அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தராசும் தண்டும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Saturday, 05 May 2007

இவையிரண்டும் எம்முடன் என்ன கூடவே பிறந்தவையா?
எதைக் கண்டாலும் என் தராசில் ஏன் நான் நிறுக்கின்றேன்?
படிக்கற்களாய் எவற்றைப் பயன்படுத்துகின்றேன்?
இந்த நிறுவைப் படிகளை எங்கிருந்து பெற்றேன்?
 
ஒன்றின் கனத்தை மட்டுமல்ல, அதன் சகல பரிமாணங்களையும்
எனது அளவுகோலினால்தான் நான் அளக்கிறேன்.
எவருடன் பேசும்போதும், பழகும் போதும்
என்னையுமறியாமல் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
எதற்காக இதைச் செய்கின்றேன்?
 
என்னைவிட உயரமாய் எவரும் இருக்கக்கூடாது என்பதற்காகவா?
அப்படி இருப்பதை என்னால் சீரணிக்க முடியவில்லையா?
 
சரி! உயரமாய் இரு! ஆனால் பொறு!
என்னிடம் வேறு அளவு கருவிகளும் உண்டு
என்றல்லவா சொல்லிக்கொண்டு மீண்டும் ஒப்பிடுகின்றேன்!
 
என்னைவிடத் தாழ்ந்தவர் உண்டு என்பதில் ஒரு சுகமா?
இன்னொருவரின் திறமையை ஒப்புக்கொள்ள,
பாராட்ட ஏனிந்தத் தயக்கம்?
 
சரி! இதுதான் மனித இயற்கையென விட்டுத் தொலைக்கலாம்!
ஆனால் அளவுகோல், தராசுடன் கூடவே ஏன் இந்தப் பிரம்பு?
 
உயரம் என நீ உணர்ந்தவனை
நீ கறுப்பனென்று என்று அடிக்கவா?
உன்னைவிட உன்னதமானவரைக் காணும்போது
நீ இந்தத் தடியைத்தான் முடிவில் எடுக்கிறாய்!
ஏதோவோர் வகையில், அதுவும் உனது அளவுகளின்படி
அவனில் ஒரு குறைகண்டு
அவனை நீ உன் மனதுள் அடிக்கின்றாய்!
இதில் உனக்கென்ன சுகம்?
 
ஏதோவோர் சுகம் இருக்கத்தான் வேண்டும்!
இல்லையேல் ஏன் எல்லோரும் தராசும் தண்டுமாய்த் திரிகின்றனர்!
 
அவர்களை விட்டுவிடு! உன்னை எடுத்துக் கொள்!
உனக்கு முதுசமாய்க் கிடைத்த படிக்கற்களை ஒரு தடவை பார்!
நீயாக உருவாக்கிய அளவுகருவிகளைக் கவனமாகச் சோதனையிடு!
 
இவை நியாயமானவைதானா?
எக்காலத்துக்கும் பொருத்தமானவைதானா?
இல்லைப்போல் தெரிகின்றதா?
 
பரவாயில்லைப் போகட்டும்!
இனிமேலும் பிறரை இவற்றால் அளக்க முயலாதே!
 
உன்னை நீ முதலில் நிறு, அள!
அதன்பின் தடியை எடு.
நியாயப்படி நீ அடிக்க வேண்டியது உன்னையேதான்!
தராசையும் தண்டையும் தூக்கி எறிந்துவிடு!
இவையிருக்குமட்டும் நீ நிம்மதியாய் வாழமுடியாது!

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts)
 


     இதுவரை:  24804840 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5051 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com