அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 14 June 2025

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மனசின் வழி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நளாயினி  
Tuesday, 25 September 2007

இரவின் நிழலாய்
நீள்கிறது விழிப்பு.

கதவுகளற்ற
யன்னல் கம்பிகளினூடே
ஒளிரும் விழிகளுடன்
கரும் பூனை ஒன்று
பாய்ந்து மறைகிறது.

கண்களை மூடுகையில்
இனம்காணமுடியா
சின்னதும் பெரியதுமாய்
மீன்குஞ்சுகள்
நீந்திப்பரவுகிறது.

குருவி ஒன்றின்
கீத ஒலி
ஸ்வரசச்ரமாய்
இறங்குகிறது உடலுள்.

உணர்வுகள் தோறும்
மெதுமெதுவாய்
பூக்கள் முகையவிழும் ஓசை

எரிவுடன்
விழிவழியே
திரள்கிறது கண்ணீர்.

போர்வையை
ஒருக்கழித்து எழும்புகையில்
வானத்தில் விடிவெள்ளி.

சூரியன் தனது பயணத்திற்காய் மீண்டும்.

10- 08-2007


     இதுவரை:  27040660 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3926 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com