அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 21 March 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 35 arrow லப் டப்.. லப் டப்..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


லப் டப்.. லப் டப்..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வேம்படிச்சித்தன்  
Friday, 25 May 2007

பிரசவமனை.
என்னவள் ஒரு மகனைப்
பெறுவதற்காக அவளை
நான் அழைத்து வந்திருந்தேன்.

பெயர் ஒன்றும் தேர்ந்தாகிவிட்டது.
இன்று காலை நடக்கலாம் எனப்
பிரதான மருத்துவத்தாதி கூறியிருந்தாள்.

துணைவன்கள் மட்டும்
அமனுமதிக்கப்படும் எல்லைக்குள் நான்.
கர்ப்பிணிகளின் கருவின்
இருளுக்குள்வாழும் சிசுக்களின்
இதயத்துடிப்பொலிகளை விசாலப்படுத்தும்
இலத்திரனியல் இயந்திரங்களின் ஒலி.

லப் டப் லப் டப் லப் டப்
லப் டப் லப் டப் லப் டப்...

பிரசவமனையின் இப்பிரதேசத்துள்
பிசகாமல் ஒலிக்கும் பிரபஞ்சத்தின்  ஓசை.

துடிக்கும் என்னவளின்
பகீரத முனைவுகள்.

அயலறைகளிலிருந்து ஓய்வற்று
வந்து கொண்டேயிருக்கும்

லப் டப் லப் டப் லப் டப்
லப் டப் லப் டப் லப் டப்...

ஊமையான ஒரு அவல ஒலி.
பின் குழந்தையின் வீரிடல்.
ஒளியுள் வீழ்ந்த மகனின் ஓலம்.

கடிகாரத்தைப் பார்க்கிறேன்.
அது ஒடாமல் நிற்கிறது.

கலவியொன்றிற்குப் பின்
அறையினுள் கவியும்
கவலையின் நிறத்தை
எடுத்துக்கொள்கிறது
இருத்தலின் தொடர்ச்சி.


 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 21 Mar 2023 17:05
TamilNet
HASH(0x564d860c1860)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 21 Mar 2023 17:05


புதினம்
Tue, 21 Mar 2023 17:14
















     இதுவரை:  23443065 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1852 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com