அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 02 May 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குஞ்சரம் arrow மடம் வீட்டு வேலை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மடம் வீட்டு வேலை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சிவானி  
Thursday, 24 May 2007

மாலதி பாரிஸ் நகரை அண்டிய புறநகர்ப் பகுதியில் கடந்த பத்தாண்டு காலமாக வாழ்ந்து வருகிறாள். இங்கு வந்து பெரிதாக  வேலை என்று பார்த்ததில்லை. ஆனால் தாயகத்தில் நீண்ட காலம் வேலை பார்த்த அனுபவம் அவளுக்கு உண்டு. அந்த அனுபவம் இந்த நாட்டிற்கு உதவாது.என்றாலும் மனதிற்குள் ஓர் உழைச்சல். ஐந்து வயதில் பாடசாலைக்குப் போனதிலிருந்து தொடர்ந்து படிப்பு பின்னர் வேலை என்றிருந்த அவளுக்கு பிரான்சுக்கு வந்து வீட்டிற்குள் இருப்பது மனஅழுத்தத்தைத் கொடுத்தது. இப்படியே தொடர்ந்து இருக்கக் கூடாது என்று பிரெஞ்சு மொழி வகுப்பிற்குப் போகத் தொடங்கினாள். சரளமாக மொழியைக் கற்றுக் கொள்ளாவிட்டாலும் ஓரளவு கற்றுக் கொண்டாள். சரி... இனி எங்கேயாவது ஒரு வேலை தேடினால் நல்லது. அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றியும் அடைந்தாள்.  பிரெஞ்சு சீமாட்டி ஒருவரின் வீட்டில் வீடடு வேலைக்காரி வேலை. அதை எல்லோரும் "மடம்(சீமாட்டி) வீட்டு வேலை" என்பார்கள். வாரத்தில் ஒரு நாளைக்கு நான்கு மணித்தியாலய வேலை. மடம் வீட்டுவேலை சரியான கடினம், நீர் போய்ச் சமாளிக்க மாட்டீர் என்று பலர் பலவாறாகச் சொன்னார்கள்.ஆனால் அவள் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவளுக்குத் தேவை பணம். சும்மா இருந்தால் யார் பணம் தருவார்கள்? என்பது அவள் வாதம்.
வீடடு வேலைக்காரியாக அந்த வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக மாலதி வேலை பார்த்து வருகிறாள்.சீமாட்டியும் மாலதி... மாலதி என்று அவளுடைய பெயரை வாய் நிறைய அழைத்து நன்றாக வேலை வாங்குவார்.சில நாட்களில் ஒருவருக்கும் தெரியாமல் தேம்பித் தேம்பி அழுவதுமுண்டு. ஒருநாள்  "உன்னுடைய பிள்ளைகளுக்குக் கொடு' என்று ஒரு பார்சலைத் கொடுத்தார் எசமாட்டி.. என்றைக்குமில்லாத அதிசயமாக இருக்கு என மாலதி தனக்குள் நினைத்துக் கொண்டாள். வீடடிற்கு வந்து பார்சலைத் திறந்த பார்த்தாள். மூன்று வகையான விலையுயர்ந்த சொக்கிலேட் பெட்டிகள். பெட்டியைத் திருப்பி பாவனை முடிவுத் திகதியைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாள்.. மூன்று மாதத்திற்கு முன்னரே அதனுடைய திகதி முடிந்துவிட்டது. அன்று முழுவதும் இனம் புரியாத ஒரு வேதனை  அவளது மனதைக் குடைந்து கொண்டிருந்தது.
ஊரில் சிலரது வீடுகளில் வேலை பார்க்கிறவர்களுக்கு மிச்சச் சாப்பாடுகளும் பழைய சாப்பாடுகளும் கொடுத்த காட்சிகள் மாலதியின் மனக்கண் முன் தோன்றின.

சிவானி - பிரான்ஸ்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)
 


மேலும் சில...
கருமி
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
உணவகக் குசினி
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மீண்டும் தட்டிக்கொடுப்பு
மக்களை கைவிட்ட கடவுள்
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
வீடும் வலியும்
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
நச்சுவிதை
கைநாட்டு
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 02 May 2024 14:48
TamilNet
HASH(0x55ebce5daf18)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 02 May 2024 14:48


புதினம்
Thu, 02 May 2024 14:48
















     இதுவரை:  24853546 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2599 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com