அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 18 October 2026

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
தொடர்பு
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


விலையற்ற உயிர்கள்!……   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வேதா. இலங்காதிலகம்.  
Thursday, 05 October 2006

தீப்பெட்டியும் இல்லையாம் ஊரில்!
தீ உருவாக்க என் செய்வார்கள்?.
தீய்ந்த காலமாய் அவர்கள்…
தீ உருவாக்குவார்களா?.....
கல்லும் கல்லும் தேய்த்து…
காய்ந்த சருகில் தீப்பிடிக்கக்….
காரியம் ஆற்றுவாரோ?...சிந்தனை…
கணனி யுகத்திலும் இந்நிலை!
¤¤¤¤
தீய்ந்த மனதின் ஆணவம்
தீராத நாட்டுப் பிரச்சனை.
தீயான ஆணவம் அழிவு!…ஆக்கமல்ல!
தீர்க்கசான்று ஆதிச் சரித்திரங்கள்.
தீமையிலின்று அலையும் மக்கள்
தீர்வு கட்டாந் தரையாகுமோ?
உல்லாச சொர்க்கபுரி நாட்டில்
மல்லாடி அழியுமுயிர்கள்…ஐயகோ!
¤¤¤¤
சிறு விட்டுக் கொடுப்பு
மறு பக்கத் திறப்பு.
பெறும் அற்புதச் சிறப்பு.
அறுவடை பல்லுயிர் நிலைப்பு.
வில்லாடும் வேந்தரெல்லாம்
மல்லாடிக் களைக்காரோ?
அல்லாடும் மனம் இங்கு…
சொல்லாடும் மனங்களும்…இங்கு..

வேதா இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்..


     இதுவரை:  29859987 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3168 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com