அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 04 November 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எமை இழக்க நேர்ந்தாலும்..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Tuesday, 28 August 2007

இழப்பதற்கோ அடிமைவிலங்கு அன்றிவேறு எதுவுமில்லை
எடுப்பதற்கோ விடுதலையுரிமை அன்றிவேறு எதுவுமில்லை
அமைதிப்புறா பறக்கும்போது அதையழிக்கும் கழுகைவெல்ல
எமையிழக்க நேர்ந்தாலும் இணைந்திருப்போம் தோழர்களே!
தோழர்களே!.. தோழர்களே!...

ஈழம் எமது நாடுபெறும் நாள்வரையும் போரிடுவோம்!
நாளை எமது நாட்டில் நாங்கள் ஆடிப்பாடி சேர்ந்திருப்போம்..
                                                - ஈழம் எமது

உழைக்கும் மக்கள் உரிமைகாத்து
உழவும் தொழிலும் கல்விபேணி
ஏற்றத் தாழ்வு எம்ககுள் இல்லை
என்று எமது மக்கள் கூறும்..     

                                                - ஈழம் எமது

கடந்துபோன நாளில் நாங்கள் சிறையில் இருந்தோம்
நாளை நாங்கள் மரணம் காட்டும் சிறையில் இருப்போம்
இடையில் நாங்கள் பணிமுடிப்போம்
எதுவரினும் முறியடிப்போம்
ஈழம் எமது சிந்தனை
எமக்கு வேண்டும் சமன்நிலை - என்பதற்காய் ஒன்றுசேர்ந்து..
                                                          - ஈழம் எமது

இரும்பு போன்ற கரங்கள் ஒன்று சேர்வது உண்மை!
அரும்பி உதயமாகும் ஈழ விடுதலையும் உண்மை!
திரும்பி ஒடிப் பழக்கமில்லை கருவி வீழ விடுவதில்லை
வருக வருக மக்கள் திரண்டு வருக வருகவே!

ஈழம் எமது நாடுபெறும் நாள்வரையும் போரிடுவோம்!
நாளை எமது நாட்டில் நாங்கள் ஆடிப்பாடி சேர்ந்திருப்போம்..

01-04-84  சென்னை
ஈழம் இதழில் வெளிவந்தது.
இதுவரை வெளிவந்த எனது தொகுப்புகளில் இடம்பெறாதது.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  25969932 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6425 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com