அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow மகரந்தம் arrow காதலர்கள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


காதலர்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: த.தர்மகுலசிங்கம்  
Saturday, 19 June 2004

பாட்டி(இந்தக் கதை டெனிஸ் மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டதான "பாட்டி" என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.. இதனை த.தர்மகுலசிங்கம் மொழிபெயாத்திருந்தார். இவர் ஏற்கனவே "தாய்" என்ற தலைப்பிலும் மொழிபெயர்ப்புக் கதைத் தொகுதியொன்றை வெளியிட்டுள்ளார். இந்த இருதொகுதிகளிலும் உள்ள கதைகளை எழுதியவர் டெனிஸ் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளரான "அனசன்" அவர்களாகும். இவரை ஆங்கிலத்தில் அண்டர்சன் என அழைக்கிறார்கள்.)

 


ஓரு பம்பரமும் ஒரு சிறிய பந்தும் மற்றைய விளையாட்டுப் பொருட்களுடன் ஓர் இழுப்பறைக்குள் இருந்தன. "நாம் ஒரே அறையில் இருக்கிறோமே, நாம் மணமகன் - மணப்பெண் ஆக இருக்கலாமா?" பந்தைப் பார்த்துப் பம்பரம் கேட்டது.

ஆனால் வெள்ளாட்டுத் தோல் மேலங்கி மாட்டிய பந்து, எந்த ஓர் இளம் சீமாட்டியைப் போலவே, மிகவும் அகந்தை கொண்டு, அதன் பிரேரிப்புக்கு எவ்வித பதிலும் சொல்லவில்லை.

அடுத்தநாள் அந்த விளையாட்டுப் பொருட்களின் சொந்தக்காரனான சிறுவன் வந்து, அந்தப் பம்பரத்திற்கு சிவப்பு மற்றும் மஞ்சள் வர்ணங்கள் பூசி, ஒரு பித்தளை ஆணியையும் அறைந்து வைத்தான். அந்தப் பம்பரம் சுழன்றபோது, அதி அற்புதமாகத் தோன்றியது!

அந்தச் சின்னப் பந்தைப் பார்த்து 'என்னைப் பாரேன்' என்று அது கூச்சலிட்டது. "நீ என்ன சொல்லுகிறாய்? நமக்குள் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் அல்லவா? ஒருவருக்கொருவர் மிகவும் பொருத்தமானவர்களாக இருக்கிறோம். நீ துள்ளுகிறாய். நான் நடனமாடுகிறேன். இருவரும் இணைந்தால் நம்மைப் போல் யாரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது"
"உண்மையாகவா? நீ அப்படியா நினைக்கிறாய்?" எனச் சின்னப் பந்து பதில் கூறியது. 'என் அப்பாவும் என் அம்மாவும் வெள்ளாட்டுத் தோல் செருப்புகள். எனக்குள் ஸ்பெயின் நாட்டுத் தக்கை இருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா?'

"ஆமாம். ஆனால் மலை வேம்பு மரத்தினால் செய்யப்பட்டவனல்லவா நான்? நகரபிதா அல்லவா என்னைத் தனது கடைசல் எந்திரத்தில் செய்தார்? என்னைச் செய்ததில் எவ்வளவு மகிழ்ச்சி அவருக்கு" எனறு பம்பரம் சொன்னது.

"நீ சொல்வதை நான் நம்ப முடியுமா?" என்று கேட்டது சின்னப் பந்து.

"நான் பொய் சொல்லியிருந்தால் என்னை யாரும் சுற்றவிடாமல் போகட்டும்" என்று பம்பரம் பதிலளித்தது.

"நீ என்ன வேண்டுமானாலும் பெருமையாக சொல்லிக் கொள். ஆனால் உன் கோரிக்கையை நான் ஏற்கமாட்டேன். நான் கிட்டத்தட்ட மணப் பெண்ணாக நிச்சயிக்கப்பட்டவள்தான், அந்தக் கோடைத் தூதுவனான குருவிக்கு. நான் வெளியே வரும்போதெல்லாம், என்னைக் கட்டிக் கொள்கிறாயா என்று அந்தக் குருவி கூட்டிலிருந்து எட்டிப் பார்த்துக் கேட்கும். நானும் மௌனமாகத் தலையாட்டி விட்டேன். கிட்டத் தட்ட பாதி நிச்சயதார்த்தம் முடிந்த மாதிரித்தான்;. இருந்தாலும் உன்னை நான் மறந்து விட மாட்டேன்." என்றது பந்து.

"சரி, அது மிகவும் நல்லது" என்றது பம்பரம்.

அதற்கு மேல் அவை ஒன்றுடன் ஒன்று பேசிக் கொள்ளவில்லை.

அடுத்த நாள் அந்தப் பையன் வந்து பந்தை எடுத்து எறிந்தான். அது காணமுடியாத உயரத்திற்கு ஒரு பறவையைப் போலப் பறந்தது. அது ஒவ்வொரு முறை தரையில் வந்து விழும்போதும், அது மேலே பறக்க விரும்புவது போல் விரைந்து மேலெழும்பியது. அதன் உள்ளிருந்த ஸ்பானிய தக்கையின் காரணமாகவும் இருக்கலாம். ஆனால் ஒன்பதாம்முறை தரையிலிருந்துகிளம்பிய அதனை மீண்டும் காணமுடியவில்லை. அந்தப் பையன் தேடித்தேடிப் பார்த்தான். அது தரைக்குவரவே இல்லை. எங்கோ மறைந்து விட்டது.

"அது எங்கிருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்." பெருமூச்சுவிட்டது பம்பரம். "அது குருவிக் கூட்டிலேதான் இருக்கிறது. அது அந்தக் குருவியைத் திருமணம் செய்து கொண்டுள்ளது"

பந்தை நினைக்க நினைக்க பம்பரத்திற்கு ஏக்கம் அதிகரித்தது. பந்தை அடைய முடியாததால் அதன் காதல் வளர்ந்தது. ஆனால் பந்து வேறொருவனைக் காதலித்தது. இக் கதையில் விசித்திரமான ஒரு திருப்பம். பம்பரம் சற்றிச் சுற்றி வந்து பாடல்களை முணுமுணுத்து நடனம் ஆடியது. அதன் கற்பனையில் பந்து மேலும் மேலும் மெருகேறி அழகாய்த் தெரிந்தது. இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன. இந்தக் காதல் பழைய காதல் ஆகிவிட்டது.

பம்பரம் இப்போது இளமையாக இல்லை. ஆனால் ஒரு நாள் மிக அழகாக மின்னும் தங்கப் பம்பரம் போல துள்ளியது. ஆம் பார்க்கத் தக்க காட்சி அது. ஆனால் ஒரே துள்ளலாக மேலே போய்விட்டது@ கண்ணுக்குத் தென்படவே இல்லை.

எல்லோரும் தேடித் தேடிப் பார்த்தார்கள். எங்குமே காணோம். பரண்மீது கூடக் காணோம். எங்கே போயிருக்கும்?

அது தட்டுமுட்டுச் சாமான் கிடந்த குப்பைக் கூடைக்குள் போய் விழுந்துவிட்டது. அதற்குள் கோஸ் தண்டுகள், பெருக்கப்பட்ட குப்பைகள், கூரையிலிருந்து விழுந்த புழுதிகள் அனைத்தும் கிடந்தன.

"இது நல்ல இடந்தான் கிடப்பதற்கு  விரைவில் காலம் கழிந்து விடும். எப்படிப்பட்ட கும்பலில் மாட்டிக்கொண்டு விட்டேன்"

பிறகு அது சுற்றுமுற்றும் பார்த்தது. இலைகளற்ற முட்டைக்கோஸ் காம்புகளுக்கிடையே பழைய ஆப்பிள் பழம் போல் ஏதோ தென்பட்டது. அது பழம் அல்ல ஒரு பழைய பந்து. நீரில் ஊறிப்போய் பல ஆண்டுகளாக கூரையின் மேல் வடிகாலில் கிடந்த பந்து.

"அட கடவுளே, நாம் பேசும்படிக்கு யாரோ கிடைத்திருக்கிறாரே" என்ற சின்னப் பந்து, பம்பரத்தைப் பார்த்தது. "நான் வெள்ளாட்டுத் தோலும் ஸ்பெயின் தக்கையும் கொண்டு கன்னிப் பெண்களால் செய்யப்பட்ட அதே பந்துதான். அதனை நினைத்துக் கொண்டு யாரும் என்னைத் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். கிட்டத்தட்ட நான் குருவியை மணந்து கொண்ட மாதிரித் தான். ஆனால் இந்தக் கூரை வடிகாலில் விழுந்து, முழு ஐந்தாண்டு காலம் நனைந்து கிடக்கிறேன். நீ என்னை நம்பு! ஓர் இளம் பெண்ணுக்கு இது நீண்டதோர் காலம் அல்லவா?"  ஆனால் பம்பரம் ஒன்றுமே சொல்லவில்லை. அது தனது பழைய காதலை எண்ணிப் பார்த்தது. அந்தக் குரலைக் கேட்கக் கேட்க, அது அவள் குரல் தான் என்பது தெளிவாகியது.

அப்பொழுது வேலைக்காரப் பெண் வந்தாள். அந்தக் குப்பைத் தொட்டியைக் கொட்ட  விரும்பினாள்.

"ஆகா ஒரு பளபளக்கும்பம்பரம்!" என்று கூச்சலிட்டாள் அவள்.

இப்படியாக பம்பரம் மீண்டும் கவனத்திற்கும் கௌரவத்திற்கும் ஆளாகியது. ஆனால் பந்தைச் சீந்துவாரில்லை. பம்பரம் தனது காதலைப் பற்றி மீண்டும் பேசவில்லை. ஏனெனில், அது மிக விரும்பிய பொருளேயாயினும், ஐந்தாண்டு காலம் கூரை வடிகாலில் கிடந்து நனைந்த பிறகு அத மரித்து விடும். ஆம், ஒருத்தியைக் குப்பைத் தொட்டியில் சந்திக்க நேர்ந்தால், மீண்டும் அவளை யாருக்கும் தெரிவதில்லைத்தான்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 20 Apr 2024 00:43
TamilNet
HASH(0x55e692286490)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 20 Apr 2024 00:48


புதினம்
Sat, 20 Apr 2024 00:48
















     இதுவரை:  24783854 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5188 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com