அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 04 December 2023

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஏ.ஜோய் கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஏ.ஜோய்  
Tuesday, 05 June 2007

01.

முரண்

துளித் துளியாய் வீழ்ந்தபோது
நான் அறிந்திருக்கவில்லை
அதன் உயிர்ப்பை..

குழவியாய் ஆனபோது
கொட்டிக் கொட்டிக்
கொன்றது சமூகம்...

24-05-2007

 

02.


சிலுவை

இதயம் கசியும் பொழுதுகளில்
போர்வைக்குள்
முகாமிட்டு கொள்கிறது மரணம்..

வேரூன்றியிருக்கும் காலத்திலிருந்து
என் ஆயுள் பிரித்தெடுத்தல்
சாத்தியமற்றுப் போகும் தருணங்களில்
ஓலமி்ட்டு கதறுகிறது ஆன்மா...

ஒவ்வொரு தடவையும்
குப்புற விழும்போதும்
உயிர்த்தெழுதல் நிகழும்
என்ற நம்பிக்கையில் மட்டும்தான்
கல்வாரி மலைகளெங்கும்
சிலுவை சுமத்தல்
எனக்கு சாத்தியமாகின்றது...

இயற்கையின் வசீகரங்கள்
தோற்றுவிக்கும் நம்பிக்கையுடனான
ஒப்பந்தம் மட்டுமே
ஆணிகளை இன்னும்
நான் பெறாமல் இருப்பதற்கான
சந்தர்ப்பங்களை தந்து கொண்டிருக்கிறது..


25-05-2007

03.


குருடன்

கடக்க முடியாத கணங்களை
கடந்துவிடத் துடிக்கும்
அவசரத்தில் சுழல்கின்றது
கடிகார முட்கள்...

ஞாபக குப்பைகளை
எரிப்பதற்கான தருணம் பார்த்து
பாம்பின் உருவில்
அலைகிறான் இயந்திரன்..

நீண்டு கிடக்கும்
அதிகாலை நிழலின் மார்பில்
காலால் எட்டி
உதைக்கிறான் பகலவன்...

பொய்த்துப்போன விம்மல்களை
தோற்றுவிப்பதில் வெற்றிகண்ட
அக்களிப்பில்
எக்காளமிடுகிறது கானல்நீர்..

இரவின் அதீத தனிமைக்குள்
கூனிக் குறுகி
நீர்த்துக் கிடக்கும்
நிஐத்தோடு பேசமுடியாமல்
குருடாகிக்கிடக்கின்றது பார்வை..

31-05-2007

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


     இதுவரை:  24326800 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2015 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com