அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அணுவும் அசைவும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: இதயச்சந்திரன்  
Sunday, 22 July 2007

இருட்டும் வெளிச்சமும்
அப்படியேதான் இருக்கின்றது.

இருள் சூழந்த வெளி
வெளிச்சத்தை தேடுவதும்,
வெளிச்சத்தின் மறைவிடத்தில்
இருள் ஒளிந்து கொள்வதும்
சார்புநிலை என்பது
புரியப்படுவதில்லை.

புரிதலிற்கும் எதிர்மறைகள் தேவை.

எதிர்மறைகள் இல்லா வெளியில்
அர்த்தங்களும் கருகிப்போகும்.

தேடுதல்கள் முடிவிலியாகி
தேய்ந்து ஒரு கோடாகிப்
புள்ளியாகலாம்.

புள்ளிப் பரிமாணம் புரியாமல்
பல புள்ளிகளின் இணைப்பே
கோடாகுமெனக் கூறுவது
தேடுதலை நிறுத்திவிடும்.

'நிறுத்துவதும்' தற்காலிகமானதே.

தற்காலிக புள்ளிக் குவிமையமும்
அசைவியக்க தரிப்பிடந்தான்.

'தரிப்பிடங்கள்' ஓய்வுநிலை மையமல்ல.

அசைவின் வலுநிலை கரைந்து
தேக்கமுறும் இடமது.

கரைதலும், காணாமல் போதலும்
இன்னொரு வடிவினை
நோக்கிய நகர்வுகள்தான்.

வடிவங்கள் மாறுகையில்
எதிர்மறைகள் அகலத்திறந்து
விரிகின்றன.

விரிதலென்பது
சுருங்கிய நிலையின் நீட்சி.

நீட்சியுறும் மனவெளியில்
படிமங்கள் உரசும்
கவிதையாகச் சுருங்கும்.

சுருங்கிய கவிதையுள்
விரிதளங்களெல்லாம் அடங்கும்.

புள்ளியையும் வெளியையும்
காலம் நிரப்பும்.

அசைவின் நேர உறவு
காலத்தில் மிதக்கும்.

காலமும் நேரமும்
ஜன்ஸ்டைனின் மிச்சங்கள்.

சடம் சக்தியாகி்ப்
பின் சடமாகும் புரிதல்
காலக் கூட்டினுள்
சாட்சியமாகும்.

பெருவெளியின் இருத்தலை
அசைவு அர்த்தப்படுத்தும்.

நேரத்தின் இருத்தலிற்கும்
அசைவே சாட்சியம்.

அசைவின்றி
நேரமுமில்லை... காலமுமில்லை.

அவனின்றி அணுவும் அசையாது.
அசைவின்றி அவனுமில்லை.

22-07-2007
இலண்டன்

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


     இதுவரை:  24715550 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4285 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com