அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 29 arrow ஆவணப்படம் குறித்து..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஆவணப்படம் குறித்து..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Tuesday, 31 October 2006

'ஒரு நாள் அந்த மரம் விழவே செய்யும்'
பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றிய ஆவணப்படம் குறித்து..
1.
சில தினங்களுக்கு முன்னர் வடகிழக்கு மாகாண கலாசாரத்  திணைக்களம் தயாரித்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பற்றிய ஆவணப்படமொன்றை பார்க்கக்கிடைத்தது.  ஏற்கனவே நான் பார்த்த சில ஆவணப்பட அனுபவங்களுடன் ஒப்பிடும் போது போராசிரியர் குறித்த இந்த படத்தை  தரமானதொரு தயாரிப்பெனச் சொல்ல முடியவில்லை.  எனினும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பற்றிய ஓர்  ஆவணப்படமொன்றை வெளியிட வேண்டுமென கலாசார  திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் நினைத்ததையும் அதனை  செயற்படுத்தியதையும் பாராட்டாமல் விடுதல் சரியல்ல.  ஏனென்றால் இன்று நாங்களெல்லாம்  சிவத்தம்பியின்  மாணவர்கள் என பலரும் தம்பட்டம் அடித்துக் கொண்டு  திரியும் சூழலில், அவ்வாறானவர்கள் எவருக்கும் தோன்றாத எண்ணம் மேற்படி திணைக்களத்தைச் சேர்ந்தவர்களுக்கு  தோன்றியிருப்பதை எவ்வாறு பாராட்டாமல் விடமுடியும்.  அவ்வப்போது வடக்குகிழக்கு மாகாண கலாச்சார  திணைக்களம் சில உருப்படியான வேலைகளைச்  செய்வதுண்டு அதில் ஒன்றாக இந்த ஆவணப்பட  முயற்சியையும் சொல்லலாம். இந்த ஆவணப்படத்தை  பார்த்தபோது என்னுள் எழுந்த சில எண்ணங்களையே இங்கு பதிவு செய்ய விழைகிறேன்

2.
‘ஒரு நாள் அந்த மரம் விழவே செய்யும்’ இது  உமர்கயாமின் கவிதை வரிகளில்  ஒன்று. பேராசிரியர்  குறித்த ஆவணப்படத்தை பார்த்த போது இந்த கவிதை  வரியே என் நினைவுக்கு வந்தது உண்மையில் இந்த  ஆவணப்படத்திற்கு மேற்படி கவிதை வரியை தலைப்பாக  வைத்திருந்தால்; மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.  என்னளவில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமிழ்ச்  சிந்தனை உலகில், ஒரு பெரிய விருட்சம் என்பதில் ஏதும்  குழப்பங்கள் இருப்பதாக நான் கருதவில்லை. பேராசிரியர்  குறித்து கவிஞர் புதுவை இரத்தினதுரை தனக்கேயுரித்தான  கவிநடையில் அழகாகச் சொல்லுவார் “இன்றும் இவர்  இருக்கின்றார் என்ற துணிவில்தான் தமிழ் அழாமல்  இருக்கின்றாள்”ஆனால் சிலர் இதில் மாறுபடக் கூடும்  அவர்கள் மாறுபடுவதற்கான புள்ளி எது என்பது குறித்தோ  அல்லது அவ்வாறானவர்களின் விமர்சனங்கள் எங்கிருந்து  தொடங்குகின்றன என்பது குறித்தோ இந்த ஆவணப்படத்தில் எதுவுமில்லை. இதுவும் இந்த ஆவணப்படத்தில் உள்ள ஒரு  முக்கிய குறைபாடாகும். உண்மையில் பேராசிரியர் குறித்த  விமர்சனங்கள் அனைத்திற்கும் இன்றுவரை அவரது  அரசியல் நிலைப்பாடுதான் காரணமாக இருந்திருக்கின்றது  இன்றும் இருக்கின்றது. மார்க்சிய அடித்தளத்தலிருத்து  தோன்றிய கா.சிவத்தம்பி அவர்கள் 1990களிற்கு பின்னர்  தனது கவனம் முழுவதையும் தமிழ் தேசிய அரசியலின்  பக்கம் திருப்பினார் இதன் பின்னர்தான் அவர் அதிக  விமர்சனத்திற்கும், நிராகரிப்புகளுக்கும் ஆளாக நேர்ந்தது.  ஆரம்பத்தில் இலக்கியம் சார்ந்த உரையாடல்களில் மட்டுமே  விமர்சனத்திற்கும் நிராகரிப்புக்கும் ஆளாக நேர்ந்த  சிவத்தம்பி பின்னர் வெளிப்படையான அரசியல்  காரணங்களால் மட்டுமே அளவிடப்படும் நிலை  உருவாகியது. சமீபத்தில் நீண்ட இடைவெளிகளிற்கு பின்னர் வெளிவந்த முன்றாவது மனிதன் சஞ்சிகையில் இடம்பெற்ற நேர்காணலில், ஈழத்தில் கைலாசபதி தளைசிங்கம்  ஆகியோரின் தாக்கங்களை எவ்வாறு பார்க்கின்றீர்கள்  என்பதாக ஒரு கேள்வி அமைந்திருந்தது. இது ஒருவரது  சுயாதீனமான கேள்வி ஆனால் பொதுவாக இலக்கியச்  சூழலில் நாம் விமர்சனங்கள் குறித்து உரையாட  முற்பட்டால், நமக்கு உடன் நினைவுக்கு வருவதோ  கைலாசபதி சிவத்தம்பி ஆகிய பெயர்கள்தான். ஈழத்து  இலக்கியச் சூழலைப் பொருத்தவரையில் இவர்கள்  இருவரும் விமர்சன இரட்டையர்கள் என அறியப்படுவதே  வழமை இன்றுவரை. ஆனால் இங்கு சிவத்தம்பி ஏன்  தவிர்க்கப்படுகின்றார்? அவரை தவிர்க்க வேண்டுமென ஏன்  ஒருவர் நினைக்கின்றார்? உண்மையில் இன்று பேராசிரியர்  சிவத்தம்பி வரித்துக் கொண்டிருக்கும் அரசியல்தான் அவர்  தவிர்க்கப்படுவதற்கு காரணம். பேராசிரியர் கைலாசபதி  உயிருடன் இருந்திருந்தால் பெரும்பாலும் அவரது அரசியல்  நிலைப்பாடும் சிவத்தம்பியை ஒத்ததாக இருந்திருக்கலாம்,  அவருக்கும் சிவத்தம்பிக்கு நேர்ந்ததே நடந்துமிருக்கலாம்,  அந்தவகையில் கைலாசபதியை ஒரு அதிஸ்டசாலி  எனலாம். தளையசிங்கத்தின் தாக்கம் பற்றி பெரிதாகச்  சொல்லக் கூடிய வகையில் ஏதும் இருப்பதாகத்  தெரியவில்லை தம்மை உயர்சாதியினர் எனச் சொல்லிக்  கொள்வதை பெருமையாகக் கருதும் நோய்க் கூறு மிக்க  சமூகமொன்றின் பிரதிநிதியான தளைசிங்கம்; அந்த நோய்க்  கூறுக்கு எதிராக போராடியிருக்கின்றார் என்ற வகையில்  அவர் மீது எனக்கு மதிப்புண்டு. ஆனால் அவரது  சிந்தனைகள் ஈழத்து சிந்தனைச் சூழலில் பெரியளவில்  தாக்கங்கள் எதனையும் ஏற்படுத்தியதாக நான்  கருதவில்லை, அவரது சில நூல்களை நான் படிக்க  முற்பட்டு எனக்கு தலைசுற்றியதுதான் மிச்சம். இந்த  இடத்தில் நான் ஒரு விடயத்தை தெளிவாக்க  விரும்புகின்றேன் நமது சூழலில் என்னதான் கலைத்துவம்,  அழகியல் பற்றியயெல்லாம் நீண்ட விவாதங்களைச்  செய்தாலும் இறுதியில் எல்லாவற்றுக்கும் முன்னால்  வருவதோ அரசியல்தான். அரசியல்தான் ஒருவரை,  குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட தரப்பினர்  முதன்மைப்படுத்தவும், பிறிதொரு காலகட்டத்தில்  நிராகரிக்கவும் காரணமாக அமைகின்றது. எல்லாவற்றினதும் ஆணி வேராக இருப்பதோ அரசியல்தான் அரசியல் அற்று  இங்கொன்றுமில்லை. ஆனால் சிலர் தங்களுக்கானதொரு  அரசியல் நிகழ்சி நிரலை உட்செரித்துக் கொண்டே, தாம்  கலைவாதிகள், தாம் கலைத்துவத்திற்கே முக்கியத்துவம்  கொடுப்பவர்கள் என்றெல்லாம் பிதற்றித் திரியும் போதுதான் அவ்வாறானவர்களது போலித்தனத்தை சகிக்க முடியாமல்,  நமக்கு உரத்துச் சிரிக்க வேண்டும் போல் தோன்றுகின்றது.  பேராசியர் கா.சிவத்தம்மி அவர்கள் குறித்த நிராகரிப்புகள்  மற்றும் விமர்சனங்கள் அனைத்தும் அவரது அரசியலில்  இருந்துதான் தொடங்குகின்றன. பேராசிரியர் சிவத்தம்பியைப் பொருத்தவரையில் அவர் வைதீக மார்க்சிய தரப்பினர்  மற்றும் விடுதலைப் புலிகளின் தலைமையிலான தமிழர்  தேசிய விடுதலைப்போராட்டத்தை கருத்தியல் ரீதியில்  எதிர்ப்போர் ஆகிய இரு தரப்பினரது தாக்குதல்களுக்கும்  முகம் கொடுத்து வரும்  ஒருவராவார். ஆனால் சிவத்தம்பி  குறித்த இவ்வாறான பக்கங்களை ஒரு பார்வையாளருக்கு  கொடுக்கக் கூடிய வகையிலான எந்த பதிவுகளையும் இவ்  ஆவணப்படத்தால் கொடுக்க முடியவில்லை. முனைவர்  அரசு மற்றும் கனகா செல்வநாயகம் போன்றோரது  உரையாடல்களே ஓரளவிற்கு சிவத்தம்பியின் புலமைத்துவ  பக்கங்களை தொட்டுக் காட்டுகின்றன. அரசு தனது  உரையாடலில் தமிழக சூழலில் சிவத்தம்பியின் தாக்கங்கள்  பற்றி குறிப்பிட்டிருக்கின்றார் குறிப்பாக சிவத்தம்பி அவர்கள் தமிழகத்தில் இருந்த காலத்தில், இன்றும் தமிழக சிந்தனைச் சூழலில் கணிசமான தாங்கங்களை ஏற்படுத்தியவர்களாக்  கருதப்படும்; நிறப்பிரிகை குழுவினர், பேராசிரியர்  சிவத்தம்பியின் சிந்தனைகளால் பாதிக்கப்பட்டவர்களாக  இருந்ததாகவும் இதனை அவர்களே ஒப்புக்  கொண்டிருப்பதாகவும் அரசு குறிப்பிடுகின்றார் ஆனால்  நிறப்பிரிகை குழுவின் மிக முக்கியமானவரான à®….மார்க்ஸ்  தனது நேர்காணலொன்றில் சிவத்தம்பி தனது மார்க்சிய  பற்றை வெளிப்படுத்தும்போது நமக்கு சிரிப்புத்தான்  வருகின்றது என்று கூறியிருப்பதையும் இங்கு நினைவு  கொள்ளலாம். தமிழகச் சூழலில் பின்நவீனத்துவ நோக்கிலான சிந்தனைகளை முதன்மைப்படுத்தும் à®….மார்க்ஸ் தேசியம்  என்பதையும் ஒரு பெருங்கதையாடலாக சொல்ல முற்பட்ட  பின்னரேயே சிவத்தம்பியை நிராகரிக்க முற்படுகின்றார்  ஆனால் மறுபுறம் சிவத்தம்பி பின்நவீனத்துவம் குறித்து  பேசிய போது (தமிழில் நவீனத்துவமும் பின்  நவீனத்துவமும்) வைதீக மார்க்சிய தரப்பினர்  மத்தியிலிருந்து சிவத்தம்பிக்கு அறளை பேந்துவிட்டது  என்னும் வகையிலான விமர்சனங்கள் எழுந்தன இன்றுவரை இந்த இருவகை தரப்பினரது விமர்சனங்களை தாங்கிக்  கொண்டே பேராசிரியர் சிவத்தம்பி இயங்கி வருகின்றார்.  அவரின் சிறப்பே அவர் தொடர்ந்தும் இயங்கும் ஒரு  புத்திஜீவியாக இருப்பதுதான் நான் இயங்குதல் என்று  குறிப்பிடுவது கருத்தியல் அர்த்தத்திலாகும்.

3.
ஜந்து வருடங்களுக்கு மேலாக பேராசிரியர்  கா.சிவத்தம்பியுடன் எனக்கு பழக்கமுண்டு. எனது நண்பரும்  அரசியல் ஆய்வாளருமான சி.à®….யோதிலிங்கத்தின்  ஊடாகவே எனக்கு பேராசிரியரின் அறிமுகம் கிடைத்தது.  ஒரு பெரிய பேராசிரியர், சிந்தனையாளர் என்ற எந்த  பெருமையற்றும் பழகுவது அவரின் தனித்துவமான  சிறப்பம்சமாகும். நான் எனது பாடசாலைக் காலத்திலேயே  முதன்முதலாக பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றி அறிந்தேன் ஆனால் அப்போது அவரது சிறப்போ முக்கியத்துவமோ  எனக்கு தெரியாது. நான் அப்போது திருகோணமலை, இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு  நாள் யாரோ ஒருவர் பேசவருவதாகச் சொன்னார்கள். ஒரு  தடித்த தோற்றமுடையவர் மேடைக்கு வந்தார் அவர் அன்று என்ன பேசினார் என்று இப்போது எனக்கு நினைவில்லை  ஆனால் பேராசிரியரை அன்று பாடசாலைக்கு அழைத்து  வந்த பற்குணம் என்பவர் நானும் பேசப்போகிறேன் என்று  வலிந்து அதிபரிடம் கோட்டு பேசியது மட்டு  நினைவிருக்கிறது. அந்த காலத்தில் இலக்கியம் குறித்தோ  அரசியல் குறித்தோ அல்லது சமூகம் குறித்தோ எந்த  பிரக்ஞையும் அற்றிருந்த எனக்கு சிவத்தம்பி அவர்கள்  பேசியது இன்று நினைவில்லாமல் இருப்பது நியாயமான  ஒன்றுதான். பின்னர் நான் அதிகம் தேட முற்பட்ட  காலத்திலேயே சிவத்தம்பி, கைலாசபதி என்றெல்லாம்  நம்மிடம் ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதை அறிந்து  கொள்ள முடிந்தது. நான் அதிகம் ஜெயகாந்தனை  வாசிப்பதில் நாட்களை கழித்துக் கொண்டிருந்த  வேளையிலேயே பேராசிரியர் சிவத்தம்பி என்பவர் ஈழத்தின்  மிகப்பெரிய சிந்தனையாளர் என்பதை அறிந்து கொண்டேன்.  அப்போது ஜெயகாந்தனின் நேர்காணலொன்றை நமது  பத்திரிகையில் பார்க்கக் கிடைத்தது அது வீரகேசரியாக  இருக்க வேண்டும். அதில் கைலாசபதி, சிவத்தம்பி மாதிரி  தமிழகத்தில் ஒருவரும் கிடையாது என்று ஜெயகாந்தன்  குறிப்பிட்டிருந்தார். நம்மட ஜெயகாந்தனே சொன்னால் பிறகு கேட்கவா வேண்டும் ஏனென்றால் நான் அப்போது தமிழக  எழுத்தாளர்கள் குறித்த பிரம்மிப்பில் இருந்த காலம் அதுவும் ஜெயகாந்தன் மீதான ஈடுபாடு சற்று அதிகமாகவே இருந்தது ஆனால் பின்னர் அதே பிரமிப்புக்குரிய ஜெயகாந்தனையே  நிராகரித்து  (‘சாயம் வெளிறிப்போன சீலையொன்றின்  கதை’)  எழுதும் நிலையும் உருவாகியது.
பேராசிரியர் சிவத்தம்பி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்  என்று வாதிடுவதல்ல எனது நோக்கம் அவ்வாறு சொல்வது  சிந்தனை வளர்ச்சிக்கும் ஏற்புடையதுமல்ல அதனை  அவரும் ஏற்க மாட்டார். ஒரு வகையில் கூறுவதானால்  சிவத்தம்பி அவர்களது தமிழ்த் தேசியம் குறித்த ஈடுபாடும்,  கரிசனையும் அவரது அரசியல் நிலைப்பாட்டின் மீதான  சுயவிமர்சனமாகக் கூட இருக்க இடமுண்டு. ஏனென்றால்  ஆரம்பத்தில் மார்க்சியர்கள் தமிழ் தேசியம் தொடர்பாக  குறிப்பாக தமிழ் மக்களின் சுயாதீன அரசியல் குறித்து,  போதியளவு அக்கறை கொண்டிருக்கவில்லை என்ற  குற்றச்சாட்டு பொதுவாகவே ஈழத்து மார்க்சியர்கள் மீதுண்டு. மார்க்சியர்களின் இந்த தவறே அவர்களை ஈழத்து தமிழ்ச்  சூழலின் அரசியலில்லிருந்து பெருமளவிற்கு  அன்னியப்படுத்தியது எனலாம். பேராசியர் கா.சிவத்தம்பி இது குறித்து ஒரு சுயவிசாரனையைச் செய்திருக்கக் கூடும்  அதுவே அவரை தமிழத் தேசிய அரசியலின் பக்கம்  நகர்த்தியிருக்கலாம்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 16:07
TamilNet
HASH(0x55c4bc5427c8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 16:07


புதினம்
Thu, 28 Mar 2024 16:07
















     இதுவரை:  24712834 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5745 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com