அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வேம்படிச்சித்தன் கவிதை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வேபம்படிச்சித்தன்  
Thursday, 05 October 2006

காலத்துள் வாழ்க்கை
பயணிப்பது போல்
பயணிக்கிறது
புகையிரதம்.

யன்னலினூடு ஏதோவோரு
கோடைகாலக் காட்சிகள்
ஓடிக்கொண்டேயிருக்கின்றன.

யன்னலினூடு
வந்துகொண்டேயிருக்கும் வருவது
யன்னலினூடு
போவதாகித் தொலைய
தொடர்ந்தும் வருவது
வந்துகொண்டேயிருக்கிறது.

போனது என் யன்னலுக்கு வெளியில்
மட்டுமே போய்முடிந்தது.
அது வேறு யன்னல்களுக்கு
இப்போதும் வந்துகொண்டும்
போய்கொண்டுமேயிருக்கிறது.

என் யன்னலுக்கு வந்துபோனது
யாரேனினதும் யன்னலுக்கு இன்னமும்
வந்து கொண்டிருப்பதுபோல்

என் யன்னலுக்கு
வந்து கொண்டேயிருப்பதும்
யாரேனினதும் யன்னலுக்கு
ஏற்கெனவே வந்துபோனதுதான்.

புகையிரதத்தை விட்டு நீங்கிப் போதலில்
இருக்கிறது யன்னலின் இன்மை.


     இதுவரை:  24776093 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2690 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com