அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 07 July 2022

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குளிர்போக்கும் ஞாபகங்கள்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்  
Monday, 09 April 2007

பாலத்தின் கீழே படர்ந்தோடும் நீரேபோல்
பாய்ந்தோடிப்போனதடி கண்ணம்மா காலத்தின் பயணம்.
கனியெனவே நானுரைத்தேன் நின் பெயரை
இனியொருகால் வருமோடி அவ்வின்பம்.

வருடங்கள் பலவாகியென்விழிகள் உனைக்காணும்
வழக்கிழந்து போனதுண்மை கண்ணம்மா.
இருந்துமென்ன மனதுழலும் நினைவுகளை
மறுத்தலொன்று ஆகுதலோ நடக்குதில்லை.

ஒருத்திக்கே தினமும் அன்புரைத்தல்
ஓரவஞ்சம் என அறிவேன் இருந்துமென்ன
வேறு வழியில்லையடி கண்ணம்மா.
வேதனைதான் மிஞ்சி இப்போ நிற்குதடி.

கூடிவாழ்ந்தோம் உண்மையடி கண்ணம்மா
கூடுடைந்து போனதுவும் குட்டை கலங்கியதும்
பீடை வந்து நாம் பிரிந்தது போனதுவும்
காடெரிந்து சாம்பரென ஆகியதாய்ப் போனதடி.

தொலைத் தொடர்பில் கேட்டேனுன் குரலின்று
உடலிலாக் குரலெனினும் உயிர்குடித்த குரலடியோ
கண்ணம்மா உறைந்து நின்றேன் ஒரு கணத்தில்.
அழிந்தேதான் வாழுவது அழுத்தியதே என்மனதை.

பதினாறில் நீயிருந்தாய் பத்தெனக்கோ அதிகம்
புதியோனாய் நானும் பூவைப்போல் நீயும்
மதனோடு வாழ்ந்து மதியிழந்து மகிழ்வுற்றோம்.
பொறுப்பிழந்த வாழ்வைப் பொறுக்கவில்லை விதியடியோ.

காதலெனும் தூக்கத்தின் காலனெனும் விழிப்புவந்து
போதை கலைத்தெனக்குப் பொறுப்பைத் தந்ததனால்
தூரத்துக் குரல்கள் துரத்திவந்து வருத்தியதால்
இயல்பழிந்து போன கதை எவ்வாறு நானுரைப்பேன்.

ஒருநாட்காய் வரைந்து யுகங்கள் பல மனதுறையும்
பெருங்கோலம் ஒன்றினைப்போல் கண்ணம்மா நம்
குறுங்கதையும் தொடருதடி உள்ளத்தே கண்டாயோ
வருங்காலமெங்கணுமே வாழுமடி நம் கதையே.

துக்கமெனக்கென்றால் தூக்கமிழந்தவளே,
குழந்தையாய் நீயிருந்தும் தாயாக அணைத்தவளே
குரல் கேட்டல் போதுடிமடி கண்ணம்மா
குளிர்போக்கும் ஞாபகங்கள் அழிவதில்லை கண்டாயே.

  
28.12.2006.

 


     இதுவரை:  22358997 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4990 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com