அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 04 December 2023

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


விடிவை நோக்கி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஆயிஷா - ஸ்கந்தபுரம்  
Friday, 10 August 2007

நடை எமக்கு பழகிப் போன ஒன்று
நான் நடக்க என்னுடன்
கூடவே நடந்தாள் அவளும்
நடந்தோம் நடந்தோம்
நாதியற்றவர்களாய் நடந்தோம்.

கற்கள், முட்கள், கரடுமுரடு
நிறைந்த பாதைகள் எல்லாம்
தாண்டி நடந்தோம் வெந்து
போன அவளது கால்கள்
வெதும்பித் தவித்தன.

ஆனாலும் நடையோ
நாதியிழக்கவில்லை.
நடந்தோம் நடந்தோம்
தூர நடந்தோம்.

எதற்காக நடக்கின்றோம்
ஏன் நடக்கின்றோம் என்று
புரியாமல் நாம்
நடந்து கொண்டேயிருந்தோம்.

என் அருகில் என் அவள்
இருகின்றாள் என்ற துணிவு
என் அவள் விழித்துக் கொண்ட
வேளையில் மனக்கதவை
திறந்து வெளியே வந்தாள்.

நடையின் வேகம் குறைந்தது
தூரங்கள் குறுகின
தடைகள் உடைத்தெறியப் பட்டன…

தடைகள் யாவும் பஞ்சு
மெத்தைகளாயின……
இலக்கு என்பது தொலைவில்
இல்லையென திடம் கொண்ட மனது
மீண்டும் நடக்கலானது
விடிவை நோக்கி
நடை எமக்குப் பழகிப் போனவையே…
       
 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  24326885 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2026 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com