அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 26 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஏ.பி.ஜே அப்துல் கலாம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கு.வீரா  
Friday, 03 August 2007

இரண்டாயிரத்து இருபதில்
இந்தியா வல்லரசு
இதுதான் உங்களின்
இலட்சிய மூச்சு
உங்கள்
தேசியப் பற்றுக்கு
முதல் வணக்கம்.
 
மக்களை நேசித்து
மக்களை கவர்ந்த
முதல் குடிமகன்
நீங்கள் மட்டுமாம்
செய்திகள் சொல்கின்றன.
 
ராமேஸ்வர வீதிகளில்
பத்திரிகை வீசிய
கைகள்
ராஷ்டபதிபவனில்
பல ஒப்பங்களை
போட்டிருக்கின்றன.
 
உழைப்பிற்கு
உருவம் வைத்தால்
அது அதிகம்
உங்களைப்போலிருக்கும்.
 
அல்லாஹ்வின்
கருணைப் பார்வையில்
நீங்கள்
எல்லோரையும் பார்ப்பதாய்
எல்லோரும் சொல்கிறார்கள்.
 
புத்தகம்தான்
நண்பன் என்று
நீங்கள் வாழ்ந்ததாய்
பல புத்தகங்களில்
குறிப்புண்டு.
 
~~அக்கினிச்சிறகுகளில்||
உங்கள்
பீனிக்ஸ் முயற்சியை
பெருமையாய் படித்தோம்.
 
பதவி முடிந்த
மறுநாளே மாணவர்க்கு
பாடங்கள் போதிக்க வந்த
புரட்சித்தீ நீங்கள்.
 
ஆனாலும் உங்களிடம்
ஒரு
வரலாற்றுக் கேள்வி?
 
ஒரு அணுவிஞ்ஞானியாய்
அமெரிக்காவரை
பேசிய உங்களால்
ஒரு தமிழனாய்
ஈழத்தமிழரைப்பற்றி
ஏன் பேசமுடியவில்லை?
 
இது
கலாமுக்கான
காலத்தின் கேள்வி?.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 
 


     இதுவரை:  24807079 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4169 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com