி முன்செல்லக் கணவன் அக்காலகட்டத்தில் பின்சென்றதில்லையா? இத்தகைய சூழல்களில் பண்பாடு,  கலாச்சாரம், ஆண் என்ற முனைப்பு எங்கே போய்விட்டது ?

ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபட்ட பண்பாட்டையோ கலாச்சாரத்தையோ யார் உருவாக்கினார்கள் ?  பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களது வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் களிப்புறாமல் நெருப்பை மடியில் கட்டிக் கொண்டு வாழ்பவர்போல் தவிப்புடன் இனியும் வாழத்தான் வேண்டுமா ? ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று யாரால் வகுக்கப்பட்டது ?

எங்கிருந்தோ வந்தவர்கள் வகுத்த நெறிமுறைகள் என்றென்றும் வாழத்தான் வேண்டுமா? வந்தாரை வரவேற்க வேண்டும் என்று வேதநெறி சொல்கின்றது. வந்தாரை வரவேற்ற தமிழினம் இன்று படும்பாடு தெரிகின்றதா ?

பெண்பிள்ளையை வளர்த்து ஆளாக்கி ஒருவன் கையில் ஒப்படைத்த பின்னர் அவனிடம் அடங்கி ஒடுங்கி நடந்து அவன் அடித்தாலும் உதைத்தாலும் தாங்கிக் கொண்டு நடந்ததை நான்கு சுவருக்கப்பால் தெரியாமல் அவன் மானத்தைக் காத்துத் தாய்மையுடனும் தோழமையுடனும் கவனித்துப் பிறந்த வீட்டின் பெருமையைக் காக்க வேண்டும் என்ற செயற்;பாடு இன்றைய நவீன காலகட்டத்திலும் திரைமறைவில் எத்தனையோ இல்லங்களில் இனியும் நடைபெற்றுக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா?

இந்த நியதியில் எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது என்ற எழுதாத சட்டம் தொடர்கதையாக இருக்கத்தான் போகின்றதா?
 
ஆண்வர்க்கம்  பெண்வர்க்கத்தைப் பல்வேறு நியாயங்களைக் காண்பித்து ஆண்ட காலம்போய் ஆணின்துணை பெண்ணுக்கு அவசியமில்லை என்ற விரக்தி நிலை பெண்களுலகில் தோன்றிவருகின்றது. ஆணியத்தைக் காப்பாற்றப் பெண்களோடு ஆண்கள் ‘யுத்தம்’ தொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் நிட்சயம் ஏற்படப்போகின்றது. அந்தப் பயங்கர நிலைமை ஏற்படாமல் புத்திசாலித்தனமாக ஆண்வர்க்கம் நடப்பார்களா என்று பொறுமையுடன் காத்திருந்து பார்ப்போம்.

பண்பாடு, கலாச்சாரம் என்று பார்க்கும்போது அதில் எத்தனையோ விடயங்கள் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. ஆண்களோ  பெண்களோ தனித்து நின்று எதையும் சாதித்துவிட முடியாது என்பது உண்மையே. இது இயற்கையாக மனித இனத்துக்கு இறைவன் வகுத்த வழியாகும் . எனவே காலத்துக்கேற்ப இடத்துக்கு ஏற்ப நிட்சயம் சில விடயங்களில் மாற்றம் செய்துதானாகவேண்டும். அவை எவை என்று மட்டும் பட்டிமன்றங்களிலோ ஆலயங்களிலோ அலசி ஆராயலாம்.  மனுதர்ம சாஸ்திரம் என்ற வட இந்திய வேதியர் விதிமுறைகள் பல்வேறு ரூபங்களில் தமிழர்களின் அன்றாடவாழ்வில் திணிக்கப்பட்டுள்ளன. அவைகள் மட்டும் முற்றாகக் களையப்பட்டால்தான் தமிழர் வாழ்வு சிறப்படைய வாய்ப்பு உண்டு.



மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 17:07
TamilNet
HASH(0x55f5199c69a0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 17:07


புதினம்
Thu, 28 Mar 2024 17:07
















     இதுவரை:  24713340 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6215 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com