அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow எரிவதும் சுகமே - முகவுரை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எரிவதும் சுகமே - முகவுரை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு. புஷ்பராஜன்  
Tuesday, 24 April 2007

ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியின் படைப்பை மதிப்பீடு செய்கையில் கத்திமுனையில் நடக்கும் கவனம் அவனுக்குத் தேவைப்படுகிறது. யாரோ அவன் முன்நின்று எச்சரித்துக் கொண்டிருப்பதான உணர்வு. இந்நிலைகளை எதிர்கொண்டு தனக்கான ஒவ்வொரு அடியையும் நிதானமாகவும் உறுதியாகவும் வைக்கவேண்டியிருக்கிறது. நிதானம் உறுதி ஆகியவைகளை எவ்வளவுதான் மேற்கொண்டாலும் மனித மனங்களின் சூட்சுமங்களிலிருந்து எதிர்பாராத தரணங்களில் எதிர்பாராமல் ஒலிக்கும் ஒலியை - அதன் சுட்டுவிரலை அவன் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். சில வேளைகளில் முன்னால் விரிந்துள்ள பிரதியின் ஒவ்வாமைகளை முன்வைக்கையில் அதேவேளை ஒவ்வாமைக்கூறுகள் அவனது படைப்பில் இருப்பதைக் காணலாம். அல்லது அவனுக்கே சுட்டிக்காட்டலாம். இந்த ஒவ்வாமை பற்றிய கருத்துக்கள் நட்பு நிலையில் புரிந்துணர்வோடு எழுகையில் ஏற்படும் இடைவெளிகளை தாண்டுவது இலகுவாக இருக்கும். ஆனால் அவைகள் வன்மமுடன் எழுகையில் இடைவெளிகளைத் தாண்ட முடியாமல் போவதோடு மட்டுமல்லாது இடைவெளிகள் மேலும் அகலித்துப் போய்விடுவதும் உண்டு. படைப்புக்கள் பற்றிய அபிப்பிராயங்கள் மதிப்பீடுகள் பலரைப் பகைவர்களாக ஆக்கி வைத்துள்ளதை தமிழ் கூறு நல்லுலகம் நன்கு அறியும்.

ஜோய்

படைப்பு மனம் வேறு. வாசக மனம் வேறு. ஒருவரே இருதளங்களிலும் வேறு வேறாகி நிற்கலாம். இது படைப்பு மனநிலையிலும் வாசக மனநிலையிலும் சாத்தியமாகக் கூடியதுதான்.

படைப்பு என்பது அனுபவங்களின் புறநிலை உணர்வுகளின் அக வெளிப்பாடு. செழுமைப்படுத்தப்பட்ட வெளிப்பாடு அது வாசக மனத்திற்கு பரிமாற்றம் செய்கையில் படைப்பு மொழியில் நுட்பங்கள் தேவைப்படுகிறது. தன் அனுபவங்களை அல்லது புறநிலை உணர்வுகளை சிந்தியோ சிதறாமலோ வாசக மனத்தில் தொற்ற வைத்தலே படைப்பின் குறைந்த பட்ச வெற்றியாகும். ஆயினும் இவ்வெற்றி இலகுவில் வாய்ப்பதில்லை. ஒரு கவிஞனில் கருக்கொண்ட படைப்பு அவனது அக உணர்வில் உணர்த்திய உருவத்தைப் படைப்பாக வெளிவந்திருக்கும் உருவம் அப்படியே ஒத்திருப்பதில்லை. இவ்வுணர்வை பல கவிஞர்கள் உணர்ந்திருப்பார்கள். ஊறிய உணர்விற்கு தெரிவான வார்த்தைகள் வசமாகாமல் அவஸ்தைப்பட நேரிடலாம். முனைந்து முனைந்து முடியாது போகையில் கைவசமாகிய வார்த்தைகளுடன் சமரசம் செய்து கொள்ள நேரிடலாம். இந்தப் பலவீனமான பகுதியுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டிய தேவை வாசக மனநிலைக்கு இல்லை. அது படைப்பாக உருவாக்கி வைத்துள்ள உலகங்களுடன் சுதந்திரமாக உறவு கொள்ளக் கூடியது. அதன் சுதந்திரத்திற்கு இடைய+றுகள் அசௌகரியங்கள் ஏற்படுத்தும் பகுதிகளும் அதில் முரண்பட்டுக் கொண்டேயிருக்கும்.

இது படைப்பாளியாக இருக்கும் ஒருவர் விமர்சகராகவோ அல்லது புறநிலை நின்று நோக்கும் வாசகராகவோ மாறுகையில் நிகழ்வதுண்டு. படைப்பாளியாக ஒருவரும் வாசகராக இன்னொருவரும் அமைகையிலும்  இவ்வாறு நிகழ்வதுண்டு.

மரபின் விலங்குடைத்து அக்கினிக்குஞ்சாக வெளிவந்த புதுக்கவிதையின் இன்றைய நீட்சிமிகு ஓட்டத்தில் என்னளவிலான அவதானத்தில் இருவித போக்குகள் தொடர்ச்சியாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. மரபுரீதியான கவிதை அம்சங்களை முற்றாகத் தூக்கி வீசாமல் கவிதையைத் திக்கு முக்காட வைக்கும் விலங்குகளை உடைத்தெறிந்துவிட்டு கவிதைக்கான அழகியல் அம்சங்களைப் பேணிக்கொண்டு செல்லுதல் ஒன்று. முற்றாக மரபுசார்ந்த கவிதை அம்சங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வசனத்திற்குரிய சொற்களுடன் புதிய சொல்லாட்சியுடன் கவிதைக்குரிய உணர்வுகளைத் தொற்றவைத்தல் மற்றொன்று. இந்த இருவித போக்குகளிலும் கவிதையை உயர்தரத்திற்கு எடுத்துச் சென்றவர்களும் உண்டு. எவ்வித உணர்வுமற்று வெறும் சொற்களாக அடுக்கி கவிதையைக் கொண்றவர்களும் உண்டு.

ஒருவருடைய கவிதைபற்றிய அபிப்பிராயம் என்பது முற்றுமுழுதான முடிந்த கருத்து அல்ல. ஒவ்வொருவருக்குமான தனித்தனி அனுபவங்களை கவிதை உணர்த்தி நிற்கும். இது படைப்பின் பொதுத்தன்மை. ஒருவருடைய அபிப்பிராயத்தோடு பலர் உடன்படலாம் பலர் மாறுபடலாம். உடன்படுபவர்கள் இணங்கிப்போதலும் மாறுபடுபவர்கள் முரண்படுதலுமான புரிதல்களுடன் கலை இலக்கியத்துடன் தன்மைகளை விளங்கிக் கொள்ள வேண்டும். இதை மறுப்பதால்தான் தமிழ்கூறும் நல்லுலகில் இலக்கிய களம் கிளை பிரிந்து பகைமை பாராட்டி நிற்கின்றது. எது எப்படி இருந்த போதிலும் படைப்பு பற்றிய அபிப்பிராயத்தில் வாசகரோ விமர்சகரோ தனக்கு உண்மையானவராய் இருத்தல் முக்கியமானதே. புதுமைப்பித்தன் கூறியதைப்போல் எதிர் காலத்தில் பிறக்கப்போகும் வாசகன் உடன்படவோ மாறுபடவோ வருவான்.

பொதுவாக புலம்பெயர் கவிதைகளின் கவிதைச் சாரமாக அன்னிய மண்ணில் சுயம் இழந்த உணர்வு, தாயக நினைவுகளை மீட்டுப்பார்த்தல், தாயகத்தில் நடைபெறும் யுத்த அவலங்களின் எதிரொலி, வளர்ந்துவரும் புதிய தலைமுறைகளின் முரண்பாடுகள், இடைவெளிகள், இடையிடையே அவரவருக்கான தனித்த அனுபவங்களின் வெளிப்பாடுகள். இவை புலம்பெயர் கவிஞர்கள் எல்லோருக்கும் பொதுவானவையே அதனால்தான் புலம்பெயர் கவிதைச்சாரம் எனக் குறிப்பிடுகிறேன்.

1983 ஐ அதன் அரசியல் பின்னணியுடன் புலம்பெயர் ஆண்டாகக் கொண்டால் இரு தசாப்தங்களுக்கு மேலாகி ஒரு புதிய தலைமுறையின் தோற்றமும் உருவாகிவிட்டது. ஆனால் புலம்பெயர்ந்து வந்தவர்களின் மனங்களின் வேர் தாயக மண்ணிலிருந்து அறுபடாமலே இருக்கிறது. பாதி இரத்த உறவுகள் தாயகத்தில் இருப்பதும் இனம் சார்ந்த போராட்டம் இன்னமும் அங்கு பற்றி எரிந்து கொண்டிருப்பதும்தான் இதற்குக் காரணம். இந்தப் போராட்டத்தின் எதிரொலிகள் புலம்பெயர் மண்ணில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இனம்சார் உணர்வுகள் தேச எல்லைகள் தாண்டி எதிரொலித்துக் கொண்டிருக்கையில் யுத்த தேவதையில் கோர நர்த்தனம் ஒலிக்கும் அந்த மண்ணிலிருந்து வந்த மக்களிடம் அது எதிரொலிக்காது போனால்தான் அது ஆச்சரியமானது. படைப்பு மனநிலைக்குப் புறச்சூழல் ஏற்படுத்தும் அதிர்வுகளே காரணமாக இருக்கையில் புலம்பெயர் படைப்பாளிகளின் புறச்சூழல் இன்னமும் தாயகச் சூழலாகவே இருக்கிறது எனக்கொள்ள வேண்டியுள்ளது.

 à®‡à®¨à¯à®¤à®ªà¯ பின்னணியில் எ. ஜோயின் கவிதைத் தொகுப்பு காட்டி நிற்கும் தளங்கள் யாது?

ஒரு கடலோரக் கிராமத்தின் வாழ்வு அதிகாலையுடனும் அதன் உயிர்ப்புகளுடனான பார்வையின் பயணத்துடனும் அதன் மதம் சார்ந்த மரபுகளின் மதிப்பீடுகளினிடையே கசியும் உணர்வுகள், யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள், புலம்பெயர்வு, அன்னிய மண்ணில் சுயமிழத்தல், தாயக நினைவுகளை மீட்டெடுத்தல், யுத்தங்களின் எதிரொலி ஆகிய புலம்பெயர் சாரத்தினைக் கொண்டிருந்தாலும் சில தனித்த அனுபவங்களின் வெளிப்பாடுகள் அவற்றில் இருந்து விலகி நிற்கின்றன.

புலம்பெயர் வாழ்வு பற்றிய பொது அனுபவங்களை ஒவ்வொரு கவிஞர்களும் தமக்கான தனித்தனி அனுபவங்களுடனும் படிமங்களுடனும் முன்வைக்கையில்.... அதன் வெளிப்பாட்டுத்திறன் முக்கியத்துவமுடையதாகவே காணப்படுகிறது. தாய் நாட்டில் தனக்கிருந்த குரல் பற்றி கூற வந்த ஒரு கவிஞர்

 à®’ரு விமானத்தில் ஏறி
 à®µà®¾à®©à®¿à®²à¯ நின்று
 à®µà®²à®¿à®¯à¯‹à®Ÿà¯ குனிகையில்
 à®•à¯Šà®Ÿà¯à®Ÿà¯à®£à¯à®Ÿà¯ போனது அக்குரல்
  (பரதேசிகளின் பாடல்)

ஜோய் 'எனக்குள் ஒளிந்து போன என்னை எனவும், 'பனிவிழும் தேசத்தில் அஞ்சல் ஓட்ட வீரராயும் ஒப்பிட 'கனவறுந்த தேசத்தில் நிசத்தோடு போராடும் வாழ்வு பற்றியும் குறிப்பிடுகிறார். அவ்வாழ்வு பற்றி அடுத்த தலைமுறைக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வருகிறார். இரவுப் பாடகன்போல் இவர் வடித்த கண்ணீரை இவர் பிள்ளைகள் அறியவில்லை. இவர் தலையணை அறிந்ததாக அழகாக கூறுகிறார்.

ஆத்மாக்களின் உலகின் நரகம் ப+லோகமானால் நாங்களெல்லாம் என்ற கேள்வியுடன் அவர் கனவு கலைவதும் நாளாந்த வாழ்க்கைக்காய் ஓடிக்கொண்டிருப்பதும் வாழ்வு பற்றிய அர்த்தத்தை எழுப்புகிறார். வாழ்வு பற்றிய அர்த்தம் நமக்கு கற்பிக்கப்பட்டவற்றிலிருந்து முற்றிலும் வேறான வாழ்வாக நம்முள் விரிந்து கிடக்கிறது. அதனால்தான் வாழ்வுபற்றிய அர்த்தமே இன்றைய இருத்தலுக்கான மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இதனது வௌ;வேறு கிளைகள்தான் 'நான்" அழிதலை உணர்வதும் சிறுமைகளில் ஏற்படும் சினமுமாகும்.

இயற்கை அள்ள அள்ளக் குறையாத அழகின் வசீகரங்களாக வியாபித்திருக்கிறது. நுண்புலன் வாய்ந்த கவிஞர்கள் தம் மனவுணர்வுகளுக்கேற்ப இயற்கையுடன் இசைந்து கொள்வார்கள் அவற்றுடன் உரையாடுவார்கள். இந்த அக உலகுக்கான மனமொழிதான் கவிகளை விகாசம் கொள்ள வைக்கிறது. இதன் மெல்லிய சிதறல்களை ஜோய் தன் கவிதைகளில் ஆங்காங்கே வெளிப்படுத்தியுள்ளார். 
 
 à®ªà¯‚வில் தேங்கிய மழைத்துளி
 à®µà®´à®¿à®¨à¯à®¤à¯ வடிந்து விழ
 à®¤à®¿à®Ÿà¯à®•à¯à®•à®¿à®Ÿà¯à®Ÿà¯à®ªà¯ பயம் கொள்ளும்
 à®®à¯†à®©à¯ இலை போல்
  (என் நினைவுகளும் என் இரவுகளும்)

 à®®à®´à¯ˆà®¤à¯ துளிகள்
 à®¤à®¿à®Ÿà¯à®Ÿà¯à®¤à¯ திட்டாய்
 à®šà®¿à®¤à®±à®¿ கிடந்தன
 à®•à®µà®¿à®¤à¯ˆà®¯à®¾à®¯à¯
  (கவிதை)

இதுதவிர சில மெல்லிய உணர்வுகளை, அவரவருக்கான தனிமொழி கொண்ட ஆண், பெண், உறவுகளை, புனிதமானது என்று பொத்திவைக்கப்பட்ட அந்தரங்க அரங்குகளின் பதிவையும் தன் கவிதைகளில் முன்வைக்கிறார்.

 à®µà®£à¯à®£à®•à¯ கனவுகளின்
 à®µà®°à¯à®£à®™à¯à®•à®³à¯ கரைய
 à®®à¯‡à®•à®™à¯à®•à®³à¯ மூட்டங்கொண்டு
 à®¤à®¿à®°à®£à¯à®Ÿà¯
 à®®à®´à¯ˆà®¯à®¾à®¯à¯ நனைக்கும் வரைக்கும்
 à®‡à®£à¯ˆà®¨à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à¯‹à®®à¯
   (கலவி)

 à®‰à®©à®•à¯à®•à¯à®®à¯ எனக்குமான உறவுக்கு
 à®‰à®Ÿà®²à¯ மொழியே போதுமானது
 à®‡à®¯à®±à¯à®•à¯ˆà®¯à®¿à®Ÿà®®à¯ நாம் கற்றதெல்லாம்
 à®…ங்குலம் அங்குலமாய் பேசுவோம்
 à®µà®¿à®´à®¿ மொழியால்
   (மௌனத்தில் வாழ்வோம்)

தடைவிதிக்கப்பட்ட பிரதேசம் என்பது ஒரு படைப்பாளிக்கு இல்லை. ஆயினும், இந்நுண்ணுணர்வு சார்ந்த தளங்களில் பயணித்தலில் அதிக கவனம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் கூடிய கவனம் தேவைப்படுகிறது. மிதிவெடிகள் புதைத்து வைக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்வதுபோல்தான் இதுவும். கொஞ்சம் தவறினால் கால் தொலைந்தது மாதிரித்தான். கலைத்துவம் சிதைந்த வேற்றுமொழிதான் மிஞ்சும். இங்கு 'அம்மா" என்ற கவிதையில்
 
 'கொண்டவன் பசிக்கு
 à®’ப்பின்றியே
 à®•à®¾à®²à¯à®•à®³à¯ˆ  விரிப்பாள்"

எனக் குறிப்பிடுகிறார். இத்தொகுப்பிலுள்ள மற்றைய கவிதைகளுக் கூடாகவே தர்க்க வலுவற்றதாக இருக்கிறது. ஒரே செயல் தனக்கு வண்ணக் கனவுகளின் வர்ணங்களாக இருப்பது இன்னொருவருக்கு எப்படி 'ஒப்பின்றியிருக்கும்" சிலவேளைகளில் அவை ஒப்புடனேயே நிகழ்ந்திருக்கும். தன்னால் தன் அனுபவங்களைச் சொல்வதற்கும், இன்னொருவருடைய அனுபவங்களைச் சொல்வதற்குமுள்ள இந்தத் தன்மையை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் நான் என்பதை ஜோய் என்பதாகக் கருதும் மயக்க நிலையைத் தவிர்த்துப் பார்த்த தன்மைகளின் அடிப்படையில் 'நான்" தன் உணர்வுகளைக் குறிப்பிடுவதற்கும் இன்னொருவரது செயலுக்கு அர்த்தம் கொள்வதிலுமுள்ள முரண்நிலையைச் சுட்டவே குறிப்பிடுகிறேன். இங்கு சல்மாவின் 'ஒப்பந்தம்" கவிதையில் வரும்
 
 'எல்லா அறிதல்களுடனும்
 à®µà®¿à®°à®¿à®•à®¿à®±à®¤à¯†à®©à¯ யோனி"

என்ற வரிகள் தன்மையில் சொல்லப்பட்டிருப்பதோடு 'எல்லா அறிதல்களுடனும்" என்ற வார்த்தை வாசக மனத்தில் அவரவர்களுக்குரிய புரிதல்களுக்கான பெரிய வெளியை அளிக்கிறது. அந்த 'எல்லா அறிதல்களுடனும் என்ற வார்த்தைதான் 'விரிகிறது என் யோனி" என்பதை விரசமாக்காமல் வைத்திருக்கிறது. 'அம்மா" என்ற முழுக் கவிதையும் விருப்பு வெறுப்புக்களற்ற ஒரு தாயின் அர்ப்பணிப்புக்களைக் கூறவந்தாலும் அவ்விரு வரிகளும் ஒரு அதீதமான தலையீடுதான். ஜோயிடம் இயல்பாக கவிதைத்தன்மை வாய்த்திருக்கிறது என்பதை பல கவிதைகள் உணர்த்துகின்றன. 'முற்றுப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் புதிய வரிகளைப்போல்" 'நதிக்கரையோரத்து நாணலைப்போல் நான் அஞ்சுகிறேன்" போன்ற அளவில் எளிமையான படிமங்களுக்கிடையில் 'இலைகள் உண்டு துப்பிய வெளிச்ச எச்சங்கள்" போன்ற குறுக்கீடுகள் இல்லாமல் 'எனது வீடு" போன்ற ஆழ்ந்த உணர்வுகளை அழகுடனும் எளிமையுடனும் எல்லாக் கவிதைகளையும் எழுதவேண்டுமென ஆசைப்படுகிறேன்.

ஜோயின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. ஒரு வருட காலத்துள் கவிதைத் தளங்கள் பல்வேறு வித மாற்றங்களுடன் விரிவு கொண்டுள்ளதை உணர முடிகிறது. இனிவரும் கவிதை உணர்வுகளை அறிவின் தளத்துள் சீராக இறக்கி, அடைகாத்து முழுமை கைகூடி வருகையில் பிரசவிக்கப்படுதல்தான் அடுத்த பாய்ச்சலாக இருக்கக்கூடும். அந்த முழுமைக்குரிய காலத்தை ஜோயால்தான் உணரமுடியும். உடனடியாகவும் நிகழலாம், நீண்டும் செல்லலாம், அதற்காக திருப்தியுறா மனத்துடன் காத்திருத்தல் என்பதுதான் முக்கியமானது.

மு. புஷ்பராஜன்
17-12-2006
லண்டன்


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 22:09
TamilNet
HASH(0x556accd7e310)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 22:09


புதினம்
Thu, 28 Mar 2024 22:09
















     இதுவரை:  24714113 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4319 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com