அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 04 December 2023

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பாடுபொருள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Friday, 03 August 2007
தாமரை மலர்களில்
ஈக்கள் மொய்ப்பதில்லையே!
ஏன்? ஈக்களுக்குத் தேனருந்த
விருப்பமே இல்லையா?
 
நறுமணமலர்களில் மொய்ப்பவை
வண்டுகளும், வண்ணத்துப் பூச்சிகளும்
தேனீக்களுமே.
 
ஈக்கள் மட்டுமே
நாற்றமடிக்கும் பொருட்களை
நாடுவதேன்?
 
ஈக்கள்தான் சூழல் சுத்திகரிப்புச் சேவகர்களா?
 
மரணம் நெருங்குவது
மணி இலையான்களுக்குத் தெரியும்!
 
இறந்த உடல்கள், அழுகிய பொருட்கள்
சூழலை மாசுபடுத்தும்.
அவற்றை உண்பதுடன் நிற்காது
அவற்றின்மேல் தமது முட்டைகளையும்
இடுவார்கள் இச் சுகதாரச் சேவகர்கள்.
முட்டைகளிலிருந்து பிறக்கும்
புழுக்கள் அழுகியவற்றை உண்டு
இயற்கையைச் சுத்தம் செய்யும்.
 
பெண்களைப் பூக்கள் என்றும்
அவற்றில் தேன்குடிக்கும்
வண்டுகளை, வண்ணத்துப் பூச்சிகளை,
ஆண்களென்றும் பாடினர் புலவோர்.
 
ஆரோக்கியமாக நாம் வாழ
அன்றாடம் பாடுபடும்
இந்த ஈக்களை மட்டும்
இன்னுமேன் பாடவில்லை?
இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

     இதுவரை:  24326899 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2035 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com