அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 08 June 2026

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 36 arrow உன்னதம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
தொடர்பு
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


உன்னதம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Friday, 22 June 2007

இன்னும் எத்தனை
புத்தம் புதுத் தளிர்களைப்
போர் நெருப்பினில் போட்டுப்
பொசுக்க வேண்டும்?
 
ஆதி; மனிதன் ஆற்றிய யாகங்களில்
அவன் சொரிந்தவை எவை?
தான் சிறந்ததெனக் கருதியவற்றைத்தான்
ஆகுதியாய் அர்ப்பணித்தானா?
 
ஏற்புடையதொன்றை அடைய வேண்டின்,
அதற்கு ஈடான இன்னொன்றை
இழந்துதான் ஆகவேண்டுமா?
 
என் அயலவன் என்ன செய்தான்?
எதற்காக, என்னுடையதென
நான் எண்ணியிருந்த
நிலத்தினுள் நுழைந்து
என்னைத் துரத்தினான்?
அவனை எதிர்க்கத் திராணியற்று
நான் விலகி ஓடினேன்.
 
எண்ணிப் பார்க்கையில்
காணிச் சண்டையென்பது
மிகமிக இயற்கையானதாகவே
எனக்குத் தோன்றுகின்றது.
 
ஒவ்வொரு விலங்குக்கும்
பட்சிக்கும், பூச்சிக்கும்
அது வசிக்க, வாழ, பெருக
ஓரிடம் நிச்சயம் வேண்டும்.
அதற்காக அது
போரிட்டே ஆகவேண்டும்!
 
வழியில் தடையாய் நிற்கும்
பெரும் நெருப்பைக்கூட
தமது உடலால் அணைத்து அணைக்கும்
ஒருவகை எறும்புகள்
உண்டெனக் கேள்வி.
 
முன்னே நிற்பவைதான்
முதலில் அழிய வேண்டுமா?
 
அடுத்து, அடுத்து, அடுக்கடுக்காய்
தம்முயிரை அர்ப்பணித்துத்தான்
அவை தடையகற்றி பின்வரும்
தமது இனத்துக்குப் பாதை சமைத்து
வாழ்வு தருகின்றன!
 
ஆனால் நானோ
இந்த வரிசையில் இல்லையே!
ஓரமாக ஒதுங்கி
பாதுகாப்பாக நின்றபடி
பாட்டுக்கள் மட்டும் பாடி
உற்சாகப் படுத்துவதில்
உன்னதம் இல்லையே!

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 08 Jun 2026 09:48
TamilNet
18 May is not a day for empty remembrance. It is a day that tests whether Eezham Tamils will remain faithful to the political meaning of Mu'l'livaaykkaal and Vaddukkoaddai, or allow both to be folded back into a ?safer?language of accommodation. The issue is not whether formulas can be drafted. It is whether a people whose claim rests on homeland, sovereignty, and the insistence that Tamil political status was never validly surrendered should once again be pushed into recasting that claim as an internal arrangement within the very state whose legitimacy they dispute. That, in essence, is what lies behind the current push toward ?maximum devolution?and similar formulas. Rather than opening a new path, it risks drawing Eezham Tamils back into the constitutional grammar of containment.
Sri Lanka: 18 May is not for repackaging surrender


BBC: உலகச் செய்திகள்
Mon, 08 Jun 2026 09:48


புதினம்
Mon, 08 Jun 2026 09:48
















     இதுவரை:  28803183 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3226 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com